திங்கள், 21 நவம்பர், 2011

இலங்கை திருநங்கைகள்

இலங்கை நாட்டை பொறுத்த மட்டில் திருநங்கைகள் என்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள்.ஏனென்றால் இங்கு ஆணும், பெண்ணுமற்ற ரீதியில் உள்ளவர்களையோ, அல்லது திருநங்கைகளையோ, அல்லது ஆணாக இருந்து ஒரு வகையில் பெண்மை கலந்த சாயல் கொண்டு வெட்கப்படும் நபரையோ [கோத்தி]’பொண்ஸ்’ என்று தான் கேலியாக அழைத்து மகிழ்கிறது எங்கள் சமூகம். இதனைத் தட்டிக் கேட்டாலோ ஏன் அவ்வாறு அழைக்கிறீர்கள் என்று கேட்டாலோ’ நீ என்ன அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் ஆளோ’ என விளிக்கிறது இம் இனம்.
இந்த நிலையினை, இத்தகைய மனங்களினை எமது சமூகத்திலிருந்து எவ் வகையில் மீட்டெடுக்க முடியும்? 

இதற்கு காரணம் ஒரு வகையில் திருநங்கைகளாய் கூட இருக்கலாம். ஏனென்றால் இங்கு இவர்கள் தங்களை பற்றி விளிப்படைய செய்ய எந்ந முயர்ச்சியும் எடுத்ததாக தெரியவில்லை.அரசாங்கத்துக்கும் அறியபடுத்தியதாக தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க சமூகம் இவர்களை ஓரின சேர்க்கையாளர்களோடு ஒத்து பார்ப்பது இன்னும் வருந்த தக்க விடயம்.எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாம் பெண்கள் போன்று வாழும் இவர்கள் போலியான வாழ்வையே வாழ்கின்றனர்.

இதில் இன்னும் என்ன கொடுமை என்றால் பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் சிலர் பெண்ககை மணந்து தங்கள் வாழ்வையே தொலைத்து தற்கொலை கூட செய்துள்ளனர்.இது நானே நேரில்  கண்ட சாட்ச்சி.

இது பொதுவான நிலைமையே சிங்கள பிரதேச திருநங்கைகளை எடுத்து கொண்டால் அவர்கள் பாஃப் டிஸ்கோ டான்ஸ் என்றும் அழகு நிலையங்கள் நடாத்தியும் தம் வாழ்ழவ கழிக்கின்றனர். சிலவேளைகளில் ஆண்களால் துன்புறுத்தப்பட்டும் திருநங்கைகளையும் நான் சந்தித்துள்ளேன்

ஈழத்தமிழ் திருநங்கைகளின் நிலை பரிதாபம் சமூக ஒடுக்குமுறைகள் பலவிதமான கேலிப்பெயர்கள்.வீதிகளில் அவமானப்படுத்தப்படல் அடித்து உதைக்கப்படல் இரானுவ வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் என் பல வேதனைகளை தாங்கி வாழகிறார்கள்.

தங்கள் விடுதலை தங்கள் கையில் என சில திருநங்கைகள் உணர்ந்து அதற்கான முயர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு ஒவ்வோர் திருநங்கைகளும் உணர்ந்து போராடினால் பேரொளி காணலாம்


by-எஸ்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக