ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கிறிஸ்தவமும் திருநங்கைகளும்

கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் அனைவரும் பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.இதில் பல பிரிவினை சபைகள் உண்டு அது என் பகிர்வுக்கு சற்று தேவையற்ற விடயம்.இங்கு நான் பகிர இருப்பது கிறிஸ்தவத்தின் பார்வையில் திருநங்கைகளின் நிலை என்ன என்பது பற்றியே... அதற்கு முன் கிறிஸ்தவத்தின் மரமாகிய யூதமதம் திருநங்கைகளை பற்றி கொண்டுள்ள கருத்து என்ன என்பதை பார்த்தால் சற்று புரிதலாக இருக்கும்.ஏனெனில் இயேசு ஒரு யூதர் யூதமதத்தின் ஓர் கிளையாகவே கிறிஸ்தவம் வளர்ந்தது.

யூதமதத்தின் மறை நுாலும் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாட்டு நுாலும் ஒன்றே சார்ந்தது.என்ற படியால் இப்பழைய ஏற்பாட்டு நுால் சார்ந்தே யூதமத கருத்துக்களை பார்ப்போம். இவர்கள் யூத கிறிஸ்தவத்தின் படி அண்ணகர்கள் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்பட்டாலும் பானபாத்திரகாரர் பிரதானிகள் சுயம்பாகிகள் விதையடிக்கப்பட்டவர்கள் என்ற பெயர்களிலும் குறிப்பிடபடுகிறார்கள்[.பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1),  ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) ]

திருநங்கைகள் அரண்மனைகளில் பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தமைக்கு வேதநுால் சான்று சொல்கிறது.வேதநுாலில் திருநங்கைகள் பற்றி 50 முறை சொல்லப்பட்ட போதும் 28 முறைகளிலே அவை திருநங்கைகள் பற்றிய கருத்துக்கள் என ஏற்க முடிகிறது.[ உபா23.1] படி இவர்கள் முன்னய காலங்களில் ஆலய ஆராதனைகளில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.பிற் காலங்களில் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்படுவதாக எசாயா எனும் இறைவாக்கினர் அறிவித்துள்ளார்.அவரின் இறைவாக்கு இதோ உங்களுக்காக[எசாயா56.4.5] 4-ஆண்டவர் கூறுவது இதுவே என் ஓய்வு நாளை கடைப்பிடித்து நான் விரும்புகிறவற்றை தேர்ந்து கொண்டு என் உடன்படிக்கையை உறுதியாக பற்றி கொள்ளும் அண்ணகர்களுக்கு [திருநங்கைகளுக்கு] 5-என் இல்லத்தில் என் சுற்று சுவர்களுள் நினைவு சின்னம் ஒன்றினை எழுப்புவேன். புதல்வர் புதல்வியரை விட சிறந்தொரு பெயரை வழங்குவேன்.ஒரு போதும் அழியாத என்றும் உள்ள பெரை அவர்களுக்கு சூட்டுவேன்.

இதன் மூலம் திருநங்கைகள் பிற்காலங்களில் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப்படுவதை காணலாம். இதை ஃபவர் வேதத்தின் படி பார்ப்போம்.
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5). 
என கூறப்பட்டுள்ளது.இவை யூதமதம் எவ்வாறு திருநங்கைகளை பார்க்கிறது என்பதை அறிய உங்களுடன் பகிர்ந்தேன்.முதலில் ஆலயத்தில் சேர்க்கப்படாதவர்கள் பின் எவ்வாறு சிறந்த அங்கீகாரம் பெற்றனர் என்பதை அறிந்திருப்பீர்கள்.

இங்கு நான் திருவிவிலியத்தின் எஸ்தர் ஆகமத்தை பற்றி பேசியே ஆக வேண்டும்.திருவிவிலியத்தில் அதிகமாக திருநங்கைகளை பேசும் பகுதி எஸ்தர் ஆகமாகும் எஸ்தர் எனும் யூத பெண் மகாராணியாக வர உதவுவதே ஒரு திருநங்கை[அண்ணகர்]மிக முக்கிய விடயம்.உங்களுக்கு திருவிவிலியம் கையில் கிடைத்தால் எஸ்தர் ஆகமத்தை தவறாது படியுங்கள் மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக காணப்படும்.

இயேசுவின் காலத்தில் திருநங்கைகளின் நிலை எவ்வாறு அமைந்ததென்பதை பார்ப்போம் மத்தேயு எனும் யேசுவின் சீடர் தம் நற்செய்தியில்[மத் 19.12] தாயின் கருவில் அண்ணகர்கள்[திருநங்கைகள்] ஆனவர்கள் உண்டு.பிறரால் அண்ணகர்கள் ஆனவர்கள் உண்டு.பரலோகத்தின் படி திருநங்கைகள் ஆனவர்கள் உண்டுஇதை ஏற்பவன் ஏற்று கொள்ளட்டும் என்றார்.என மத்தேயு கூறுகிறார்.
மேலும் திருத்துாதர் பணிகள் நுாலில்[தி.பணி8.26-40] யேசுவின் சீடர்களில் ஒருவரான பிலிப்பு என்பவர் எத்தியோப்பியா ஊரை சேர்ந்த அங்கு நிதி அமைச்சராக கடமைபுரிந்த அண்ணகர் ஒருவருக்கு திருமுழுக்கு கொடுத்து அவரை இறைபணியில் ஈடுபடுத்தியதாக வேதநுால் கூறுகிறது.
ஆனால் மரபு வழி கதைகளின் படி இத்திருநங்கையின் பெயர் கந்தகி என்றும் அவர் பிலிப்பை சந்தித்த பின் இலங்கை வந்து வேதம் போதித்ததாகவும் கிறிஸ்தவ நாகரீகம்[ உயர்தர பாடதிட்டநுால்2011 கடுகு மரம்] கூறுகிறது.

கிறிஸ்தவத்தின் படி திருநங்கைகள் முழுதாக ஏறறுக்கொள்ளப்பட்டதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவையில்லை.திருநங்கைகள் மதிப்புக்குரியவர்கள் என்பதற்கு எஸ்தர் ஆகமம் நல்லதொரு எடுத்து காட்டு...

இப்பதிவின் மூலம் திருநங்கைகளை கிறிஸ்தவம் எவ்வாறு ஏற்று கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

1 கருத்து:

  1. ரொம்ப வித்தியாசமான பார்வை வரவேற்கிரேன்.. சில பதிவுகள் வாசித்தேன் உண்மையில் எளிமையும் அருமையுமாக இருந்துச்சு.. ஆனாலும் இள வயதில் அழுத்தத்தை சுமக்காமல் கொஞ்சம் ஜாலியாக எழுதுங்கள்..
    முதல்ல இந்த டெம்பிளேட மாத்துங்க.. கண்ணெல்லாம் நோகுது.. KEEP UP UR SIMPLE THOUGHTS N WORDS..

    பதிலளிநீக்கு