புதன், 2 நவம்பர், 2016

அன்று களத்திலவன் இன்று மூலையில் இவள்


காதலனை களத்திலே
அனுப்பிவிட்டு காதை
சிதறடித்துப் போகும்
சன்னச் சத்தங்களில் தன்
பிராணனை ஏத்தி இறக்கி
எறிகணைகள் சிதறும் வேளை
தன் உயிரை காலனிடம்
கொடுத்து வாங்கிய
தமிழச்சியர்
உயிர் பயமின்றி துணிந்து
நின்றதே அவன்
மரண சேதி அறிந்துதான்

வித்துடலை காணாத கண்கள்
எதற்கு
அவன் புதையுண்ட மண் வாசனை
நுகரா மூக்கெதற்கு
பூவுடலை தாங்காத கைமெதற்கு
உத்தமன் கரு சுமக்கா வயிறும்
எதற்கு
அவன் திசை நோக்கி நடக்கா
காலெதற்கு
அவனை சுமந்து இன்று
மட்டும் வாழும் இதயம்
போதும் என

மூலையில் முடங்கி கிடக்கும்
ஒரு போராளியின் காதலி
ஈழநிலா

வியாழன், 24 மார்ச், 2016

நாம்_தமிழர் திருநங்கை தேவி சமூக நலப்பணியாளர்

தாயின் கடைசி சொட்டு பாலை உறுஞ்சி தந்தையின் கடைசி சொட்டு இரத்தத்தையும் குடித்துவிட்டு அவர்களை தெருவில் விட ஆதரவற்ற அத்தாய் தந்தையர்க்கு தான் தாயாய் மாறி தாய் மடி எனும் அறக்கட்டளை கொண்டு சமூகத் தொண்டு ஆற்றி வருகிறார் இந்த இனிய தமிழச்சி.

திருநங்கைகளை சமூகம் பல விதமாய் பார்க்கின்றது. பிச்சை எடுப்பவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் ஆண்களிடம் தகாது நடந்து கொள்பவர்கள் என்றெல்லாம் பார்கும் சமூகம் ஏன் சமூகப்போராளியாக பார்க்க மறுக்கின்றது.

ஒதுக்கப்பட்ட சமூகத்தின் ஓங்கி ஒலிக்கும் மணி இவள். இவள் ஓசை கேட்டு கண் விளிப்பீர் சமூகமே.

நாம் தமிழர் இதுவே விடியாத தமிழர் வாழ்வின் விடிவெள்ளியாய் உதித்துள்ளது. ஆரியம் திராவிடம் சிங்களம் என அடிப்பட்டது போதும் என பொங்கும் ஒரு தமிழின் குரல் இது. தன் முதல் ஓட்டத்திலேயே திருநங்கையருக்கும் அரசியல் பந்தயத்தில் வாய்பளித்து தமிழ்த்தேசம் உதிக்க பங்கு கொடுத்த அண்ணன் சீமானுக்கு முதல் நன்றிகள்.

ஆர் கே நகர் தொகுதி வேட்பாளர் திருநங்கை தேவி அவர்களை ஆதரிப்போம். ஜெயா அம்மா போன்று இந்த அம்மாவுக்கு சொத்துக் குவிக்க வேண்டிய தேவை இல்ல.

தனக்கு இருக்கிறவற்றையே இல்லாத முதியோரோடு பகிர்ந்து வாழும் இவள் போன்ற தாயை தேர்ந்தெடுப்போம். வாய்ப்பளிக்க வாக்கிளிப்பீர்

#ஈழநிலா

வியாழன், 18 பிப்ரவரி, 2016

சாதிக்க பிறந்தவர்கள் - திருநங்கை ஸ்வேதா

இன்று பல வழிகளிலும் திருநங்கைகள் ஏதோ ஒரு விதத்தில் சாதித்து கொண்டே வருகிறார்கள்.சமூகத்தின் ஏளன பார்வையும் பேச்சுக்களையும் தாண்டி எழுத்து,அரசியல்,மருத்துவம்,திரைப்படத்துறை என்று ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் இருபை தக்க வைத்து சாதித்து காட்டி வருகின்றனர்
அந்த வகையில் சமூக சேவையில் தன்னை இணைத்து கடந்த மூன்று வருடங்களாக பல விதமான சோதனைகள், ஏளனங்கள், சாடல்கள் எல்லாவற்றையும் கடந்து சாதித்து காட்டியுள்ளார் திருநங்கை ஸ்வேதா வாழ்வே போராட்டாமாகிய போதும் தன் அமைதிப் புன்னகையில் அவற்றை உடைத்து சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்த அற்புதவரத்தி இவர். இவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தன் மூன்று அகவைகளையும் தாண்டி தன் சேவையை மாற்றுப்பாலினத்தவர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை நிறைவேற்றி வருகின்றது சாத்திக்க பிறந்தவர் (Bron2win) தொண்டு நிறுவனம்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பயனடைந்த திருநங்கைகள், பெண்கள், மாற்றுதிறனாளிகள் ஏராளம். ஸ்வேதாவின் சேவை மனபாங்கை கண்டு அவரோடு தன்னை இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர்கள் பலர்.
எந்தவொரு தனி எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் சேவையை நிறைவேற்றி வருகின்றார். சாதிக்க பிறந்தவர்கள் தொண்டு நிறுவனத்தால் வருடம் தோறும் நாட்காட்டி வெளியிடப்படும். நாட்காட்டியை ஆளுக்காள் வெளியிடுறாங்க தானே என்று நினைக்க வேண்டாம். இதில் என்ன பிரதானம் என்றால் இந்த நாட்காட்டி திருநங்கைகளின் புகைப்படங்களை தாங்கி அவர்களை பாத்திர பொருளாய் கொண்டு அவர்களின் சாதனைகளை பாராட்டும் விதமாக இந்த நாட்காட்டிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதையும் ஓர் சாதனையாக்கி சாதித்துள்ளார் ஸ்வேதா.
தான் மட்டும் சாதித்து காட்டியது இல்லாமல் வளர்ந்து வரும் இளம் திருநங்கை சாதனையாளர்களுக்காக சாதிக்க பிறந்தவர்கள் அமைப்பின் மூலம் வருடம் தோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் சிறப்பான நிகழ்வும் இடம்பெற்று வருகின்றது. இது சாதனையாளர்களுக்கு வளர்ச்சி படிகட்டாகவும் இன்னும் சாதிக்க துடிப்போர்க்கு ஊந்து சக்கியாகவும் இருக்கின்றது.
இவ்வாறு தொடர்ந்து இவர் சேவை நம் சமூகத்திற்கு தேவை. தானும் சாதித்து மற்றவர்களையும் சாதிக்க வைக்கும் மனம் இவரின் தனி பண்பு. என்றும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். ஸ்வேதாவுக்கும் அவரின் சாதிக்க பிறந்தவர்கள் அமைப்பிற்கும்
***ஈழநிலா***


செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

மீண்டும் வந்தேன்

வணக்கம் உறவுகளே மிக நீண்ட இடைவேளையின் பின் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வின் பல போராட்டங்கள் கண்ணீர்களை அடுத்து. எஸ்தர் இப்போது ஈழநிலாவாக இதயம் பேசுகிறது இப்போது நிலாவின் புலம்பலாக உருமாறி சந்திக்கிறது. மீண்டும் என் எழுத்துக்கள் இணையத்தில் உலாவர இருக்கிறது. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் - ஈழநிலா

திங்கள், 3 டிசம்பர், 2012

ரேவதி அம்மா....

மிக நீண்ட நாள் இடை வேளையின் பின் என் பிளாகர் உலகிற்குள் கால் பதித்துள்ளேன். தோழர்களே தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்.

நான் இது வரைக்கும் பல எழுத்தாளர்களின் நுால்களை படித்துள்ளேன். சிலரின் எழுத்துக்கள் என் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. உதாரத்திற்கு ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனின் ஆத்மாவின் கதறல் நுாலினை குறிப்பிடலாம். ஆனால் இது வரைக்கு இரண்டாம் பெண் வர்கத்தை (திருநங்கைகள்) சார்ந்தவர்கள் எழுதிய நுால்களை படிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்கள் எழுத்துக்களில் உள்ள வலிகளை புத்தக விமசகர்கள் தங்கள் பிளாக்கரில் விமர்சித்ததை வைத்து அறிந்தேன் அதிலிருந்து எப்படியாவது படித்து விடவேண்டும் அந்த புத்தகங்களை என்று எனக்கு பேராசை இருந்தது.


இவற்றில் கூட திருநங்கை ரேவதி அம்மா எழுதிய  “உணர்வும் உருவமும்“ என்னை பெரும்பாலும் ஈர்த்தது. இந்த புத்தகத்தை இலங்கையில் தேடாத இடமே கிடையாது.

இப்புத்தகத்தை எப்படியாவது படித்துவிடும் ஆவலில் இருந்த போதுதான் முகபுத்தகத்தில் ரேவதி அம்மாவுடைய ரசிகர் பக்கத்தை கண்டேன். அதற்கு விருப்பத்தை கொடுத்து விட்டு ஒரு குறுஞ் செய்தியையும் அனுப்பினே். அதற்கு அந்த பக்கத்தை நடத்தும சகோதரி எனக்கு சல்ல பதிலை தந்தார். ரேவதி அம்மாவுடைய தொலைபேசி இலக்கத்தை கூட எனக்கு கொடுத்தார். நேரம் தாமதியாமல் உடனே தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு தன்னுடை அடுத்த வெளியீடான வெள்ளை முடி புத்தகத்தை தபால் மூலம் அனுப்புவதாக கூறினார் மிக்க சந்தோஷம் எனக்கு . இப்போதுதான் காத்திருந்ததற்கு பதில் கிட்டியது.

ரேவதி அம்மாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.......                                          நான் பேசியதிலிருந்து அவர் பழகுவற்கு இலகுவானவர். இவர் சநதோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நவரசா திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் பின் தெனாவெட்டு திரைப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடிகை, எழுத்தாளர். சிறந்த சமூக நல ஆர்வலர்.

--- எஸ்தர் சபி----

வெள்ளி, 2 நவம்பர், 2012

என் கணவன் என் தோழன்கடந்த 29ம் திகதி (திங்கட் கிழமை) விஜய் தொலைக்காட்சியில் இரண்டு புதிய நெடுந் தொடர்கள் அறிமுகமானது. 01.என் கணவன் என் தோழன் 02.என் தங்கை. இவற்றில் என் கணவன் என் தோழன் தொடங்கிய முதல் நாளில் இருந்து மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

கதைக் கரு ஜான்சி ராணி மாதிரி தீமைகளை கண்டால் தீண்டாமை என் கருதும் நாயகி. அதற்கு உறுதுணையான தந்தை, இதனால் மகளுக்கு ஏதும் நடந்திடுமோ என் அஞ்சும் தாய். அதற்கிடையில் பெரிய பொலிஸ் ஆப்பீசர் ஆக கனவு காண்கிறாள் நாயகி சந்தியா.

இவளுக்கான கணவன் எப்படி இருக்க வேண்டும் என திட்டம் தீட்டுகிறான் சந்தியாவின் அண்ணா. அவளுக்கு வரபோகிறவனோ. வெறும் இனிப்பு தயாரிப்பவன். கோபக்கார மாமியார்.

இப்படி இருக்க இவளின் ஜ ஏ எஸ் கனவு கணவனால் நிறைவேறுமா???

புதன், 3 அக்டோபர், 2012

உலகியே யாருடைய கவிதைகள் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டதென தெரியுமா?

அறிந்ததும் அறியாததும் 


உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை எத்தனையோ கவி மேதாவிகளை சந்தித்து விட்டது. ஆனாலும் சிலருடைய கவிதைகள் குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு மாத்திரம் சொந்தமானவையாக இருக்கும்.

அவ்வாறுள்ளவைகள் சில மதங்களுக்கு சொந்தமானவையாக இருக்கும். அப்படிப்பட்டதே யூத அரசனான தாவீது என்பரின் கவிதைகள். உலகிலேயெ அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நுால் எது என்று கேட்டால் அது கிறிஸ்தவர்களின் புனித நுாலான வேதாகமம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த நுாலில் சங்கீதங்கள் அல்லது திருபாடல்கள் என்ற நுால் தொகுதி உண்டு இதை எழுதியவர் அரசர் தாவீது. அதனால் இவருடைய கவிதைகளே அனேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதென்பது கண்கூடு. இவர் ஓர் இசைக் கலைஞர் அது மட்டுமல்லாது ஒரு போர் வீரர்.

இவர்.இறைவனின் அடியார் கூடு இவர் வழி மரபிலிருந்தே இயேசு பூமியில் பிறந்தார் என்று வேதம் கூறுகிறது. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் இறைவன் புகழ் பாடுபவையாகவும், இறைவனிடம் மன்னிப்பு கேட்பதாயும், நன்றி கூறுவதமாயும் அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட கவிஞர் உலகத்தில் வாழ்ந்தார் என்பது அவருடைய கவிகள் கிறிஸ்தவ உலகிற்கு சொந்தமானதாலோ என்னவோ மறைக்கப்பட்டு விட்டது.