திங்கள், 19 டிசம்பர், 2011

நெடுந்தொடர்கள் மக்களில் ஏற்படுத்தும் தாக்கம்

இன்று மக்களில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடக சாதனமாக தொலைக்காட்சி விழங்குகின்றது.பல்வேறு பொழுது போக்கு சாதனங்கள் இருந்தாலும்.தொலைக்காட்சிக்கு என்று தனி இடமே உண்டு.

தொலைக்காட்சியில் பல்வேறு விடயங்கள் ஒளிபரப்பப்படுகின்ற போதும் மக்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது நெடுந்தொடர்களே இது மக்களின் வாழ்வில் பின்னி பினைந்துள்ளதென்றே கூறலாம்.இங்கு நான் மக்கள் என்று குறிப்பிட வருவது பிரதானமாக நம்தமிழ் மக்களையே.

இன்று தொலைக்காட்சியில் சன் ரி.வி, சீ தமிழ் ரி.வி, விஜய் ரி.வி, கேப்டன் ரி.வி, ராஜ் ரி.வி, ஜெயா ரி.வி போன்ற தொலைக்காட்சிகள் முன்னனியில் உள்ளன.
பலவகையான தொலைக்காட்சிகளும் பலவகையான நெடுந்தொடர்களை ஒளிபரப்புகின்ற போதும் ஒருசில தொரைக்காட்சி தொடர்கள் மட்டும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.அந்த வகையில் என் சிந்தனைபடியும் மற்றவர்களை விசாரித்தறிந்தபடியும் சன் மற்றும் சீ தமிழ் தொலைக்காட்சிகள் தறபோது முன்னனியில் இருக்கின்றன. [நெடுந்தொடர் ரசிகர்கள் எண்ணத்தை பொறுத்து

சன் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை எடுத்து கொண்டால் அனைத்தும் நேரடி தமிழ் தொடர்கள் சீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களை எடுத்து கொண்டால் அவை பிற மொழி தொடர்களிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து ஒளிபரப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பெண்களே பெரும்பாலும் நாயகிகள் இவர்கள் அனைத்தும் கற்பனை நாயகிகள்.ஆனாலும் காலத்தால் அழியாத கற்பனை இல்லாத நாயகி வீராங்கனை ஜான்சி ராணியின் வரலாறு பலரறியாத உண்மை அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை சீ தமிழ் தொலைக்காட்சியை சாரும்.ஜான்சி ராணி நிஜத்தில் எப்படி இருந்திருப்பாரோ நான் அறியேன் என்றாலும் இத்தொடரில் இப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் க்ருத்திகா என்ற நடிகை ராணியை நேரிலே எமக்கு காட்டுகின்றாள்.

இன்று பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்கள் கற்பனை தொடர்களாக ஒளிபரப்பப்படுகின்றன.எனினும் புராணங்களும்,இதிகாசங்களும்,உண்மை சம்பவங்களும் ஒளிபரப்பப்படுகின்றமையை நான் கூறியே ஆகவேண்டும். படிக்காத பாமர மக்கள் நிச்சயம் புராணங்களையோ இதிகாசங்களையோ முழுதாக கற்றிருக்க வாய்ப்பில்லை.அந்த வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெற்ற சில புராணங்களும் இதிகாசங்களும் நெடுந்தொடர்களாக ஒளி பரப்பப்பட்டன என்னும் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.இது வாழ்த்துதற்குரியதே..

எனினும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்களின் நாவல்கள் சுயசரிதைகள் போன்றன வெளியில் வராமல் தனியே எழுத்துருவில் மாத்திரம் இருக்கின்றன.நெடுந்தொடர் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களின் எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தால் மிக்க நல்லதென்று எனக்கு தோன்றுகின்றது.

நெடுந்தொடர்கள் பற்றி பலரும் பலவித விமர்சனங்களை எழுப்புகின்ற போதும் பொழுதுபோக்கு என்ற விடயத்தில் நெடுந்தொடர்கள் இதவிர்க்க முடியாதவை. என்பது உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக