புதன், 25 ஜனவரி, 2012

திருநங்கைகளின் தாய் வீடு கூவாகம்

கூவாகம் பற்றி பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். கூவாகம் என்பது தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு ஊரின் பெயர் இதனை திருநங்கைகளின் தாய் வீடென்றே இதனை கூறலாம்.ஏனெனில் தமிழ் நாட்டு திருநங்கைகளின் தெய்வமாகிய அரவான் கோவில் அமைந்தது இங்கேதான்.இதனால் தான் இவர்களுக்கு அரவாணி எனும் பெய்ர் வந்தது.

அரவாணுக்கும் திருநங்கைகளுக்குமான தொடர்புஅரவாண் என்பவர் அர்ச்சுனனின் ஒரு மகன்.ஒரு சந்தர்ப்பத்தில் அசூரன் ஒருவனுக்கெதிராக அர்ச்சுனனும் அவர் மகன் அரவானும் போர் புரிந்தனர்.அசூரனிடம் பலத்த படைகள் காணப்பட்டன.இதனால் அர்ச்சுனன் போருக்கு உதவும் படி காளியிடம் வேண்டினர்.காளி தோன்றி ஒரு வாலிபனை நரபலி கேட்கவே அர்ச்சுனன் கடும் யோசனையில் ஆழ்ந்தார்.முடிவில் தன் மகன் அரவானையே பலி கொடுக்க கட்டளையிட்டார்.

ஆனால் அரவாணோ தான் இன்னும் தாம்பத்திய இன்பம் அனுபவிக்கவில்லை என்று கூறி மறுத்து விடுகிறார்.அதனால் அர்ச்சுனன் தன் மகனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கிறார்.எனினும் எந்த பெண்களும் அரவாணை திருமணம் செய்ய சம்மதம் கொள்வில்லை ஏனெனில் திருமணமாகி அரவாண் அடுத்த நாளே இறந்து விடுவார் என்பதால்.

இதனால் அர்ச்சுனன் விஸ்னுவின் உதவியை வேண்டவே அவரும் உதவிட விரைந்து வந்தார்.விஸ்னு தானே பெண்ணாக மாறி மோகினி எனும் திருநங்கையாக வந்து அரவாணை திருமணம் செய்து மறு நாளே அரவாண் பல கொடுக்கப்பட விதவையாகிறாள்.

இந்த மரபின் படியே திருநங்கைகள் அரவாண் கோவிலுக்கு வந்து தாலி கட்டி கொண்டு அரவாணை பலி கொடுக்கும் சடங்கு முடிந்த பிறகு தாலியறுத்து விதவையாகினறனர்.

இத்திருவிழா சிறப்புக்கள்
இத்திருவழா சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் இடம் பெறும்.மிக கோலாகலமாக இத்திருவிழா இடம் பெறும்.நாட்டின் அனைத்து பாகங்களில் இருக்கும் திருநங்கைகள் அனைவரும் இனம்,மொழி,சாதி வேற்றுமை பாராது கலந்து கொள்வர் தமிழ் நாட்டு.திருநங்கைகள் வாழ்வில் இத்திருவிழா மிகமுக்கிய இடத்தை வகிக்கிறது.இதன் போது திருநங்கைகள் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி தம் திறமைகளை வெளிகாட்டுகின்றனர்.

இக்காலகட்டத்தில்தான் திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகி போடடியும் இடம் பெறுகின்றது.ஆக மொத்தம் இக்கூத்தாண்டவர் திருவிழா திருநங்கையர் விழாவாகவே கொண்டாடப்படுகின்றது.

2 கருத்துகள்:

  1. திருநங்கைகளின் திருவிழா நல்லபடி நடந்து அவர்கள் மகிழ்ச்சியடை வாழ்த்துகிறேன்.

    நல்லதொரு பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இத்திருவிழா சித்திரையில்தான் இடம் பெறும் நண்பரே..

    பதிலளிநீக்கு