சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த 2011 க்கு விடை கொடுத்து நாளை மலரப்போகும் 2012 ஜ வரவேற்க ஆயத்தமாவோம்.இந்த ஆண்டு நம் அனைவருக்கும் துக்கத்தையும் சந்தோசத்தையும் வாரிதந்திருக்கலாம்.கடந்தவை கடந்ததாகவே இருக்கட்டும் நாளை பிறக்கப்போகும் ஆண்டு நம் அனைவரினதும் கனவுகளுக்கு விடை கொடுக்கும் ஆண்டாகவும் எம் லட்சியங்களை நிறைவேற்றும் ஆண்டாகவும் அமைய என் வாழ்த்துக்கள்.

2012 உலகம் அழியப்போகுது என்றெல்லாம் பல கதைகள் நம்மை உலுப்பினாலும் நாம் சோர்ந்து போகாமல் எம் புதிய வாழ்வை ஆரம்பிப்போம்.உலகம் அழிய இன்னும் பில்லியன் வருடங்கள் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.அது இருக்கட்டும்..... உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 

உலகின் மிக நீளமான பெயரைக்கொண்ட நோய் முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களுக்கு தாக்கியுள்ளது..

ன்னியில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.இலங்கைக்கு இது வரை அறிமுகமில்லாத புதிய வகை சுவாச நோய் இது என்றே யாழ்.கிளிநொச்சி.முல்லைதீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய நிபுணர் ஜமுனானந்தா எச்சரித்துள்ளார்.

இறுதிப்போரில் சனத்தொகை அதிகமான பகுதிகளில் வீசப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை தாக்குதலால்தான் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எறிகணை வீச்சின் போது கிளம்பிய மணற்துகள்களும் வெடிமருந்து துகள்களும் அம்மக்களின் உடம்பில் அவர்கள் உடம்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அவர் நனோ தொழில்நுட்பம் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனை ஆங்கிலத்தில் PNEUMONOULTRAMICROSCOPICSILICOROLCANOCINIOSIS அழைக்கிறார்கள்.45 எழுத்துக்களை கொணட உலகின் மிக நீளமான சொல்லாக இந்நோயின் பெயர் காணப்படுகின்றது.எம் தமிழ் மக்கள் இன்பமாக வாழ வழியே இல்லையா??? தினம் ஏதோ பிரச்சினைகள்தானே...........

புதன், 28 டிசம்பர், 2011

உசிலம் பூவின் மருத்துவம்

வேறு பெயர்-ஊன்சி மரம்
தாவரவியல் பெயர்-Albizia odoratissima
ஆங்கில பெயர்-black s/r/s


து நம் நாடுகளில் விளைய கூடிய அருமையான மரமாகும்.இதன் இலை, பூ,விதை,எண்ணெய் போன்றன மருந்துக்காக பயன் படுகின்றன.இது சுரம்,கண்நோய்கள்,செரியாக்கழிச்சல்,அடிதள்ளல்,போன்ற நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது.

மருத்துவப் பயன்கள்
தோல் நோய்க்கு
இதன் பூ மிகவும் குளிர்ச்சி தன்மை உடையது.இதனை ரைத்து தோலை பற்றி வரும் நோய்களுக்கும் வீக்கங்களுக்கும் பூசினால் அவை குணமாகும்.பூவுடன் சக்கொன்றை வேர்ப்பட்டையை சேர்த்துபசும்பால் விட்டு அரைத்து தடவி வர தேமல் நோய் குணமாகும்.
மூளைக்குளிர்ச்சிக்கு
உசிலம் பூக்களுடன் அதன் இலைகளையும் உலர்த்தி நன்றாக காயவைத்து கொண்டால் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சிகைக்காய்க்குப் பதிலாக இதனை பயன்படுத்தி கொண்டால் மூளை களிர்ச்சி பெறும்.
கண்நோய்க்கு.
பூவின் சாறு 01 தே கரண்டி இலைகளின் சாறு 01 தே கரண்டி இரண்டையும் கலந்து காலை மாலை பருகலாம்.

திங்கள், 26 டிசம்பர், 2011

3 நிமிடம் ok

சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல.03 நிமிடம் கூட போதுமானதென்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.நீண்ட நேரம் நீடிக்கும் உறவே சிறந்த உறவென்று பெரும்பாலான ஆண்கள் நம்புகின்றனர்.அவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகின்றது.இந்த பின்னனியில் இப்போது வெளியாகி இருக்கும் ஆய்வின் முடிவு முக்கியமானது.

டாக்டர் எரிக் கோர்ட்டி என்ற அமெரிக்க நிபுணர் தலமையிலான் குழு இந்த ஆய்வை நடத்தியது.அமெரிக்கர்களும் கனடியர்களும் இதன் மாதிரிகளாக எடுத்து கொள்ளப்பட்டனர்.7 முதல் 13 நிமிடம் வரையிலான உறவு போதுமானதென அவர்கள் கூறினர்.ஆனால் 3 முதல் 7 வரையான நிமிடங்கள் போதுமெனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேர உடல் உறவை விரும்புகின்றனர்.ஆனால் குறைவான நேரம் போதும் என்கின்றனர் பெண்கள்.இந்த அனுபவத்தை நேரத்தால் அளவிடுவது முறையல்ல என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இந்த ஆய்வின் முடிவு என்னவென்றால் 3 நிமிடத்துக்கு குறைவான உறவு ரொம்ப குறைச்சல் எனவும் 7 நிமிடத்துக்கு அதிகமான உறவு அதிகம் எனவும் மதிப்பிடத்தக்கதாக அமைகின்றது.எத்தனை நிமிட உறவு சிறப்பானதென்பதை தீர்மானிக்க இருக்கும் உலகளாவிய ஆய்வின் முதல் கட்டம் இது..

முடிக்கான அழகு குறிப்புகள்

முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு பிடி எடுத்து நீரில் வேக வைத்து அதன் பின் ஒரு நாள் கழித்து அந்நீரில் தலை கழுவி வந்தால் முடி உதிர்தல் படிப்படியாக குறையும்.

கடுக்காய் நெல்லிக்காய்ப்பொடி இரண்டையும்கலந்து இரவில் ஊற வைத்து காலையில் எலுமிச்சை சாறுடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்தல் நிற்கும்.

வெந்தயத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரம் கழித்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறையும்.

வழுக்கையில் முடிவளர
வெட்டி ரே சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறையும்.

இழநரை கறுப்பாக
நெல்லிக்காய் கறிவேப்பிலை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முடி கருமை நிறம் அடையும்.

முடிகறுப்பாக...
ஆலமரத்தின் இளவேர் செம்பரத்தம் பு இரண்டையும் இடித்து துாள் செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருமையடையும்.

செம்பட்டை முடி மாற...
கறிவேப்பிவையையும் செம்பரத்தை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் செம்பட்டை முடி மாறும்.

நரை போக்க....
தாமரைப்பூ கசாயத்தை காலை மலை குடித்து வந்தால் நரை மறையும்.
முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.

புதன், 21 டிசம்பர், 2011

திருகுறான் கூறும் திருநங்கைகள்.

இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் திருநங்கைகள் பற்றிய எண்ணங்களும் சிற்தைகளும் இருந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ள. எனினும் ஒரு சில இஸ்லாமிய சமூகம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஆனாலும் கூட ஒரு சில முஸ்லிம் சட்ட அறிஞர்களின் திருநங்கைகள் குறித்த வரைவிலக்கணம், சட்ட முடிவுகள் என்பன இன்றைய திருநங்கைகளின் வாழ்வுக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் இஸ்லாமிய உலகில் எழுப்பப்பட்டு வருகின்றன.

திருநங்கைகளின் வாழ்வு முறை, அவர்களுக்கான வாழ்வொழுங்கு, வழிபாட்டில் அவர்களுக்குள்ள இடம், அவர்களின் திருமணம், சொத்துரிமை என்று மரணம், நல்லடக்கம் குறித்தும் நபிகளின் போதனைகளை அடியொட்டி சட்ட மற்றும் சமூகவியல் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன

நபிகள் அரவாணிகளையும் ஒரு மனிதச் சமூகமாக அவர்களின் இருப்பை அங்கீகரித்துள்ளார்கள். அவர்களை வெறுக்கவோ விளிம்பு நிலைக்கு தள்ளவோ கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். அரவாணிகளை கேலி கிண்டல் செய்பவர்களுக்கு இருபது கசையடிகளை வழங்கும்படி நபிகள் உத்தரவிட்ட ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவுசெய்துள்ளார். நபிகளின் காலத்தில் அரவாணிகள் பள்ளிவாசலுக்கு வந்து நபிகளிடம் இணைந்து தொழுகை நடாத்தியுள்ளார்கள். நபிகள் தொழுகையில் வரிசைகளை அமைக்கும் போது முதலில் ஆண்கள், பிறகு சிறுவர்கள், பின்னர் அரவாணிகள், அதன் பின் பெண்கள் என சிலபோது வரிசைப் படுத்தியுள்ளார்கள். இதை வைத்துப் பார்க்கும் போது அரவாணிகளுக்கும் வழிபாட்டு சமத்துவம், ஆண் பெண் என்ற பால்நிலைக்கு இணையான முறையில் வழங்கப்பட்டுள்ளமை புலப்படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து பிற்கால சட்ட அறிஞர்கள் வழிபாட்டில் அரவாணிகளின் தலமைத்துவம் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அதில் அரவாணிகளின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெண்களுக்கு தலைமை தாங்குவதற்கான அங்கீகாரத்தை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் வழங்கியுள்ளனர். அரேபிய ஆணாதிக்கச் சமூகத்தில் இத்தகைய சமத்துவத்தை திருநங்கைகளுக்கு நபிகள் வழங்கியமை மிகுந்த சவாலுக்குரிய விடயமாகும்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

அவசர யுகத்தில் அவதியுறும் தாம்பத்தியம். பகுதி-01

காதல் திருமணம் தாம்பத்தியம் இவை எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை.இதில் தாம்பத்தியம் என்பது உடல் மனம் இரண்டுக்குமான சிகிச்சை.இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.ஆனால் இது இரண்டு மனங்கள் ஒத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்தியம் கொள்ளும் போதுதான் இது சாத்தியம் ஆகும்.

நமது கலாச்சாரத்தின் படி இரண்டு மனங்களை இணைப்பதே திருமணமாகும்.இது தாம்பத்தியத்தின் மூலம் முழுமை அடைகிறது.தாம்பத்தியத்தின் மூலம் இருவரது உணர்வுகளும் சந்தோசங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.கணவன் மனைவிக்கு இடையே தாழ்வு மனப்பான்மை கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறைக்கப்படுகின்றது.

இவ்வளவு புனிதமான இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்தியம் தற்போது மாறிவரும் உலகில் கணவன் மனைவின்கிடையில் எந்த இடத்தில் உள்ளது?அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பெயர் புகழ் பணம் சம்பாதிக்க நீண்ட துாரம் வேகமாக ஓட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேச நேரம் கிடைப்பதில்லை.அந்த நேரங்களை தொழில்நுட்பங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.

எதிர் வீட்டில் இருப்பவர்களை பற்றியோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோஎன்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை.ஆனால் தற்போது அவரவர் வீட்டில் என்ன நடக்கிறதென்பதே பலருக்கு தெரிவதில்லை.அதிகாலையிலே வேலைக்கு செல்வதும் நேரம் கழித்து வீடு வருவதும் பழக்கமாகி விட்டது.குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும் பிள்ளைகளிடம் விளையாடி மகிழவும் வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது.அதுபோலொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பி பெற முடியாதென்பதை அவர்கள் உணர்வதில்லை


காலத்தின் சூழ்நிலையால் மனிதன் இயந்திரமாகிவிட்டான்.சக்கரம் சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில் சற்று இழைப்பாறக்கூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை.இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விடயங்களை அவன் அறியாது விடுகிறான்.இதில் தாம்பத்தியமும் ஒன்று.இது மிகவும் சிந்திக்க வேண்டிய விடயம்.

கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலை தற்போதள்ளது.ஒருவர் வேலை காரணமாக வெளியூர் சென்று கொணடிருப்பதும் மற்றவர் பணியில் மூழ்கி இரவு பகல் என பாராது உழைப்பதும் சாதாரணமாகி விட்டது.இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்ககை குழந்தைகளுக்கு தரமான கல்வி  வெளிநாட்டுப்பயணம் ஆடம்பர வாழ்க்கை என அனைத்தும் கிடைக்கும். ஆனால்.............இதுதான் வாழ்க்கையா?இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? தாம்பத்திய வாழ்க்கை இதற்கு ஈடாகுமா?.....
                                                                                    மிகுதி தொடரும்...........
                                        

திங்கள், 19 டிசம்பர், 2011

இறைவன் மனிதனாக......

மண்ணில் மாந்தருக்கு செய்தி
ஒன்று வந்தது..
தெய்வம் மனித வடிவில் வந்தது.

நடுங்கும் குளிரிலே
நடுநிசி இரவிலே
கொட்டும் பனியுடன்
கொடுங்காற்று இடியுடன்
வைக்கோலில் தவழ்ந்திட்டார்


துாதர்கள் துதி பாடிட
துாயவர் யேசு அவனியில்
பிறந்திட்டார் எமக்காய்
மாமரி கன்னியன்னை
மடிமீதில் தவழ்ந்திட்டார்
மிக அழகாய்

ஆநிரை கூட்டத்தார்
துாதனவன் சொல் கேட்டு
விரைந்தேறி வந்து
கற்றை மீதில் சுருண்ட
அவரை தரிசித்தார்.


முப்பெரும் யோதிடரும்
பொன் வெள்ளி துாபத்தோடு
மூவுலகாழும் வேந்தனை
சாஸ்டாங்கமாய் வீழ்ந்து
வணங்கி சென்றனர்.

எஸ்தர் சபிநெடுந்தொடர்கள் மக்களில் ஏற்படுத்தும் தாக்கம்

இன்று மக்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடக சாதனமாக தொலைக்காட்சி விழங்குகின்றது.பல்வேறு பொழுது போக்கு சாதனங்கள் இருந்தாலும்.தொலைக்காட்சிக்கு என்று தனி இடமே உண்டு.

தொலைக்காட்சியில் பல்வேறு விடயங்கள் ஒளிபரப்பப்படுகின்ற போதும் மக்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது நெடுந்தொடர்களே இது மக்களின் வாழ்வில் பின்னி பினைந்துள்ளதென்றே கூறலாம்.இங்கு நான் மக்கள் என்று குறிப்பிட வருவது பிரதானமாக நம்தமிழ் மக்களையே.

இன்று தொலைக்காட்சியில் சன் ரி.வி, சீ தமிழ் ரி.வி, விஜய் ரி.வி, கேப்டன் ரி.வி, ராஜ் ரி.வி, ஜெயா ரி.வி போன்ற தொலைக்காட்சிகள் முன்னனியில் உள்ளன.
பலவகையான தொலைக்காட்சிகளும் பலவகையான நெடுந்தொடர்களை ஒளிபரப்புகின்ற போதும் ஒருசில தொரைக்காட்சி தொடர்கள் மட்டும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.அந்த வகையில் என் சிந்தனைபடியும் மற்றவர்களை விசாரித்தறிந்தபடியும் சன் மற்றும் சீ தமிழ் தொலைக்காட்சிகள் தறபோது முன்னனியில் இருக்கின்றன. [நெடுந்தொடர் ரசிகர்கள் எண்ணத்தை பொறுத்து

சன் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை எடுத்து கொண்டால் அனைத்தும் நேரடி தமிழ் தொடர்கள் சீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களை எடுத்து கொண்டால் அவை பிற மொழி தொடர்களிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து ஒளிபரப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பெண்களே பெரும்பாலும் நாயகிகள் இவர்கள் அனைத்தும் கற்பனை நாயகிகள்.ஆனாலும் காலத்தால் அழியாத கற்பனை இல்லாத நாயகி வீராங்கனை ஜான்சி ராணியின் வரலாறு பலரறியாத உண்மை அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை சீ தமிழ் தொலைக்காட்சியை சாரும்.ஜான்சி ராணி நிஜத்தில் எப்படி இருந்திருப்பாரோ நான் அறியேன் என்றாலும் இத்தொடரில் இப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் க்ருத்திகா என்ற நடிகை ராணியை நேரிலே எமக்கு காட்டுகின்றாள்.

இன்று பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்கள் கற்பனை தொடர்களாக ஒளிபரப்பப்படுகின்றன.எனினும் புராணங்களும்,இதிகாசங்களும்,உண்மை சம்பவங்களும் ஒளிபரப்பப்படுகின்றமையை நான் கூறியே ஆகவேண்டும். படிக்காத பாமர மக்கள் நிச்சயம் புராணங்களையோ இதிகாசங்களையோ முழுதாக கற்றிருக்க வாய்ப்பில்லை.அந்த வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற சில புராணங்களும் இதிகாசங்களும் நெடுந்தொடர்களாக ஒளி பரப்பப்பட்டன என்னும் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.இது வாழ்த்துதற்குரியதே..

எனினும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்களின் நாவல்கள் சுயசரிதைகள் போன்றன வெளியில் வராமல் தனியே எழுத்துருவில் மாத்திரம் இருக்கின்றன.நெடுந்தொடர் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தால் மிக்க நல்லதென்று எனக்கு தோன்றுகின்றது.

நெடுந்தொடர்கள் பற்றி பலரும் பலவித விமர்சனங்களை எழுப்புகின்ற போதும் பொழுதுபோக்கு என்ற விடயத்தில் நெடுந்தொடர்கள் இதவிர்க்க முடியாதவை. என்பது உண்மை.


ஆண்மை குறைவு வருமுன் காத்தல்..

இப்போதுள்ள இளையோரிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது.இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர இயங்காமல் போகும்.புகைப்பழக்கத்தை அடியோடு விட்டுவட்டால் போதும் நாளடைவில் இப்பிரச்சினை சரியாகிவிடும்.

மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளையோருக்கு மூளைசெயல் திறன் குறைவென்றே கூறவேண்டும்.இதனால் நரம்பு மண்டல கோளாறுகள் தண்டுவட கோளாறுகள் ஏற்பட்டு நாளடைவில் ஆண்மை குறைபாடு ஏற்படும்
இதனால் மது பழக்கத்தை தவிர்த்தல் வேண்டும்.

உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டமின்மை விறைப்பு ஏற்படாநிலை போன்றவை தோன்றும்.இதனால் உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்ச்சிகளை செய்து வருதல் வேண்டும்.தேவையில்லாத துாக்க மாத்திரைகள் போதைமாத்திரைகள் போன்றவற்றை தவிர்த்தல் மிக்க நல்லது.இரத்த கொதிப்பு மனநோய் ஆகியவற்றிற்கு தரப்படும் மாத்திரைகளால் ஆண்மை குறைபாடு ஏற்படும் இதனால் அவற்றிற்குப்பதிலாக மாற்று மாத்திரைகள் பாவிக்கலாம்.

இரத்தத்தில் சக்கரையளவு உயராமல் பார்த்து கொள்ள வேண்டும்.முதலிலிருந்தே சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஆண்மை குறைவு வருவதை தடுக்கலாம்.நிபுணத்துவம் பெற்ற பாலியல் மருத்துவாகள் எழுதிய நல்ல நுால்களை வாங்கிப்படியுங்கள்.இவை பாலுறவு பற்றி பயனுள்ள நல்ல தகவல்களை தரும்.அவ்வாறின்றி பொய்யான நம்பிக்கை தரும் போலிமருத்துவாகளை அணுகுவது தபால் மூலம் அவர்கள் அனுப்பும் லேகியங்களை வாங்கி சாப்பிடுவது எல்லாம் தவறானது இவை அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

சூரியகாந்திப்பூவின் மருத்துவ ரகசியம்

வேறுபெயர்-சூரியகந்தம் 
தாவரவியல் பெயர்-helianthus annus
ஆங்கிலப்பெயர்-sunflower
இது இலங்கை இந்தியா என எல்லா வகையான நாடுகளிலும் விளையக்கூடிய பூப்பயிராகும்.இதனை தோட்டங்களில் அழகுக்காக வைத்துப் பராமரிக்கின்றனர்.இப்பூ சூரியன் உதிக்கும் திசையை நோக்கிப்பூத்திருக்கும்.அதனாலேயே இதனை சூரியகாந்திப்பூ என்பர்.இப்பூக்களில் உயிர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் அதிகளவு காணப்படுகின்றன.இதன் விதைகளைக் கூட உணவுக்காகப் பயன்படுத்துவர்.
அதுமட்டுமல்ல இவ்விதையால் வாதரோகம் நீரேற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.


மருத்துவ பயன்பாடுகளாவன.சூரியகாந்தி எண்ணெய் மூலம் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும். தன்மை உண்டு மற்றும்.தலை பாரம்,தலை வலிக்கு பூக்களை துண்டுகளாக்கி நல்லெண்ணெய்யுடன் முறுகக்காய்ச்சி வடித்து தலையில் தேய்த்து வர இவை குறையும்.பூவைக் குடிநீரிலிட்டு காலை மாலை இருவேளையும் கொடுக்க நீரேற்றம் தீரும்.


                                                                                                தகவல்-வைத்திய கலாநிதி
                                                                                                திலகேஸ்வரி குமுதரன்சன்.
                                                                                                                              யாழ்ப்பாணம்.    

                                                                                                       ஆக்கம்-எஸ்தர் சபி


                                                                                                                               

சனி, 17 டிசம்பர், 2011

வன்னியில் அழகி போட்டியா? சீசீசீசீசீ

வன்னியில் யுத்தம் முடிந்தது என்ற பெயர்தான் ஆனாலும் மக்கள் தம் பழைய வாழ்க்கைக்கு திரும்பும் மனநிலையில் இல்லை.அது மட்டுமல்ல பிணநாற்றமே இன்னும் அடங்காத நிலையில் வன்னியில் அழகுராணி போட்டி வைக்க முடியு செய்திருக்கிறது இந்த சிங்கள அரசாங்கம்.

இதனை நடத்த கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.தமிழரின் கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் முகமாக நடாத்தப்படவிருக்கும் இந்த அழகிப்போட்டி குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எ.ம்.பி வினோதலிங்கம் இதனை சாடினார்.அதற்கு மகிந்த சம வீர எ.ம்.பி உங்கள் பெண்களை கிணற்று தவளைகளாகவே வைத்திருக்கவிருப்பமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்தை சீர்கெடுக்க போகும் இந்த அழகி போட்டி வன்னியி்ல் நடைபெற கூடாது என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை. இதற்கு எனது பேரொளியும் கண்டனம் தெரிவிக்கிறது..

வெள்ளி, 16 டிசம்பர், 2011

கிறிஸ்மஸ் தாத்தா

கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது கிறிஸ்மஸ் தாத்தாதான்.யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளக்கு பிரியமான இவரை சற்று ஆராய்வோம்.


துருக்கி நாட்டில் மிரா நகரில் 04ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் புனித நிக்லஸ்இவர் கிறிஸ்தவ ஆயராவார்.மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய இவர் ஏழை எளியவர்க்கு உதவுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவர் சிறு வயது முதலே தபத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாத்திரம் உணவு உண்டார்.வறுமையின் வீரியத்தையும் மக்கள் படும் துன்பத்தையும் நேரில் கண்ட அனுபவமே இவரை மனித நேயவாதியாக மாற்றியது.


ஏன் நான் இவரைப்பற்றி கூறவேண்டும் என நீங்கள் யோசிக்கலாம்.வேறொன்றும் இல்லை இவர்தான் நம் கிறிஸ்மஸ் தாத்தா..அவர் பகிரங்கமற்ற முறையில் ஏழைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.யேசு பிறப்பின் போது மூன்று மேதைகளின் பரிசுப்பொதிகளே இவரின் இந்த தாத்தா வேடத்திற்க காரணமாக அமைந்தது.ஏழைகளின் விட்டில் அவாகளுக்கே தெரியாமல் பரிசுகளை எறிந்து விட்டு வந்து விடுவார்.அழுகையுடன் தம் இரவை கழிக்கும் அந்த ஏழைகள் குதுாகல பகரலை சந்திக்க செய்த அந்த மனித நேயத்தின் தொடர்ச்சிதான் இன்று கிறிஸ்மஸ் தாத்தாவாக வளர்ந்து நிற்கிறது.


ஆசிய ஜரோப்பிய மற்றும் மேக்கத்தேய நாடுகளில் கிறிஸ்மஸ் தாத்தா


புனித நிக்லஸ் பற்றிய செய்திகள் சுபார் 16ம் நுாற்றாண்டில்தான் ரஸ்யா நாட்டில் நுழைந்தது. அவரை மக்கள் உதவியாள் என்றே அன்புடன் அழைத்தனர்.1087இல் நிக்லஸின் நினைவுச்சின்னங்கள் எல்லாம் அகற்றப்பட்டன.அவை இத்தாலியில் உள்ள பேரி நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.இது ஜரோப்பாவில் புனித நிக்லஸ் பற்றிய செய்திகள் பரவ காரணமாயிற்று.


டிசம்பர் 06ம் திகதிதான் புனித நிக்லஸ் தினமாக கத்தோலிக்கர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்றும் இவர் விழா பரிசு வழங்கும் விழாவாகதான் கொண்டாடப்பட்டு வருகிறது.ஸிண்டர் கிளாஸ் எனும் டச் வார்த்தையின் அமெரிக்க வடிவமே இந்த சாந்தா கிளாஸ் என்பதாகும்.

வருடந்தோறும் நினைவுகளின் இடுக்கைகளின் இருந்த இவ்விழா வியாபார வட்டாரத்துக்குள் வந்த பின்னரே கிறிஸ்மஸ் தாத்தா பிரபலமடைந்தார்.எது என்னவோ புனித நிக்லஸ் தொடக்கிய இந்த சேவை முறை இன்றும் அழியாது பேணப்பட்டு வருகின்றமை பேற்றுதற்குரிய விடயமே.
                  

புதன், 14 டிசம்பர், 2011

திருநங்கைகளும் மற்றய சிறுபான்மையினரும்


உலகில் பிரதானமாக ஆண் பெண் என்ற பாலினத்தை தவிர உணர்வுகளின் அடையாளங்களாக சில சிறுபாலினத்தவர்களும் உண்டு.அவர்களில் திருநங்கைகளும் அடங்குவர் எனினும் அவர்கள் ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்வதால் பெண் என்ற பாலனத்தில் மேற்கத்தய நாடுகள் அங்கீகரித்துள்ளன..திருநங்கைகள் தவிர ஓரினசேர்க்கையளர்கள்.டிராக்குயின்ஸ் எனப்படும் பாலியல் வக்கிரதாரிகளும் அடங்குவர்.திருநங்கைகள் பற்றிய வரலாற்று பதிவுகள் கி.மு700ம் நுாற்றாண்டுகளில் அரசி எஸ்தரின் காலத்திலேயே அறிய முடிகிறது.[திருவிவிலியம் சான்று]மறறயவை பற்றி கி.பி 10ன் பின்னரே அறியமுடிகிறது. இதில் ஓரின சேர்க்கையாளர்கள் ஆண் ஒரினசேர்க்கையாளர்கள்  பெண் ஓரினசேர்க்கையாளர்கள் என இருவகை உண்டு.


ஆண் ஓரின சேர்க்கையாளர்களை கோமோ செக்கர்ஸ் என்றும் பெண் ஓரின சேர்க்கையாளர்களை லெஸ்பியன்ஸ் என்றும் அழைப்பர்.ஓரின சேர்க்கை என்றால் தம்பால் விரும்பிகளாவர்.எதிர்பாராரில் நாட்டம் கிடையாது.ஆண் என்றால் ஆண்கள் மீதும் பெண் என்றால் பெண்கள் மீதுதான் புணர்ச்சி மோகம் வரும்
.இவற்றை பற்றி இன்னும் சற்று ஆழமாக பார்ப்போம்.கிரேக்க மொழியில் கோமோ என்றால் ஒரே மாதிரி னெ பொருள்படும்.இதற்க்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்போதும் ஜேர்மன் நாட்டு உளவில் நிபுணர் கால் மரியா பெனகெர்ட் என்பவரே முதன் முதலில் கோமோ செக்ஸ் என்ற பதத்தை பயன் படுத்தினார்.முன்னய காலங்களில் மகா போர்வீரர்களும் கூட ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதற்கான வரலாற்று பதிவகள் உண்டு.போரில் தோல்வியை தழுவும் மற்றய நாட்டு போர்வீராகளை வென்ற போர்வீரர்கள் கட்டாயத்தின் பேரில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.[மித்திரன் வாரமலர் 19.12.2010] கிறிஸ்து பிறப்புக்குப் பின் இந்நிலை மாறியது.கிறிஸ்தவ மறைபிரச்சாரங்கள் ஓரின சோக்கையை தவறென்று கூறியது.எனினும் இன்று மேற்கத்தேய நாடுகள் இதனை அங்கிகரித்துள்ளது.மேலும் அறிய இங்கே கோமோ செக்ஸ்சொடக்கவும்


கிரேக்கத்தில் உள்ள லெஸ்போஸ் தீவில் கி.மு 7ம் நுாற்றாண்டளவில் வாழ்ந்த பெண்கள் மற்றய பெண்களுடன் உடலுறவு சர்வசாதாரணமாக கொண்டிருந்தனர்.அந்த உறவை அப்போது அத்தீவில் வாழ்ந்த ஸாப்போ என்ற கவி மேதை வர்ணித்து எழுதியுள்ளார்.அன்று முதல் லெஸ்போஸ் தீவு பிரபலமடைந்தது.இதனடப்படையிலேயே பெண் ஓரின சேர்க்கைக்கு லெஸ்பியன் எனும் பெயர் வந்தாக அறிய முடிகிறது.மேலும் அறிய இங்கேலெஸ்பியன்ஸ் சொடக்கவும்


இவர்கள் தவிர டிராக் குயின்ஸ் எனும் பாலியல் வக்கிரக தாரிகளும் உண்டு.இவர்கள் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி அனைவருடனும் புணரும் பாலயல் வேட்க்கை காரர்கள் இவர்களின் காம பசிக்கு மிருகங்கள் கூட சில வேளைகளில் இரையாகலாம்.இவர்களை பற்றி எழுத என் கை நடுங்குகிறது.நீங்கள் மேலும் அறிய விரும்பினால்டிராக் குயின்ஸ் இங்கே சொடக்கவும்.


இதில் நாம் ஒன்று மட்டும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.திருநங்கைகள் இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்.
                                                                                                       ஆக்கம்-எஸ்தர் சபி

வியாழன், 8 டிசம்பர், 2011

தமிழ்க் கலை வளர்க்கும் குருநகர்

யாழ்ப்பாணத்தின் கண் என்று வர்ணிக்கப்படும் குருநகர் அழகிய கடல் அலை முத்தமிடம் மீனவ கிராமம்.கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட இக்கிராமம் தமிழ்மணத்துடனும் வளாக்கப்பட்டுள்ளது.எத்தனையோ மேதைகளை உரவாக்கி விட்டுள்ளது.2011ல் 150ம் ஆண்டு யூபிலி கொண்டாடிய புனித யாகப்பர் தேவஸ்தானம் கம்பீரத்துடன் அழகாக மிளிரும் காட்சிகள் கண்ணை இழுக்கிறது.
         
கரையூர் என அழகாக அழைக்கப்படும் இக்கிராமம் தமிழ்க்கலை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுகிறது.நாட்டுகூத்துகள், நாடகங்கள், இசைக்கச்சேரிகள்,நடனங்கள்“இன்னும் கிறிஸ்தவ மரபுவழி நாடகங்கள் [பாஸ்க்கு] என பலவாறான கலை வளர்க்கும் கலைகல்லுாரியாக இது விளங்குகின்றது.

குருநகர் மக்கள் மீன்வாசத்தில் வளர்ந்தாலும் மின்னல் போன்றவர்கள்.தம் தமிழையும் கலையையும் என்றும் விட்டு கொடாதவர்கள்.யாழ்ப்பாணத்திலேயே அதிக கிறிஸ்தவ பாதிரியார்களை உருவாக்கியது குருநகர் மண்தான்.அதனால்தான் இதற்கு கரையூர் எனும் பெயர் போய் குருநகர் எனும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள் அதுமட்டுமல்ல இங்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.குருநகர் கால்பந்து விளையாட்டுகழகத்தின் பெயர் பாடுமீன் என்பதாகும்.இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 31 மீனவர்களின் சாவு வரலாறு மறக்காத உண்மை.

இலங்கையில்புகழ்பூத்த கல்லுாரிகளில் ஒன்றான புனித.பத்திரிசியார் கல்லுாரி அமைந்துள்ளதும் இங்குதான்.சுற்றி எங்கு பார்த்தாலும் தேவாலயங்களும் பாடசாலைகளும் காணப்படும் இடமாகும்.பலவிதமான கலைகளும்,கலைமேதைகளும் உள்ள இக்கிராமம் அதிகம் பாமரர்களை கொண்டுள்ளதென்பது மற்றுமோர்விடயம்.எதுஎன்னவோ தமிழ்கலை வளர்க்க இச்சிறிய கிராமத்தின் பங்களிப்பு போற்றுதற்குரியது.                                                                                                    ஆக்கம்-எஸ்தர்
                                                                                                                  

செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஒரு திருநங்கையின் காதல்


ஒரு திருநங்கை சாதரண ஒருபெண்ணை போலவே ஆணின் மேல் காதல் கொள்ளுவாள்.இதை அழகான முறையில் திருநங்கை ரேவதி மூலம் பதிவு செய்துள்ளார்.திருநங்கை கல்கி...இதோ அவ் கானொளி பதிவு.....