திங்கள், 26 டிசம்பர், 2011

முடிக்கான அழகு குறிப்புகள்

முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு பிடி எடுத்து நீரில் வேக வைத்து அதன் பின் ஒரு நாள் கழித்து அந்நீரில் தலை கழுவி வந்தால் முடி உதிர்தல் படிப்படியாக குறையும்.

கடுக்காய் நெல்லிக்காய்ப்பொடி இரண்டையும்கலந்து இரவில் ஊற வைத்து காலையில் எலுமிச்சை சாறுடன் கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்தல் நிற்கும்.

வெந்தயத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரம் கழித்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறையும்.

வழுக்கையில் முடிவளர
வெட்டி ரே சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை மறையும்.

இழநரை கறுப்பாக
நெல்லிக்காய் கறிவேப்பிலை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முடி கருமை நிறம் அடையும்.

முடிகறுப்பாக...
ஆலமரத்தின் இளவேர் செம்பரத்தம் பு இரண்டையும் இடித்து துாள் செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருமையடையும்.

செம்பட்டை முடி மாற...
கறிவேப்பிவையையும் செம்பரத்தை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் செம்பட்டை முடி மாறும்.

நரை போக்க....
தாமரைப்பூ கசாயத்தை காலை மலை குடித்து வந்தால் நரை மறையும்.
முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.

1 கருத்து:

  1. நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/health_women-beauty-tips பெண்களுக்கான அழகு குறிப்புகளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்.

    பதிலளிநீக்கு