வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஜான்சி ராணி வெற்றி ராணி (விமர்சனம்)

ஜான்சி ராணி என்னடா இது ஜான்சி ராணியின் வரலாற்றை பகிர உள்ளேன் என நீங்கள் நினைக்கலாம்.ஜானசி ராணி சம்மந்தப்பட்ட விடயத்தைதான் பகிர உள்ளேன் ஆனால் வரலாற்றை அல்ல.ஏனென்றால் அது பற்றிய முழுஅறிவு இப்போது சகலருக்கும் இருக்பும் என நினைக்கிறேன்.சரி விடயத்துக்கு வருவோம்.

ஜீ தமிழ் ரி.வியில் இன்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு முடிந்த ஜான்சி ராணி தொடரின் வெற்றி பற்றி பற்றியே பேச உள்ளேன்.ஜீ ரி.வியில.இந்தி மொழியில் வெற்றி பெற்ற ஜான்சி கி ராணி தொடரை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து ஜீ தமழ் ரி.வி ஒளிபரப்பியது.சிறிது காலத்துக்குள்ளேயே இத்தொடருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.இந்தியா,இலங்கை என்று ஜான்சி ராணி ஒளிபரப்பப்படும் சகல நாடுகளிலும் ஜான்சி ராணியின் ரசிகர்கள் பல்லாயிரக் கணக்காண பேர்

ஜான்சி ராணியின் சிறிய பராயத்தில் ஜான்சி ராணியாக(மனி கர்னிகாவாக) உல்கா குபிரா என்ற சிறிய பெண் நடித்திருப்பாள்.இவள் நடிப்பை சொல்ல தேவயில்லை அப்படி சிறப்பாக நடித்திருப்பாள்.ஜான்சி ராணியாக (லக்ஸ்மி பாயாக) க்ருத்திகா என்பவர் நடித்திருப்பார் ஜான்சி ராணி எப்படி இருந்திருப்பாரோ நான் அறியேன் ஆனால் இவர் எமக்கு ஜான்சி ராணியையே நேரில் காட்டினார் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார்.இத்தொடரில் இடம் பெற்ற சில சேவகர்கள்  காதாபாத்திரங்கள் தவிர யாவும் நிஜமாக இவ்வுலகில் வாழ்ந்த பாத்திரங்கள்.அப்பாத்திரங்ளுக்கு தேர்வு செய்த அனைத்து நடிகர்களும் அப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.குறிப்பிட்டு கூறுவதானால் எல்லோரையும் கூற வேண்டும் அதனால் இத்தொடரில் நடித்த எல்லோருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர்.இத்தொடரின் இசை உண்மையிலேயே வலு சேர்த்துள்ளது.எம் உணர்வுகளை துாண்டுகிறது.

இன்று இத்தொடர் ஜான்சி ராணியின் மரணக்காட்சிகளுடன் நிறைவு பெற்றுள்ளது.தீவிர ரசிகர் பட்டாளத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது என்பது முக்கியமான் விடயம்.

எது என்னதோ இத்தொடர் இன்று வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு நிறைவேறியுள்ளது.ஜீ தமிழ் இது போன்று நல்ல தொடர்களை உண்மை சரித்திரங்ளை மக்களிடையே கொண்டு போய் சேர்க்கிறது அதற்கு எனது வாழ்த்துக்கள்.ஜான்சி ராணி தொடரில் நடித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இதன் பின் ஒளி பரப்பப்பட இருக்கும் வீர சிவாஜி தொடர் வெற்றியை சந்திக்க எனது வாழ்த்துக்கள்.

புதன், 25 ஜனவரி, 2012

திருநங்கைகளின் தாய் வீடு கூவாகம்

கூவாகம் பற்றி பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். கூவாகம் என்பது தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் இதனை திருநங்கைகளின் தாய் வீடென்றே இதனை கூறலாம்.ஏனெனில் தமிழ் நாட்டு திருநங்கைகளின் தெய்வமாகிய அரவான் கோவில் அமைந்தது இங்கேதான்.இதனால் தான் இவர்களுக்கு அரவாணி எனும் பெய்ர் வந்தது.

அரவாணுக்கும் திருநங்கைகளுக்குமான தொடர்புஅரவாண் என்பவர் அர்ச்சுனனின் ஒரு மகன்.ஒரு சந்தர்ப்பத்தில் அசூரன் ஒருவனுக்கெதிராக அர்ச்சுனனும் அவர் மகன் அரவானும் போர் புரிந்தனர்.அசூரனிடம் பலத்த படைகள் காணப்பட்டன.இதனால் அர்ச்சுனன் போருக்கு உதவும் படி காளியிடம் வேண்டினர்.காளி தோன்றி ஒரு வாலிபனை நரபலி கேட்கவே அர்ச்சுனன் கடும் யோசனையில் ஆழ்ந்தார்.முடிவில் தன் மகன் அரவானையே பலி கொடுக்க கட்டளையிட்டார்.

ஆனால் அரவாணோ தான் இன்னும் தாம்பத்திய இன்பம் அனுபவிக்கவில்லை என்று கூறி மறுத்து விடுகிறார்.அதனால் அர்ச்சுனன் தன் மகனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கிறார்.எனினும் எந்த பெண்களும் அரவாணை திருமணம் செய்ய சம்மதம் கொள்வில்லை ஏனெனில் திருமணமாகி அரவாண் அடுத்த நாளே இறந்து விடுவார் என்பதால்.

இதனால் அர்ச்சுனன் விஸ்னுவின் உதவியை வேண்டவே அவரும் உதவிட விரைந்து வந்தார்.விஸ்னு தானே பெண்ணாக மாறி மோகினி எனும் திருநங்கையாக வந்து அரவாணை திருமணம் செய்து மறு நாளே அரவாண் பல கொடுக்கப்பட விதவையாகிறாள்.

இந்த மரபின் படியே திருநங்கைகள் அரவாண் கோவிலுக்கு வந்து தாலி கட்டி கொண்டு அரவாணை பலி கொடுக்கும் சடங்கு முடிந்த பிறகு தாலியறுத்து விதவையாகினறனர்.

இத்திருவிழா சிறப்புக்கள்
இத்திருவழா சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் இடம் பெறும்.மிக கோலாகலமாக இத்திருவிழா இடம் பெறும்.நாட்டின் அனைத்து பாகங்களில் இருக்கும் திருநங்கைகள் அனைவரும் இனம்,மொழி,சாதி வேற்றுமை பாராது கலந்து கொள்வர் தமிழ் நாட்டு.திருநங்கைகள் வாழ்வில் இத்திருவிழா மிகமுக்கிய இடத்தை வகிக்கிறது.இதன் போது திருநங்கைகள் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி தம் திறமைகளை வெளிகாட்டுகின்றனர்.

இக்காலகட்டத்தில்தான் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகி போடடியும் இடம் பெறுகின்றது.ஆக மொத்தம் இக்கூத்தாண்டவர் திருவிழா திருநங்கையர் விழாவாகவே கொண்டாடப்படுகின்றது.

திங்கள், 23 ஜனவரி, 2012

தமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா?அல்லது மறுத்து விட்டதா?

சினிமா என்றால் அது றொம்ப பாடுபடவேண்டிய ஒரு விடயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட அதில் தமக்கோர் இடம் பிடித்து கொள்வதற்கு நிறைய பாடுபடவேண்டியுள்ளது.அவ்வாறு வெற்றி கண்ட பல கலைதுறைினரை நாம் அறிவோம்.இவ்வாறு வெற்றி கண்ட பல பெண் நடிகைகளை நம் தமிழ் சினிமா தற்போது மறந்து விட்டதா? அல்லது மறுத்து விட்டதா? என்பது யான் அறியா உண்மை.அந்த வரிசையில் நான் பாவனா,பூஜா,ப்ரியாமணி ஆகிய மூன்று நடிகைகள் பற்றியே பேச உள்ளேன்.

பாவனா

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகளில் ஒருவாராக திகழ்ந்தவர் பாவனா. இவர் 2006 இறுதியில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.தன் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.அதை தொடர்ந்து கிழக்கு கடற்கரைசாலை வெய்யில்,ராமேஸ்வரம்,ஆர்யா,கூடல்நகர்,வாழத்துக்கள்,தீபாவளி,ஜெயம் கொண்டான்,அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.தமிழ் சினிமாவில் தனக்கோர் இடத்தை தக்கவைத்த இவருக்கு இயக்குனர்கள் தயவு கிடைக்கவில்லை என நினைக்கிறேன்.கவர்ச்சி இல்லாமலேயே ரசிகர்களை இழுத்துப் போட்டவர் பாவனா.அதே காரணத்தினாலே வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது வருந்த தக்கது.காலம் கனிந்து பாவனாவுக்கு தமிழ் சினிமாவின் கதவு திறந்தால் மிக்க சந்தோஷம்.

பூஜா


ஜே ஜே படம் மூம் தமிழ் சினிமாவில் குதித்தவர் பூஜா.அதை தொடர்ந்து தம்பி,அட்டகாசம்,உள்ளம் கேட்குமே,பட்டியல்,ஓரம் போ,நான் கடவுள் ஆகிய படங்களில் நடித்தார்.ஆர்யாவையும் பூஜாவையும் சேர்த்து வந்த கிசு கிசு தகவல்கள் ஏராளம்.இறுதியாக பாலாவின் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் பூஜாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.இப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றார்.இப்படத்திற்கு பிறகு பூஜாவை பெரிய சட்ச்சத்திரங்களுடன் காணலாம் என்றிருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் அதற்குப்பின் அவருக்கு படவாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.சிங்களத்தி என்ற காரணமோ எனக்கு தெரியாது.........

ப்ரியா மணி
கண்களால் கைது செய் திரப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ப்ரியாமணி அப்படம் சரியாக ஓடா விட்டாலும் வாய்ப்புக்கள் தேடி வந்தன.ஆனாலும் ப்ரியாமணியை ரசிகர்கள் தலையில் துாக்கி வைத்து கொண்டாடியது பருத்தி வீரனுக்குப் பிறகே.அம்மம்மா சொல்லவே தேவயில்லை நடிப்பில் சும்மா பிச்சு உதறியிருப்பார்.இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது.அதன் பின் தோட்டா,மலைக்கோட்டை,இரத்தசரித்திரம் ஆகிய படங்களில் நடித்தார் அதற்குப்பின் ஆளையே காணோம்.

இயக்குனர்கள் கவர்ச்சியை கொண்டு படத்தை ஓட்டிவிடலாம் என்ற கருத்தை விடுத்து நடிக்க தெரிந்த நல்ல நடிகைகளுக்கு வாய்ப்பளித்து.தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த பாடுபட்டால் நல்லது.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

நடிகர் தனுஸிடமிருந்த தமிழை காப்பாற்ற யாழ்ப்பாணத்து வாலிபன்..ஸ்டாலின்

3 திரைப்படத்துக்காக அன்ரூத் என்ற புதிய இநசயமைப்பாளர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.அறிமுகத்திலேயே இவர் தமிழுக்கு செய்த நாச வேலை சொல்ல தேவையில்லை.இவர் போகட்டும் இவர் வெறும் கருவியே ஆனால் இப்படத்தின் நாயகன் தமிழ் மகன் தனுஸ் அப்பப்பப்பா படம் வெளிவரும் முன்னேயே இவர் பற்றியும் இந்த படம் பற்றியும் கிசு கிசுக்கள் ஏராளம்.

சரி தலைப்புக்கு வருவோம் நம்ம தனுஸின் பாடல் உலகம் முழுக்க கலக்கினாலும் தமிழ் ஆர்வலர்களிடமும்,தமிழ் எழுத்தாளர்களிடம் மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.இதற்கு என்ன காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.இதனை கண்டிக்கும் விதமாக தமிழின் இருதயமாகிய யாழ்ப்பாணத்தில் தமிழ் பற்றுள்ள ஸ்டாலின் எனும் வாலிபர் ஒருவர் தமிழின் பெருமைகளை கூறி தனுஸிடம் ஏன் இந்த கொலவெறிடா? என் தமிழ் மொழி மேல் என்று கேள்வியெழுப்பி அருமையான பாடல் ஒன்றை அதே இசையில் நமக்கு தந்துள்ளார்.இதற்கு முதல் தைரியம் வேண்டும் தமிழன் என்ற படியால் அது நிறையவே இவரிடம் இருக்கு என்பதாக நான் கருதுகிறேன் அதனால்தான் இது அவருக்கு மட்டுமல்ல தமிழுக்கும் வெற்றி தந்துள்ளது நான் அறிந்தவரை.யூடியுபில் மாத்திரம் இது வரைக்கும் இரண்டு லட்சத்திற்கு அதிகமானோர் இப்பாடலை பார்வையிட்டுள்ளனர்.

இதில் நான் பெருமை பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த ஸ்டாலினிடம் நான் ஒரு வருடகாலமாக நான் கணினி பயின்றேன்.நான் இவரின் மாணவி.இவருக்கு எஸ்தராகிய நான் நன்றியும் வாழ்த்துக்களும் கூறி நிற்கிறேன்.

செவ்வாய், 10 ஜனவரி, 2012

வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களின் ரகசியம்

ண்ணங்களால் நம் மனதை வசப்படுத்தும் வண்ணத்துப் பூச்சியை நாம் ரசிப்பதுண்டு ஆயினும் அதன் வண்ணங்களின் ரகசியத்தை நாம் அறிவதில்லை.
இந்நிலையில் இவ்வண்ணங்களுக்கு நிறமிகள் அல்ல கலன்களின் அமைப்பே காரணம் என்கிறது ஆய்வுக்குழு.இது குறித்த ஆராய்ச்சியை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.அதற்காக அவர்கள் 05 வகையான வண்ணத்துப் பூச்சிகளை பயன்படுத்தினர்.

அவற்றின் சிறகுகளில் முப்பரிமான உள்ளமைப்பு ஏடுகளை அறிய எக்ஸ் கதிர்களை ஒளி சிதறலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள்கைராய்ட் எனப்படும் மிகச்சிறிய கட்டமைப்பிலானது எனவும்இந்த கைராய்ட்கள் பகெம் போல செயற்பட்டு சூரிய ஒளியை விளிம்பு விளைவுக்கு உட்படுத்துகிறது எனவும் கண்டறிந்துள்ளனர்.இது வரை வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை இரு பரிமாண இலத்திரனியல் நுணுக்கு காடடி கொண்டே ஆய்வு செய்த நிலையில் தற்போதைய ஆய்வு சற்று முன்னேற்றம் என்றே கூறலாம்.இந்த கைராட்கள் மின் விசியின் இலை போன்றது.இது நன்கு உறுதியான சிடின் எனும் கட்டமைப்பினால் ஆனது.இந்த கைராய்ட் அமைப்பு பூச்சியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.
மேலும் வண்த்துப் பூச்சியில் சிறகில் அமைந்துள்ள கலடின் மென் சவ்வானதுவளர்ந்து கலங்களின் உள்ளே மடித்து வைக்கப்படுகிறது.மடித்து வைக்கப்படும் மென் சவ்வுகளானது இரு கைராட்டுகளை உருவாககுகிறது.இந்த இரு கைராய்ட்டுகளை கண்ணாடி அமைப்புள்ள வலைத்தளமாக மாற்றுகிறது.சிடின் வெளிப்புற கைராய்ட்டில் சேமிக்கப்படுகிறது.இதனால் அது ஒரு திடப்படிகமாக மாறுகிறது.பின்னர் அந்த கலம் இறந்து போவதால் மிக நுண்ணிய ஒளி ஊடுபுகும் தன்மையுடைய படிகம் உருவாகிறது.இந்த படிகம் சூரிய ஒளியின் எல்லா அலை நீளங்களையும் அதனுள் கடத்தி விடுகிறது.கைராட்டுகளின் அளவு நிறத்தை தீர்மானிக்கிறது.
இவ்வாறுதான் பட்டாம் பூச்சிகள் நிறத்தை பெறுகின்றன.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

ccl துடுப்பாட்ட போட்டிகள் 2012 முழுவிபரம்

ஒரு சிலருக்கு துடுப்பாட்டம் என்றால் உயிர் என்னும் சிலருக்கு சினிமா என்றால் உயிர்.இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் சொல்லவே தேவயில்லங்க.அதுதான் இந்த செலிபறேற்றி கிறிக்கட் லீக் சென்ற ஆண்டு நடை பெற்ற இந்த நட்ச்சத்திர துடுப்பாட்டத்தைில் வெற்றி வாகை சூடியது நம்ம கோடாம்பாக்க குழுவினர்கள்தாங்க.கடந்த போட்டியில் சென்னை,மும்பை, தெலுங்கானா,கர்நாடகா ஆகிய நான்கு திரையுலகமே போட்டியில் பங்கு பற்றியது.ஆனால் இம்முறை கேரளா,பெங்காளி திரையுலகினரும் ஆடுகளம் இறங்கவுள்ளனர்.மொத்தம் ஆறு அண்யினர் மோதவுள்ளனர்.
போட்டி விபரங்கள்
13 ஜனவரி வெள்ளிக்கிழமை சராச
மும்பை heros v/s தெலுங்கு வாரியஸ்14 ஜனவரி சராச்
மும்மை...ஸ் v/s சென்னை ரெகினொஸ்


15 ஜனலரி பாங்ளுர்
பெங்கள் டைகர்ஸ் v/s கர்நாடகா புள்டோசர்ஸ்


21 ஜனவரி கைதராபாத்
கேரள ரைகர்ஸ் v/s சென்னை...ஸ்
தெலுங்கு வாரியஸ்v/s கர்நாடகா பு...ஸ்


22 ஜனவரி கொச்சி
பொங்காளி ரைகர்ஸ் v/s சென்னை ..ஸ்
கேரள ரைகர்ஸ் v/s மும்பை...ஸ்


28 ஜனவரி சென்னை
தெலுங்கு வாரியஸ் v/s கேரள ரைகர்ஸ்
கர்நாடகா புள்..ஸ் v/s சென்னை...ஸ்


29 ஜனவரி பாங்ளுர்
பெங்காளி..ஸ் v/s தெலுங்கு வாரியஸ்
கர்நாடகா புள்...ஸ்உv/s மும்மை......ஸ்


04 பெப்பவரி கைதராபாத்
கேரளா v/s பெங்காளி
தெலுங்கு v/s சென்னை


05 பெப்பவரி கல்கத்தா
கர்நாடகா v/s கேரளா
பெங்காளி v/s மும்பை


11 பெப்பவரி சென்னை
செமி ஃபைனல் 01 02


12 பெப்பவரி கைதராபாத்
இறுதிப்போட்டி


மேலதிக விபரங்களை அறிய நீங்ககள் இங்கே சொடக்கவும்.அருமையான பொழுது போக்கு வியைாட்டுகள் தவறாமல் கண்டு மகிழுங்ககள்.ஓடிக்கொண்டே இரு நின்று விடாதே சூரியன் போல் எழுந்து பிரகாசி உலகம் உன்னை என்ன செய்ய முடியும்?
எஸ்தர் சபி

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கிறிஸ்தவமும் திருநங்கைகளும்

கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் அனைவரும் பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.இதில் பல பிரிவினை சபைகள் உண்டு அது என் பகிர்வுக்கு சற்று தேவையற்ற விடயம்.இங்கு நான் பகிர இருப்பது கிறிஸ்தவத்தின் பார்வையில் திருநங்கைகளின் நிலை என்ன என்பது பற்றியே... அதற்கு முன் கிறிஸ்தவத்தின் மரமாகிய யூதமதம் திருநங்கைகளை பற்றி கொண்டுள்ள கருத்து என்ன என்பதை பார்த்தால் சற்று புரிதலாக இருக்கும்.ஏனெனில் இயேசு ஒரு யூதர் யூதமதத்தின் ஓர் கிளையாகவே கிறிஸ்தவம் வளர்ந்தது.

யூதமதத்தின் மறை நுாலும் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டு நுாலும் ஒன்றே சார்ந்தது.என்ற படியால் இப்பழைய ஏற்பாட்டு நுால் சார்ந்தே யூதமத கருத்துக்களை பார்ப்போம். இவர்கள் யூத கிறிஸ்தவத்தின் படி அண்ணகர்கள் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டாலும் பானபாத்திரகாரர் பிரதானிகள் சுயம்பாகிகள் விதையடிக்கப்பட்டவர்கள் என்ற பெயர்களிலும் குறிப்பிடபடுகிறார்கள்[.பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1),  ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) ]

திருநங்கைகள் அரண்மனைகளில் பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தமைக்கு வேதநுால் சான்று சொல்கிறது.வேதநுாலில் திருநங்கைகள் பற்றி 50 முறை சொல்லப்பட்ட போதும் 28 முறைகளிலே அவை திருநங்கைகள் பற்றிய கருத்துக்கள் என ஏற்க முடிகிறது.[ உபா23.1] படி இவர்கள் முன்னய காலங்களில் ஆலய ஆராதனைகளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.பிற் காலங்களில் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்படுவதாக எசாயா எனும் இறைவாக்கினர் அறிவித்துள்ளார்.அவரின் இறைவாக்கு இதோ உங்களுக்காக[எசாயா56.4.5] 4-ஆண்டவர் கூறுவது இதுவே என் ஓய்வு நாளை கடைப்பிடித்து நான் விரும்புகிறவற்றை தேர்ந்து கொண்டு என் உடன்படிக்கையை உறுதியாக பற்றி கொள்ளும் அண்ணகர்களுக்கு [திருநங்கைகளுக்கு] 5-என் இல்லத்தில் என் சுற்று சுவர்களுள் நினைவு சின்னம் ஒன்றினை எழுப்புவேன். புதல்வர் புதல்வியரை விட சிறந்தொரு பெயரை வழங்குவேன்.ஒரு போதும் அழியாத என்றும் உள்ள பெரை அவர்களுக்கு சூட்டுவேன்.

இதன் மூலம் திருநங்கைகள் பிற்காலங்களில் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்படுவதை காணலாம். இதை ஃபவர் வேதத்தின் படி பார்ப்போம்.
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5). 
என கூறப்பட்டுள்ளது.இவை யூதமதம் எவ்வாறு திருநங்கைகளை பார்க்கிறது என்பதை அறிய உங்களுடன் பகிர்ந்தேன்.முதலில் ஆலயத்தில் சேர்க்கப்படாதவர்கள் பின் எவ்வாறு சிறந்த அங்கீகாரம் பெற்றனர் என்பதை அறிந்திருப்பீர்கள்.

இங்கு நான் திருவிவிலியத்தின் எஸ்தர் ஆகமத்தை பற்றி பேசியே ஆக வேண்டும்.திருவிவிலியத்தில் அதிகமாக திருநங்கைகளை பேசும் பகுதி எஸ்தர் ஆகமாகும் எஸ்தர் எனும் யூத பெண் மகாராணியாக வர உதவுவதே ஒரு திருநங்கை[அண்ணகர்]மிக முக்கிய விடயம்.உங்களுக்கு திருவிவிலியம் கையில் கிடைத்தால் எஸ்தர் ஆகமத்தை தவறாது படியுங்கள் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக காணப்படும்.

இயேசுவின் காலத்தில் திருநங்கைகளின் நிலை எவ்வாறு அமைந்ததென்பதை பார்ப்போம் மத்தேயு எனும் யேசுவின் சீடர் தம் நற்செய்தியில்[மத் 19.12] தாயின் கருவில் அண்ணகர்கள்[திருநங்கைகள்] ஆனவர்கள் உண்டு.பிறரால் அண்ணகர்கள் ஆனவர்கள் உண்டு.பரலோகத்தின் படி திருநங்கைகள் ஆனவர்கள் உண்டுஇதை ஏற்பவன் ஏற்று கொள்ளட்டும் என்றார்.என மத்தேயு கூறுகிறார்.
மேலும் திருத்துாதர் பணிகள் நுாலில்[தி.பணி8.26-40] யேசுவின் சீடர்களில் ஒருவரான பிலிப்பு என்பவர் எத்தியோப்பியா ஊரை சேர்ந்த அங்கு நிதி அமைச்சராக கடமைபுரிந்த அண்ணகர் ஒருவருக்கு திருமுழுக்கு கொடுத்து அவரை இறைபணியில் ஈடுபடுத்தியதாக வேதநுால் கூறுகிறது.
ஆனால் மரபு வழி கதைகளின் படி இத்திருநங்கையின் பெயர் கந்தகி என்றும் அவர் பிலிப்பை சந்தித்த பின் இலங்கை வந்து வேதம் போதித்ததாகவும் கிறிஸ்தவ நாகரீகம்[ உயர்தர பாடதிட்டநுால்2011 கடுகு மரம்] கூறுகிறது.

கிறிஸ்தவத்தின் படி திருநங்கைகள் முழுதாக ஏறறுக்கொள்ளப்பட்டதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவையில்லை.திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள் என்பதற்கு எஸ்தர் ஆகமம் நல்லதொரு எடுத்து காட்டு...

இப்பதிவின் மூலம் திருநங்கைகளை கிறிஸ்தவம் எவ்வாறு ஏற்று கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.