வியாழன், 8 டிசம்பர், 2011

தமிழ்க் கலை வளர்க்கும் குருநகர்

யாழ்ப்பாணத்தின் கண் என்று வர்ணிக்கப்படும் குருநகர் அழகிய கடல் அலை முத்தமிடம் மீனவ கிராமம்.கிறிஸ்தவ பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட இக்கிராமம் தமிழ்மணத்துடனும் வளாக்கப்பட்டுள்ளது.எத்தனையோ மேதைகளை உரவாக்கி விட்டுள்ளது.2011ல் 150ம் ஆண்டு யூபிலி கொண்டாடிய புனித யாகப்பர் தேவஸ்தானம் கம்பீரத்துடன் அழகாக மிளிரும் காட்சிகள் கண்ணை இழுக்கிறது.
         
கரையூர் என அழகாக அழைக்கப்படும் இக்கிராமம் தமிழ்க்கலை வளர்ப்பதில் பெரும்பங்காற்றுகிறது.நாட்டுகூத்துகள், நாடகங்கள், இசைக்கச்சேரிகள்,நடனங்கள்“இன்னும் கிறிஸ்தவ மரபுவழி நாடகங்கள் [பாஸ்க்கு] என பலவாறான கலை வளர்க்கும் கலைகல்லுாரியாக இது விளங்குகின்றது.

குருநகர் மக்கள் மீன்வாசத்தில் வளர்ந்தாலும் மின்னல் போன்றவர்கள்.தம் தமிழையும் கலையையும் என்றும் விட்டு கொடாதவர்கள்.யாழ்ப்பாணத்திலேயே அதிக கிறிஸ்தவ பாதிரியார்களை உருவாக்கியது குருநகர் மண்தான்.அதனால்தான் இதற்கு கரையூர் எனும் பெயர் போய் குருநகர் எனும் பெயர் வந்ததாகவும் கூறுவார்கள் அதுமட்டுமல்ல இங்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.குருநகர் கால்பந்து விளையாட்டுகழகத்தின் பெயர் பாடுமீன் என்பதாகும்.இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 31 மீனவர்களின் சாவு வரலாறு மறக்காத உண்மை.

இலங்கையில்புகழ்பூத்த கல்லுாரிகளில் ஒன்றான புனித.பத்திரிசியார் கல்லுாரி அமைந்துள்ளதும் இங்குதான்.சுற்றி எங்கு பார்த்தாலும் தேவாலயங்களும் பாடசாலைகளும் காணப்படும் இடமாகும்.பலவிதமான கலைகளும்,கலைமேதைகளும் உள்ள இக்கிராமம் அதிகம் பாமரர்களை கொண்டுள்ளதென்பது மற்றுமோர்விடயம்.எதுஎன்னவோ தமிழ்கலை வளர்க்க இச்சிறிய கிராமத்தின் பங்களிப்பு போற்றுதற்குரியது.                                                                                                    ஆக்கம்-எஸ்தர்
                                                                                                                  

1 கருத்து: