திங்கள், 21 நவம்பர், 2011

தாய்லாந்தும் திருநங்கைகளும்


தாய்லாந்தை பொறுத்த வரை திருநங்கைகள் நாட்டின் கண்கள்.திருநங்கைகள் சட்டரீதியாக பெண் என்ற அங்கீகாரத்தோடு வாழும் நாடு இது.இங்கு திருநங்கைகளுக்கென்று பெரிய மரியாதையே உண்டு.பால் மாற்று அறுவை சிகிச்சைக்கு பெரிதும் பகழ் பெற்ற நாடு் தாய்லாந்துதான்.இந்நாட்டு திருநங்கைகளுக்கும் பெண்களுக்கும் சிறிய வித்தியாசம் என்பதே கிடையாது

"வெயினோ ஆம்புரேஜன் அன்ட் பிளாஸ்தே"என்பது அந்த அறுவை சிகிச்சையின் பெயர் .திருநங்கைகள் திருமணம் செய்து குடும்பங்களுடன்.அமைதியாக வாழும் நாடு தாய்லாந்துதான்.இவர்கள் சக பெண்களைப் போன்றே.வாழுகின்றனர்.பிறப்பில் ஆண் என்பதற்கு எந்தவொரு சாடசியும் இல்லாமல் வாழ்கின்றனர்.பல ஜரோப்பிய நாடுகள் திருநங்கைகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கிய போதும் தாயலாந்து மட்டுமே அரசியல் யாப்பில் அவர்களின் உரிமைகள் பற்றி பேசியுள்ளது


தாய்லாந்தை போன்றே ஒவ்வோரு நாடும் இருந்தால் திருநங்கைகள் சமுக அடக்கு முறைகளில் இருந்து தப்பி வாழலாம்.பிச்சை எடுத்தல் பாலியல் தொழிலில் ஈடுபடல் என்பது அவர்கள் தானாக எடுத்த முடிவு கிடையாது.சமுகம்தான் அவ்வாறான நிலைக்கு தள்ளியது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது அல்லவா தோழர்களே?????????

நம் நாடும் தாய்லாந்தை போல் மனித நேயங்களை மனித விழுமியங்களை கடைபிடித்தால் மிக்க நன்றல்லவா தோழர்களே?????????????  

புயலாய் எழுவாய் திருநங்கையே....


போராட்டமோ புது வான் பறவைகளே
நாள் யாவுமே ஜெயமாகும் தேதியிலே
உன் வேதனைகள்
பனி போலே நீங்கி விடும்
உன் தேவைகளை
வரும் காலம் மீட்டு தரும்
விளி நீரினில் கரைந்திடும்-நீயே
விடை தேடிட எழுந்திட வேண்டும்
புகை நிறைந்திடும் அடுக்கரை போக்கி
உலகை வென்றிட எழுந்திட வேண்டும்
உலகமே உன்னோடு சேருமே
திரு பெண்னே வா வா


நீ பூ இல்லையே
பூகம்பம் வேர் விடும் வேளையிலே
நீ தேன் இல்லையே
தேள் வந்து தீண்டும் சமுகத்திலே
நீ மீன் இல்லையே 
ஆண் போடும் துாண்டிலில் சேர்ந்து விட
நீ தேரில்லையே
பல ஆண்கள் கை தொட
நீ தோன்றிய பூமியே
உன்னை நீக்குவதா?
கண்ணீரில் நீ தீட்டிய-கோலம்
இப்போது மாறிடவே
விடை கண்டிடவே
எழுவாய் எழுவாய்
துயரை கழைவாய்

ஊராளவே நாடாளவே
பெண்ணாக நீ துணிந்திடும் வேளையிலே
உன் கணணிலே நீர் சிந்தியே
நிற்கின்றாய் நாளும் பூமியிலே
தோற்காமவே முன்னேறுவாய்-என
உலகு வாழத்திடும் சூழல் வரும்
சோகங்களை நீ துாக்கியே
கொஞ்சாதே வாழக்கை வீழ்ந்து விடும்
போராட நீ துணியாமல்
காலம் மாறாதே
தீராத வேதனையில்லை
பூவே வாடாதே
நிலை மாற்றிட
துயர் நீங்கிட
எழுவாய் எழுவாய்
புயலாய் எழுவாய்

விளித்தெழு திருநங்கையே


கேளடி திருபெண்னே...
உனக்கொரு புதுப்பாட்டு
புறப்படு
நீதியை கேட்டு
உன் சிறகினை விரித்திடு கிளியே
நீ பறந்து செல்லடி வெளியே
உலக்தில் உனக்கோர்-இடம் கேளு
பல தடைகள் உள்ளதென
நதிகள் தேங்கி கிடப்பதில்லை
நீ நதி திருநங்கையே பாய்ந்தோடு..

பிறப்பில் வந்த லிங்கம்
சிதைந்ததென்ன கண்னே
யோனி வாசல் திறந்து
அதிசய பெண்ணானாய் நீ..
மூங்கில்கள் வலி பொறுக்கும் 
போதுதான்-அவை 
புல்லாங் குழலாக இசை படிக்கும்
யாருக்கு இங்கே கஸ்டங்கள் இல்லை
ஈசல்கும் கூட ஒரு நாள் வாழ்க்கைதானே
சோகங்கள் கண்ணீரில் கரையாதம்மா
எப்போதும் அமைதி உதவாதம்மா
உள்ளங்கை நடுவே நம்பிக்கை வைத்தால்
வேதனை நம்மை வெல்லாதம்மா


முட்டி வந்த கண்ணீரை 
மூடி மூடி வைத்து
முந்தானைக்குள் -நீ
மூக்கை சிந்தி வாழ்கிறாயம்மா
வாழ வந்த பின்னே
சோகம் என்ன பெண்னே
எப்போதும் கடை கேட்டல்
உதவாதம்மா
இந்நாளில் அகிம்சை
விடியாதம்மா
வளையல் விற்று
வாளை வாங்கி போராடம்மா
மண்ணின் மேலே காலை வைத்து 
விண்ணின் மேலே கண்ணை வைத்து
விண்ணை மண்ணை வெற்றி கொள்ள
வா வா வா வா வா வா வா

இலங்கை திருநங்கைகள்

இலங்கை நாட்டை பொறுத்த மட்டில் திருநங்கைகள் என்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள்.ஏனென்றால் இங்கு ஆணும், பெண்ணுமற்ற ரீதியில் உள்ளவர்களையோ, அல்லது திருநங்கைகளையோ, அல்லது ஆணாக இருந்து ஒரு வகையில் பெண்மை கலந்த சாயல் கொண்டு வெட்கப்படும் நபரையோ [கோத்தி]’பொண்ஸ்’ என்று தான் கேலியாக அழைத்து மகிழ்கிறது எங்கள் சமூகம். இதனைத் தட்டிக் கேட்டாலோ ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள் என்று கேட்டாலோ’ நீ என்ன அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் ஆளோ’ என விளிக்கிறது இம் இனம்.
இந்த நிலையினை, இத்தகைய மனங்களினை எமது சமூகத்திலிருந்து எவ் வகையில் மீட்டெடுக்க முடியும்? 

இதற்கு காரணம் ஒரு வகையில் திருநங்கைகளாய் கூட இருக்கலாம். ஏனென்றால் இங்கு இவர்கள் தங்களை பற்றி விளிப்படைய செய்ய எந்ந முயர்ச்சியும் எடுத்ததாக தெரியவில்லை.அரசாங்கத்துக்கும் அறியபடுத்தியதாக தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க சமூகம் இவர்களை ஓரின சேர்க்கையாளர்களோடு ஒத்து பார்ப்பது இன்னும் வருந்த தக்க விடயம்.எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாம் பெண்கள் போன்று வாழும் இவர்கள் போலியான வாழ்வையே வாழ்கின்றனர்.

இதில் இன்னும் என்ன கொடுமை என்றால் பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் சிலர் பெண்ககை மணந்து தங்கள் வாழ்வையே தொலைத்து தற்கொலை கூட செய்துள்ளனர்.இது நானே நேரில்  கண்ட சாட்ச்சி.

இது பொதுவான நிலைமையே சிங்கள பிரதேச திருநங்கைகளை எடுத்து கொண்டால் அவர்கள் பாஃப் டிஸ்கோ டான்ஸ் என்றும் அழகு நிலையங்கள் நடாத்தியும் தம் வாழ்ழவ கழிக்கின்றனர். சிலவேளைகளில் ஆண்களால் துன்புறுத்தப்பட்டும் திருநங்கைகளையும் நான் சந்தித்துள்ளேன்

ஈழத்தமிழ் திருநங்கைகளின் நிலை பரிதாபம் சமூக ஒடுக்குமுறைகள் பலவிதமான கேலிப்பெயர்கள்.வீதிகளில் அவமானப்படுத்தப்படல் அடித்து உதைக்கப்படல் இரானுவ வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் என் பல வேதனைகளை தாங்கி வாழகிறார்கள்.

தங்கள் விடுதலை தங்கள் கையில் என சில திருநங்கைகள் உணர்ந்து அதற்கான முயர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு ஒவ்வோர் திருநங்கைகளும் உணர்ந்து போராடினால் பேரொளி காணலாம்


by-எஸ்தர்