புதன், 29 பிப்ரவரி, 2012

எழுத்தாளர்களே பேச்சாளர்களே தயவுசெய்து கவனியுங்கள்நண்பர்களே நாம் ஒரு விடயத்தை பற்றி பேச வேண்டுமாயினும் சரி எழுத வேண்டுமாயினும் சரி முதலில் அந்த விடயம் பற்றி நமக்கு முழுதாக தெரிங்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா? அதுவே நமக்கும் நல்லது அடுத்தவருக்கும் நல்லது.

என் தலைப்பு எல்லா எழுத்தளர்களையும் சுட்டி நிற்கவில்லை ஒரு சிலரையே சுட்டி நிற்கிறது. அதுவும் சமூகத்தில் முன்னேறி வரும் திருநங்கைகளை பற்றி எழுதும் எழுத்தாளர்களையே வட்டம் போடுகிறது

நான் இலங்கையை சேர்ந்தவள் இலங்கையில் திருநங்கைகளை பற்றி இதுவரைக்கும் ஒரு புத்தகம் கூட வெளிவரவில்லை.இது இருக்கட்டும் நான் இந்தியாவிற்கும் வந்ததில்லை ஆனால் நான் அறிந்த வரை தமிழ்நாட்டில் சில புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அவை படிப்பதற்கான சந்தர்பம் கூட எனக்கு கிடைக்கவில்லை உதாரணமாக திருநங்கை லிவிங் ஸ்மைல் நான் வித்யா என்ற நுாலும் திருநங்கை ப்ரியா பாபுவால் மூன்றாம் பாலின் முகம் என்ற நாலும் லதா சரவணன் அவர்களால் காகித பூக்கள் என்ற நாவலும் திருநங்கை ரேவதியால் எழுதப்பட்ட உணர்வும் உருவகமும் என்ற நுாலும் என்னும் ஒரு பிரபல எழுத்தாளரால் (மன்னிக்கவும் அவர் பெயர் எனக்கு நினைவில் இல்லை) எழுதப்பட்ட அவன் +அவள்= அது என்ற நுாலும் வெளிவந்ததாக தெரிகிறது. ஆனால் அவை ஒன்றையும் நான் படித்ததில்லை நான் இவர்ளை பற்றி பேச வரவில்லை. இணைய வலைப்பதிவு எழுத்தாளாகளையே கூறுகிறேன். இவா்களின் எழுத்துளைதானே என்னால் படிக்க முடியும்

திருநங்களை பற்றி மற்றவர்களுக்கு இலகுவில் புரியாது இது ஒரு வகையில் உண்மை நாம் எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும் அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி திருநங்கையாக இருந்தாலும் சரி அவரை உடனே எடை போடுவது மிக மிக தவறு அவருடன் பழகிய பின்னரே அவரின் நடத்தையை நாம் அறிந்து கொள்ளலாம்

சில கவிஞர்கள் திருநங்கைகளை பற்றி எழுதும் போது காகித மலர்கள் என்று வர்ணிப்பார்கள் திருநங்கைகள் என்ன உயிரற்ற ஜடமா???? அவர்கள் கனி ஈன்றெடுக்கா வாசனை வீசும் அழகிய மலர்கள் (தற்போது இக்கருத்தும் திருநங்கைகளுக்கு பொருந்தாது ஏனெனில் பிரிட்டிஸ் திருநங்கை ஒருவர் ஓர்மோன் மூலம் கருப்பையை செயற்பட செய்து குழந்தை பெற்றுள்ளார்.) இன்னுமொன்றை வாசித்தேன் இவர் திருநங்கை பற்றிய ஒரு கவிதை அதை எழுதும் முன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை என் ரயில் பயண அனுபவத்தை வைத்துதான் எழுதுகிறேன் என்றுவிட்டு எழுதினார் ”திருநங்கை வாங்கி விடாதே
திருட்டு நங்கை என்ற பெயரை” இதுக்கு யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லையாம் அவர். இதை எழுதியவருடன் சம்மந்தப்பட்டது  ஒரு திருநங்கை எனினும் இவர் ஓர் மனித வர்க்கத்தை குறிக்கும் பெயரை பயன் படுத்தியது என் பார்வையில் பிழையே....

பலர் திருநங்கைகளை அர்த்தனாதீஸ்வரர் என்று வர்ணிப்பார்கள் இதை நான் பிழை கூற வரவில்லை. ஆனால் தாய்லாந் திருநங்கைகளுக்கு யார் அவர் என்பது கூட தெரியாதே.இன்னும் சிலர் ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் அலைபவர்கள் என்று எழுதியதையும் வாசித்ததுண்டு.அதென்ன ஆணில்லை என்று தானே பெண்ணாக வாழகிறார்கள். அவர்களை பெண்ணாக ஏற்று கொள்ளாவிட்டாலும் ஆண் என்று கூறாதீர்கள்.

நான் இலங்கையில் தற்போது உள்ளதால்(29.02.2012) இலங்கையில் வெளியிடப்படும் தினக்குரல் பத்திரிகை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு ஞாயிற்று கிழமை பத்திரிகையை புரட்டி படித்துக் கொண்டிருக்கையில் சபிக்கப்பட்ட பாலினம் என்ற தலைப்பை கண்டேன் அதை வாசிக்கவும் ஆரம்பித்தேன் பார்த்தால் திருநங்கைகள் பற்றிய விடயம் அதை முடித்த பின்தான் எனக்கு தெரியவந்தது அந்த கட்டுரைக்குரிய ஆசிரியர் இணையத்தில் படித்ததை சுட்டு இதை கொஞ்ஞம் மாற்றி தான் எழுதுவது போல் எழுதியிருக்கிறார். நான் இலங்கை திருநங்கைகளை பற்றி எழுதியிருப்பார் என்று பார்த்தால் இந்திய திருநங்கைகளை பற்றியே எழுதியுள்ளார். எழுதியது நல்ல விடயம்தான் எனினும் விடயத்துக்கும் தலைப்புக்கும் பொருத்தம் கிடையாது. அவர் வைத்த தலைப்பை பார்த்தீர்களா? சபிக்கப்பட்ட பாலினம் இது அவர்கள் தங்களுக்கு வைத்த பெயர் கிடையாது உலகம் அவர்களுக்கு வைத்த பெயரும் கிடையாது சிலரின் கல்லு நெஞ்சத்தால் உருவான பெயர்.

திருநங்கைகள் எல்லாரும் பாலியல் தொழிலாளிகள் என்ற கருத்து உண்டு. நான் கேட்கிறேன் ஆண்கள் கூடத்தான் ஓரின சேர்க்கை என்ற பெயரில் பாலியல் தொழில் செய்கிறார்கள் அதனால் எல்லா ஆண்களும் அப்படி ஆகிவிடுவார்களா? பெண்களும்தான் பாலியல் தொழில் செய்கிறார்கள் அதனால் எல்லா பெண்களும் அப்படி ஆகிவிடுவார்களா? இல்லையே அது போல் தான் திருநங்கைகளும். எல்லா திருநங்கைகளும் பாலியல் தொழிலாளிகள் கிடையாது பாலியல் தொழிலாளிகள் எல்லாரும் திருநங்கைகள் கிடையாது.

திருநங்கைகளை பற்றி எழுதும் முன் ஏதாவதொரு திருநங்கையை நேரில் கண்டு உரையாடுவது மிக்க நல்லது. இல்லை என்றால் விட்டுவிடுங்கள் ஏன் இந்த வீண் முயர்ச்சி

ஒரு பேச்சாளர் யூடியுப்பில்தான் அந்த நாசமா போன பேச்சை கேட்டேன் ஒரு வகையில் எனக்கு சரிப்பு மறு பக்கம் எனக்கு ஆத்திரம் நான் நினைக்கிறேன் அவருக்கு ஏதோ உளவியல் ரீதியான பிரச்சினை இருக்குமோ என்னதோ? திருநங்கைகள் அந்த மனுசனுக்கு என்ன துரோம் செய்தனரோ தெரியவில்லை மனுசன் வச்சு வாங்குது நல்ல வேளை நான் மட்டும் அந்த நிகழ்வுக்கு போகவில்லை இல்லண்ணா அங்க நடை பெற்றிருக்க வேண்டிய பேச்சே வேற....... அந்த நாசமா பேன பேச்சை நீங்களும் கேளுங்க இது நியாயமா கூறுங்க? எழுத்தாளர்களை போலதான் பேச்சாளர்களுக்கும் சொல்கிறேன் ஒரு விடயத்தை ஆய்ந்தறிந்த பிறகே அதை பற்றி எழுதவோ அல்லது பேசவோ துணிய வேண்டும்.   

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

என் கல்லுாரி காலம்

என் வாழ்வின்
கனா காலம் - அது
என் கல்லுாரி காலம்


குறும்புகள் பல செய்த 
விந்தை மிகு காலம்
தமிருந்தாலும் - இனி
கிடைக்காத காலம்


அன்பு கொண்ட நண்பர்கள்
ஆசை வைத்த ஆசான்கள்
அவர்கள் என்றும் - என்
நெஞ்சில் நீங்காத நபர்கள்


வீறு கொண்ட மின்னலாய்
நான் சுற்றி திரிந்த - என்
கல்லுாரி வளாகம் - அதை போல்
இடம் வேறென்ன வேண்டும் எனக்கு


பாடங்களை நினைவூட்டும் - என்
கல்லுாரி மணியோசை
செந்தமிழ் கற்ற பூஞ்சோலை - உங்களை
எப்படி மறப்பேன் நான்


அன்பினால் அறிவு புகட்டும் ஆசான்களும்
பிரம்பினால் ஒழுக்கம் புகட்டும் ஆசான்களும்
என்றும் என் நெஞ்சில்
நீங்காத பேரலைகள்


நண்பரோடு சண்டையிட்ட தருணங்கள்
ஆசிரியர்களுக்கு பயந்து - நடுங்கிய 
வேளைகள் - இனி
என் வாழ்வில் கிடைக்குமா???


மாணாக்கர் அனைவரும்
புத்தாடை தரிக்கும் - என்
கல்லுாரி தினம் - இனி
என் வாழ்வில் கிடைக்குமா????


வான் சிந்தும் நீர் துளியும்
ஓர் நாள் வற்றலாம்
என் உயிர் கொண்ட நாள் வரை
உனை மறவேன் கல்லுாரியே..............

எனக்கு மறு விருது

வணக்கம் என் இனிய நண்பர்களுக்கு

நான் வலைப்பூ ஆரம்பித்து 03 மாதம்தான் முடியப்போகிறது அதற்குள் இரு விருதுகள். என் வலைப்பூவிற்கான முதல் விருதை இரு நாட்களுக்கு முன் சகோதரர் ரிஷ்வன்  அவர்கள் மூலம் பெற்றேன்.என் வலைப்பூ முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றியவர் சகோதரர் மதுமதி அவர்கள். திரட்டிகளில் இணைப்பதில் இருந்து என்னை ஊக்குவிப்பது வரைக்கும் அனைத்தையும் செய்தவர் இவர் என் சகோதரர் மூலம் மறு விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.

இவ்விருதை பெற்றவர்கள் தம்மை பற்றிய விடயங்களை பகிர வேண்டும். நான் ஏற்கனவே பகிர்ந்துள்ள எனக்கு கிடைத்த முதல் விருது என்ற பதிவில் என்னை பற்றி பகிர்ந்துள்ளேன்.

மேற் கண்ட விருதை நான் என் சக தோழமைகள் ஜவருக்கு கொடுத்து நிற்கிறேன்.

 1. http://livingsmile.blogspot.com/ லிவிங் ஸ்மைல் வித்யா
 2. http://thmalathi.blogspot.com/ மாலதியின் சிந்தனைகள்
 3. http://thiviyathanancheyan.blogspot.com/ தேன் சிட்டு
 4. http://sravanitamilkavithaigal.blogspot.com/ தமிழ் கவிதைகள் தங்க சுரங்கம்
 5. http://gokulmanathil.blogspot.com/ கோகுல் மனதில்
விருது பெற்றவர்கள் விருது பெற்ற பின் செய்யும் வழிகளை பின்பற்றவும்

அன்புடன்-எஸ்தர்

சனி, 25 பிப்ரவரி, 2012

எனக்கு கிடைத்த முதல் விருது வெர்சாட்டைல் பிளாகர் விருது.

என் வலைப்பூவை தேர்வு செய்து, எனக்கு இந்த வெர்சாட்டைல் விருதை பரிந்துரை செய்து தந்தமைக்காக சகோதரர் ரிஷ்வன் (http://www.rishvan.com/) அவர்களுக்கு மிக்க நன்றி. ரிஷ்வன் அவர்கள் தன் கவி துளிகள் மூலம் பதிவுலகில் தனக்கென ஓர் இடம்பிடித்திருப்பவர் என்பது குறிப்பிட தக்கது.


இதனை ஏற்று கொண்டவர்கள் பின்வரும் விதிமுறைகளை பின்பற்றவும்.

 1. உங்களுக்கு பிடித்த 15 பிளாகர்களுக்கு இந்த விருதை வழங்கலாம்
 2. அவர்களுக்கு இச்செய்தியை மின்னஞ்ஞல் மூலமோ அல்லது பிளாகர் மூலமோ தெரிவிக்க வேண்டும்.
 3. உங்களை பற்றி மற்றவர்களுக்கு தெரியாத 07 விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 4. விருதை வழங்குபவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
 5. விருதை பெற்று கொண்டதன் அடையாளமாக அதன் சின்னத்தை உங்கள் பிளாரில் பொறித்து கொள்ளலாம்.
என்னை பற்றி தெரியாத 07 விடயங்கள்

 1. என் எழுத்துக்கான முதல் விருது என் கல்லுாரியில் ”தமிழில் பிற மொழியின் செல்வாக்கு” எனும் கட்டுரைக்காக ரூ.10000 பெற்றேன்.
 2. கல்லுாரியில் வெளிவரும் நுால்களில் என் ஆக்கம் ஏதாவதொன்று நிச்சயம் இடம் பெறும்
 3. யாழ்பாணத்தில் இருந்து முதன்முதல் திருநங்கைகள் பற்றி அறிமுகப்படுத்தியது என் எழுத்துக்கள்
 4. திருநங்கைகள் பற்றி புரட்சி கவிதைகள் நுால் ஒன்றை எழுதி வருகிறேன்
 5. என் எழுத்துக்களை திரையில் கொண்டு வருவதற்காக மாயா படித்து வருகிறேன்.
 6. எனக்கு எழுத்தாளர் ஜேம்ஸ் ஆலனை மிகவும் பிடிக்கும்
 7. எனக்கு இப்போ 19 வயது. இது முடிய 09 மாதம் உள்ளது ரீன் ஏஜ் முடிய போகிறது என்று பயத்தில் துடிக்கிறேன்??????????


கீழ் காணும் 15 பிளாகர்களுக்கு இவ்விருதை பரிந்துரை செய்கிறேன்

 1. http://www.madhumathi.com/ துாரிகையின் துாறல்-மது மதி
 2. http://veesuthendral.blogspot.com/ தென்றல் சசிகலா
 3. http://sekar-thamil.blogspot.com/ சேகர் தமிழ் சேகரன்
 4. http://www.nilapennukku.com/ நிலா பெண்ணுக்கு 
 5. http://valpaiyan.blogspot.com/ வால்பையன் 
 6. http://www.olirumiraivan.com/ ஒளிரும் இறைவன்
 7. http://www.sinthikkavum.net/ சிந்திக்கவும்
 8. http://minnalvarigal.blogspot.com/ மின்னல் வரிகள்
 9. http://www.maattru.com/ மாற்று 
 10. http://reverienreality.blogspot.com/ மெல்ல தமிழ் இனி வாழும்
 11. http://kusumbuonly.blogspot.com/ குசும்பு
 12. http://rajiyinkanavugal.blogspot.com/ காணாமல் போன கனவுகள்
 13. http://chellakirukkalgal.blogspot.com/ இந்திராவின் கிறுக்கல்
 14. http://k-a-v-i-t-h-a-i.blogspot.com/ கவிதைகள்
 15. http://saralil.blogspot.com/ கொல்லி மலை சாரலில்
விருது பெற்ற அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் மேற் கூறிய வழிகளை நீங்களும் பின்பற்றவும்.

உங்களுக்காக அன்புடன்-எஸ்தர்

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவி சரங்கள்

அடையாளம்


மேலாடை,சிவத்தவிளக்கு,கருந்திலகம்
கொல்லி வைக்க தனக்குதானே
காத்திருக்கும் கரங்கள்
அவையவங்களில் ஏதோ ஒன்று-எனும்
இழந்து போன ஆட்கள்- இவையே
இன்றைய எம் தமிழினத்தின் அடையாளம்
மறந்த பின்னும் காதல்....


உன்னை மறக்க நினைக்கும்
பொழுதுகளில் எல்லாம்
உன்னைத்தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து-உன்னையே
நினைக்கிறேன்


கண் இமையாத நாளும் 
உண்டா வாழவில்-அது போல்
உனை நினையாத நாளும்
உண்டா.......................


நாம் சேர்ந்து ரசித்த
பசுமையான நினைவுகள்
இன்றும் என் நெஞசில்
சல்லடை போடுகின்றன.


சிலுவை வலி கூட
மும்மணி நேரம்தான்
காதல் வலியோ
கண் மூடும் நேரமும்
தொடரும் வலி....


கல்லறை


நல்லவராயினும்
தீயவராயினும்...
நிம்மதியாக துாங்கும்
ஆறடி அரண்மனை.


திருமணம்


ஈர் உயிர்கள் 
ஓருயிராகும் சடங்கு


உன் இதயம்  


நான் இரண்டாம் முறை
குடி கொண்ட கருவறை


இவள் ஒரு திருநங்கை


ஆண்மையை நிழலாக்கி
பெண்மையை நிஜமாக்கிய
அதிசய பெண்ணிவள்


கனி ஈன்றெடுக்கா
அழகிய மலரிவள்
சாபத்தின் கோலமல்ல
படைப்பின் விசித்திர
பெண்ணிவள்


கஸ்ரப்பட்டு வாழும் வாழ்க்கையை
இஸ்ரப்பட்டு வாழும் மனுசிகள்
பிறப்பின் நியதியை
மாற்றி எழுதிய அற்புதவரத்திகள்  

பிரம்மன் படைப்பில்
விசித்திரமானவள்
இவள் ஒரு திருநங்கை......

திங்கள், 20 பிப்ரவரி, 2012

எஸ்.என் லட்சுமி பாட்டிக்கு என் கண்ணீர் பூக்கள்

விண்மீன் ஒன்று - ஒளி
தணிந்திற்று
கடல் முத்தொன்று
அதன் சிற்பியிற்
தவறிற்று

மாபெரும் சுடர்
அணைந்து விட்டது
மண் வேண்டாம் என்று
மண்னை விட்டு சென்று விட்டது

உன் போல் தலை முறை
நட்சத்திரம் - இனி
எமக்கு கிடைக்குமா? நீ
சந்திக்காத நட்சத்திரம் - உண்டோ
இத்தமிழ் நாட்டில்.....

தென்றலில் உன்னை
பார்த்து பொறாமை கொண்டேன்
இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாயே - என்று
என் கண்தான் பட்டதோ பாட்டி
உனக்கு இந்நிலை

உன்னை கண்டதில்லை - ஆனாலும்
என் கண்களில் கண்களில் கண்ணீர்
உன்னை பார்த்ததில்லை - ஆனாலும்
என் நெஞ்சில் பதற்றம்..

செந்தணலில் உன் உடல்
வேகப் போகிறதே - ஜயோ
ஆனாலும் உன் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது

மார்பில் அடிக்கிறேன்
வாயோயாது புலம்புகிறேன்
ஆனாலும் உன் உடலை
இறுதியாக பார்க்கும் பாக்யமும்
எனக்கில்லையே பாட்டி

உன்னை நான் எப்போது பார்ப்பேன்
உன் நடிப்பை எப்படி ரசிப்பேன்
மீண்டும் அந்த காலன்
உன் உயிரை கொடுத்தால்
அவனுக்கு மாபெரும் கோவில் கட்டுகிறேன்

எஸ்தர்

சுவர்ணக்குயில் சுவர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை


தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகிகள் உள்ளனர். ஆனால் சுவர்ணலாதாவைப் போல் சோகக் குரல் கொடுக்க கூடிய பாடகி யாதொருவரும் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லை. இது பாடகி அனுராதாவின் கருத்து.

இக்கருத்து நுாற்றுக்கு நுாறு விகிதம் உண்மை. எனக்குப் பிடித்த தமிழ் பாடகிகளில் முதலானவர் சுவர்ணலதா. அதிகம் பகட்டு காட்டாத பாடகி. அமைதியான சுபாவம் கொண்டவர். இசைக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்.

1987ம் ஆண்டு இவரது 14வது வயதில் மு.கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்கு தண்டனை திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வனதனின் இசையில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..... எனும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து குரு சிஷ்யன்,சத்திரியன்,சின்னத் தம்பி,கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் பாடி மிகப்பிரபல பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார்.

பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ் விஸ்வனாதன், எ.ஆர்.ரகுமான், இளையராயா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா என பலர் இசையில் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு.


இவரின் விருதுகள் • கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற போறாளே பொண்ணுத்தாயி... பாடலுக்காக 1994ல் இந்திய நாடடின் தேசிய விருது கிடைத்தது
 • இரு முறை தமிழ் நாட்டின் சிறந்த பாடகிக்கான விருதை கருத்தம்மா,சின்னத் தம்பி ஆகிய படங்களுக்குப் பெற்றார்.
 • 1994ல் தமிழ் நாட்டின் சிறந்த பாகிக்கான கலைமாமணி விருது பெற்றார்.
 • ஜந்து முறை சிறந்த பாடகிக்கான சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது றெ்றார்.
 • ஜந்து முறை சிறந்த பாடகிக்கான ப்லிம் பேர் விருது பெற்றார். 
இவ்வாறு பல விருதுகளை வேண்டிய போதும் கூட சுவர்ணலாதா பற்றிய குறிப்புகள் மீடியாக்களில் மிக குறைவே. அவரின் திறமைக்கும் குரலுக்கும் ஏற்ற மதிப்பை தமிழ் சினிமா தர மறுத்துள்ளதோ என்பது என் சந்தேகம்.(மறைவுக்கு முன்) அவரின் மறைவுக்குப் பின்னரே அவர் பற்றி ஏராளமான தகவல்கள் வலையுலகில் உலா வர ஆரம்பித்தன.

சுவர்ணலதா தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம், உருது, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் கொடிகட்டி பறந்த பாடகி.

அதுமட்டுமல்ல தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு சுவர்ணலதாவின் இழப்பு பேரிடி காரணம் ஏராளமான தமிழ் கத்தோலிக்க பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு கொடுத்த பெருமை இவரையே சாரும். அதில் இவரின் நீயே நிரந்தரம், மண்ணில் கலந்திடும் மழைத்துளி, இன்பக் கனவொன்று, நிலையில்லா உலகு போன்ற பாடல்கள் சர்வ உலக தமிழ் கத்தோலிக்க உலகமே இன்றும் பாடி மகிழும் பாடல்கள். இப்படிப்பட்ட பாடகியின் இழப்பு யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. தமிழ் சினிமா எப்படி இவர் இழப்பை ஈடுகொடுக்கிறதோ தெரியவில்லை

சனி, 18 பிப்ரவரி, 2012

இசைப்ரியாவுக்கு நீதி வேண்டும்

இப்பதிவு ஒரு கலைஞ்ஞருக்கு நடந்த அவலத்தை கூறுவதற்காக பதியப்படுகிறது தவிர எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்து நிற்கவில்லை

இசைப்ரியா இவரை ஈழத்து கலை அரசி என்று கூறுவது மிகையாகாது. விடுதலைப்புலிகளிள் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயற்பட்டவர். தமிழே என் மூச்சு என்று வாழ்ந்தவர் அழகும் அறிவும் இவர் தனித்துவம். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

சிங்கள ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நடந்த இறுதிகட்ட யுத்தத்தின் போது இவர் தொலைக்காட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் அப்போதுதான் இசைப்ரியாவுக்கு திருமணமாகி ஆறு மாத கைக்குழந்தை இருந்ததாக தற்போது புணர் வாழ்வு நிலையங்களில் இருந்து மீண்டு வரும் பெண் போராளிகள் கூறுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது இசைப்ரியா சிங்கள் வெறியர்களிடம் சிக்கியிருக்லாம் என்பது அப்பெண் போராளிகளின் கருத்து. ஏனென்றால் இசைப்ரியா யுத்தில் ஈடுபட்டிருக்க வாய்புக்கிடையது. சில வேளைகளில் அவர் ஆயுதம் ஏந்த கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில்தான் இவரின் ஆறு மாத குழந்தை இறந்ததாக அவர்கள் கூறினர்.தங்களோடு அவரை அழைத்த போதும் கூட அவர் கணவருக்காக முள்ளிவாய்காலில் காத்திருப்பதாக கூறி வர மறுத்ததாக அப்பெண் போராளிகள் கூறினர்.ஏனெனில் அவர் கணவர் விடுதலைப்பலிகள் இயக்கப் போராளி.

அதன் பின் தாங்கள் அவரைக் காணவில்லை என்ன நடந்தது என்பது இப்போதுதான் தெரியுது என்றும் கண்ணீர் வடிய அவர்கள் கூறினர்.

அப்போது என்ன நடந்தது என்பது உலகிற்கே இப்போது தெரியுமே பல பெண் போராளிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த போதும் மனித நேயம் கொண்டவர்களிடம் சிக்கிய சிலரே புணர் வாழ்வு நிலையம் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் சிங்கள் வெறியர்களின் காம பசிக்கு இலக்காகி உயிர்விட்டனர்.

அப்படிப்பட்ட நிலையே இசைப்ரியாவுக்கும் நேர்ந்தது. சனல் 04 ஆவணப்படத்தில் அவரின் சிதைக்கப்பட்ட உடலைக்கண்டு அதிர்ந்து போனேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை ஒரு நாள் கல்லுாரி நடவடிக்கைக்காக வன்னி சென்றிருந்தேன் ஆசிரியர்களோடு அப்போதுதான் இசைப்ரியாவை முதலும் கடைசியுமாக பார்த்தேன் அவர் கையால் தோசையும் சாப்பிட்டேன். இதை நினைத்து நான் புலம்பினேன் ஒரு கலைஞருக்கு இந்த நிலையா????

வாழ் நாளிலில் அவர் ஈழத்துக்கு ஆற்றிய கலைச் சேவை மிகப் பெரிது இப்படிப்பட்ட கலை அரசியை நாய்களும்,நரிகளும் சேர்ந்து கடித்தது சரிதானா??
இசைப்ரியாவுக்கு நீதி வேண்டும்.....................
வியாழன், 16 பிப்ரவரி, 2012

நிம்மதி

நான் வாழும் போது
ஒரு கவிதை எழுதினேன்
புரட்டி புரட்டி படித்தும்........
அதன் அர்த்தம் எனக்கு
புரியவில்லை..

நான் அமரத்துவம்
பெற்ற பின்
என் கல்லறை தோட்டத்தில்
சிலர் அக்கவியை பொறிக்க
கண்டேன்

அம் மந்தமாருதத்தில்
தென்றலோடு தென்றலாய்
அதை வாசித்தேன்
அப்போதுதான் அதன்
அர்த்தம் அறிந்தேன்......

அக் கவியே நிம்மதி...............

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கிருமிகளை அழிக்கும் ஏலக்காய்

பார்சல் உணவுகளை உணவகங்களில் வாங்கும் போது பணியாளர்கள் பொலித்தீன் பையை வாயாயால் ஊதியும் விரல் நுனியால் பிரித்தும் கட்டி கொடுப்பதால் பல் வேறு வகையாக கிருமிகள் அவர்களின் வாய்காற்று, எச்சில்துாறல்,நகஅழுக்கு போன்றவற்றின் மூலம் எம்மை அடைகின்றன.

இட்லி மாவை புளிக்கச்செய்தல் உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு 150 வகையான கிருமிகள் பயன் பட்டாலும் எஞ்சியவை பல் வேறு வகையான நோய்களை பரப்ப உதவுகின்றன.ஆண்களை விட பெண்களுக்கு நுண்கிருமிகளின் தாக்கம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வியர்வை,தோலில் எண்ணெய் சுரப்பு,நாம் பயன் படுத்தும் சவர்காரம்,கை கழுவும் முறை போன்றவற்றிலிருந்து எம்மை அணுகும் கிருமிகளின் எண்ணிக்கை கூடவோ,குறையவோ செய்கிறது. தோலை விட உள்ளங் கை, வாயின் உட்புறம் போன்றவற்றில் கிருமிகள் அதிகம் இருப்பதால் இவற்றின் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

காட்டு ஏலக்காய் கிருகளை அழிக்க மிக்க வல்லது.இதன் தாவரவியல் பெயர் அமோமம் சபுலேட்டம் ஆகும்.ஜிஞ்ஜி பெராசியே குடும்பத்தை சார்ந்தது.

பலர் எண்ணப்படி ஏலக்காய் வாசனைக்கு மட்டுமே பயன்படுகிறது என்று இது ஒரு வையில் உண்மையாக இருக்கலாம். ஆனால் நம் பழைய சமையல் பண்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது இது வயிறு உபாதைகள், செரிமானம் போன்றவற்றிற்கு நிவாரணியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ முறை
ஏலக்காய் 20 கிராம், இலவங்கம் பட்டை 20 கிராம், சிறுநாம் பூ 20 கிராம்,சுக்கு 20 கிராம், மிளகு 20 கிராம், திப்பிலி 20 கிராம், வாய்விடங்கம் 20 கிராம்,மல்லி விதை 20 கிராம்.ஆகியவற்றை சுத்தம் செய்து இளமாக வறுத்து இடித்து டிபாடி செய்து சலித்து, 120 கிராம் நாட்டுச்சக்ரை கலந்து வைத்து கொள்ள வேண்டும்.01 முதல் 02 தே கரண்டி விகிதம் உணவுக்கு முன் உண்டு வர வயிற்று உபாதைகள் எதுவாக இருந்தாலும் அடியோடு மறைந்து விடும்.

காதலை காவியமாக மாற்றிய காதலர்கள்

புகழ் பூத்த காதலர்கள் பலர் உள்ளனர். எனினும் காதலை காவியமாக மாற்றிய காதல் யோடிகள் சிலரே.அந்த வரிசையில் சில காதல் யோடிகள்........

அம்பிகாவதி அமராவதி
தமிழ் காவிய காதல் யோடிகள் பலர் உள்ளனர். எனினும் மறைந்தும் தமிழ் மக்களின் வாழ்வில் நுளைந்த காதலர்கள் என்றால் அம்பிகாவதி அமராவதி காதல் யோடிகளே.

கம்பனின் மகன் அமராவதி குலோதுங்க சோழன் குடும்ப இளவரசி அம்பிகாவதி இந்த இருவருக்கும் காதல் நுளைந்தது எப்படி?கல்வி கற்ற கம்பன் வீடு வந்து சென்ற அம்பிகாவதி கம்பன் இல்லாத வேளையில் அமராவதியிடம் காதலை கற்று சென்றாள்.காதலை அறிந்த மன்னன் அமராவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.

சிற்றின்பம் கலக்காமல் நுாறு படல்கள் பாடினால் அம்பிகாவதி கிடைப்பாள் என அமராவதியிடம் புலவர் ஒட்டக்கூத்தர் போட்டியொன்றை நடத்துகிறார். மன்னனும் அமராவதியும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.அமராவதி கடவுள் வாழ்த்தைசேர்த்து நுாறு படல்கள் பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரதழுவி கொள்கிறாள்.

கடவுள் வாழத்தை தவிர்த்து 99 பாடல்கள்தான் பாடப்பட்டது என அமராவதிக்கு மரணதண்டணை வழங்கப்படுகிறது.அவன் இறந்த செய்தி அறிந்த அம்பிகாவதியும் அவன் மார்பில் புலம்பி அழுது உயிர் நீர்க்கிறாள்.

ஷாயகான் மும்தாஜ்
யாராலும் மறக்க முடியாத உலக அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகாலை நமக்கு தந்தது இந்த காதல் யோடிதான். ஷாயகான் ஜாங்கீர் அரசனின் மகன் இவர்கள் மொகலாய வம்சத்தை சேர்ந்தவர்கள்

ஷாயகான் மனைவியர் பலரை கொண்டிருந்த போதும் அவர் மனங்கவர் நாயகியாக இருந்தவர் அவரால் மிகவும் அன்பு செய்யப்பட்டவர்.
மும்தாஜ். இவருக்கு 14வது குழந்தை பிரசவிக்கும் போது இறந்து விட்டார்.அவரின் பிரிவால் துயருற்ற மன்னன் ஆட்சிப் பொறுப்புகளை கூட சரி வர நிறை வேற்றாமல் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அதன் விளைவாக உருவானதே இந்த தாஜ்மகால்.

லைலா மஜ்னு
அரபு நாட்டு காதல் யோடிகள் இவர்கள் பள்ளி பருவத்தில் நட்பாக இருந்த இருந்த இவர்கள் உறவு பின் காதலாக உருவெடுத்தது.காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடை விதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலாவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர். ஆனாலும் செல்வந்தனுக்கும் லைலாவுக்கும் எந்த ஒரு உறவும் இருக்கவில்லை.

மஜ்னுவின் நினைவிலேயே வாழ்ந்த லைலா அவனை தேடி பல இடங்களில் அலைந்தாள். ஒரு வழஜயாக அனை கண்டுபிடித்தாள் அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்தாள்.

இதை அறிந்த பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர்.மஜ்னுவை மறக்க முடியாத லைலா அவன் நினைவில் இறந்து போனாள்.அதே நிலையே மஜ்னுவுக்கும்.

ரோமியோ ஜீலியட்
விருந்து விழா ஒன்றில் சேர்ந்து நடனமாட வாய்ப்பு கிடைத்த இந்த யோடிகள் காதலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் கால் வளர்ந்தது. குடும்ப பகை இவர்கள் காதலுக்கு குறுக்கே நின்றது.

இதனால் பெற்றோரை ஏமாற்ற விஷம் அருந்தியது போல் நடித்தாள் ஜீலியட் இதை அறியா ரோமியோ உண்மையிலேயே விஷம் அருந்தி இறக்க அவன் வைத்த மிகுதி விஷத்தை இவளும் குடித்து மரணிக்கிறாள்.

கண்ணன் மீரா
வரலாற்றில் யோடி காதல் காவியமானது பொல் ஒருதலை காலும் காவியமானது இந்த விசித்த பெண் மீராவால் கடவுளை பலரும் பலவிதமா வழிபட்டதை வரலாற்றில் நாம் அறியலாம் ஆனால் மீரா கண்ணனை தன் காதனாக கொண்டு அருடனே குடும்பம் நடத்தி துாரத்தில் இருந்து அவரை அனுபவித்த படி வாழ்தாள்.

இந்த பக்தி நிறைந்த தெய்வீக காதல் என்னை பொறுத்த மட்டில் காவிய காதலே மனிதன் நாகரீகம் பற்றி அறிய தொடங்கிய போது உருவான இந்த காதல் உணர்வு காலங்கள் பல கடந்தாலும் வாழ்ந்து வளர்ந்து வருகிறது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

விட்டில்ப் பூச்சி

பசிக்கிறது என்ற குழந்தைக்கு
புசிக்க கொடுக்க ஏதுமில்லை
சாம்பல் பூத்த அடுப்பும்
நெருப்பு பூத்த இடுப்புமின்றி
வெற்று மார்பை எதிர்பார்த்து
பெற்ற பிள்ளை சலிச்சு போச்சு

உலை கொதிக்கவில்லை
அதனால் முலை சுரக்கவில்லை
விற்பதற்கும் ஏதுமில்லை
கற்பை தவிர இப்போ......

பன்னீர் களித்த படுக்கையில்
கண்ணீர் கரையும் அவள் இரவுகள்........

பேரொளிக்காக-உ.குயில்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

பிச்சைக்கார பொலிஸ்காரர்கள்

லங்கையில பிச்சைகாரங்க தொல்ல அதிகமாகிவிட்டது. அவங்களுக்கெல்லாம் காக்கி உடைகொடுத்து கையில் தட்டுக்குப் பதிலாக துப்பாக்கி ஏந்திய படி பிச்சை கேட்கிறார்கள்.வாசித்த உங்களுக்கு ஒரு வேளை புரிந்திருக்கலாம் இந்த எஸ்தர் என்ன விடயத்தை சொல்ல வருகிறாள் என்று சரி விடயத்துக்கு வருகிறேன்.

இது நான் நேரில் கண்டு அனுபவித்தவை அதற்கு மேல் அருவருத்தவை. யாழ்ப்பாணத்தில் யாழ்நகருக்கு அடுத்த படியாக குருநகர் எனும் மீனவ கிராமம் உண்டு அதுதாங்க என் ஊர்.அங்கே புனித.யாகப்பர் தேவாலயம் எனும் கத்தோலிக்க தேவாலயம் உண்டு இதுவே குருநகர் மக்களின் பூர்வீக தேவாலயம்.ஆண்டு தோறும் இதன் திருவிழா ஆடிமாத்தில் கொண்டாடப்படும்.அப்போது அவ்வூர் இளஞர்களின் ஆரவாரத்தையும் கொண்டாட்டத்தையும் குடிபோதையும் என் எழுத்துக்களால் விபரிக்க முடியாது.

முன்னைய இலங்கையில் பொலிஸ் அதிகாரம் அறவே குறைவென்றுதான் கூற வேண்டும். ராணுவ ஆட்சியே இடம் பெற்றது.யுத்த ஓய்விற்குப்பிறகு ராணுவத்துடன் இணைந்த பொலிஸ் ஆட்சி வந்துள்ளது.முன்பெலாம் சாரதி அனுமதிப்பத்திரம் பார்ப்பதே கிடையாது இப்போது சந்திக்கு சந்தி ஒரு புத்தகத்துடன் கதிரை போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.என்னத்திற்கு பிச்சை வாங்குவதற்கு.

சரி திருவிழா விடயத்திற்கு வருவோம்.அந்தநாள் இளஞர்கள் பலர் மோட்டார் வாகனத்தில் அறம்புறமாக சென்று திரிந்தனர் காரணம் மதுவின் மகிமை.அவர்களை சில பொலிஸ்காரர்கள் இடைமறித்து சாதி அனுமதிப் பத்திரம் விசாரித்தனர்.அவர்களிடம் அவர்களிடம் அது இல்லை என்று கூறினர். அதற்கு பொலிஸ்காரர்கள் சற்று விரட்டுவது போல் பார்த்து கொண்டு நின்ற எனக்கு தெரிந்தது.ஆனால் அந்த கேடுகெட்ட பொலிஸ்காரர்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா? 02 போத்தல் சாராயமும் கோழிப் பொரியலும் பாத்திங்களா??? பிச்சை கேட்க இப்படியெல்லாம் கிளம்பிட்டாங்க.

இது போக நானும் எனது தோழியரும் என் உறவினர் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தோம்.ஒவவொரு சந்திகளிலும் பலத்த சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் பாடல்கள்போக மப்பும் மந்தாரத்துடனும் இளஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர்.இதனால் அவர்களுக்கு பயந்து நாங்கள் குறுக்கு வழிகளில் பயணித்தோம் அங்கு நடந்த கூத்தை ஏன் பறைவான் பொலிஸ்காரர்கள் இரண்டு பேர் பொலிஸ் ஆடையுடன் இளஞர்களோடு இணைந்து மது அருந்திக் கொண்டிருக்கின்றனர் நாங்கள் அவர்களை கடக்கும் போது கிண்டலும் நக்கலும் வேற அந்த தரித்திரங்களுக்கு.இந்த பொஸ்காரர்கள் எல்லாருமே சிங்களவர்களாக கொச்சை தமிழ் பேசுபவர்களாகவும் காணப்பட்டனர்.இது அதவிட பிச்சை தனமல்ல.

இங்கதான் திருவிழா காலத்தில்தபன் இப்படியென்று பார்த்தால் எல்லா நாளுமே சாரதி அனுமதிப்பத்திரம் கேட்டு பிச்சை வாங்குகிறார்கள் இந்த பொலிஸ் பிச்சை காரர்கள்.
இதில் நான் ஒருவிடயத்தை எண்ணி றொம்ப பெருமைபட்டேன் இப்ப சிங்களவர்கள் தமிழனிடம் பிச்சை கேட்கிறார்களே என்று இத்துடன் இந்த பிச்சை காரர்களின் கட்டுரையை முடிக்கிறேன்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

இலங்கையில் சுதந்திர தினம் எதற்கு??

இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்களுக்கு மேலாகி விட்டது.ஆனால் அங்கு வசிக்கும் தமிழ்களுக்கு சுதந்திரம் என்னும் இல்லை என்பது உலகம் கண்டும் காணா உண்மை.

இன்று மாசி 04ம் நாள் இலங்கை சுதந்திர தினம்.ஆனால் அங்குள்ள தமிழர்களுக்கோ??????? ஆனாலும் வரும்பியோ விரும்பாமலோ இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்.வாழ்வை தொலைத்த வன்னி மாமக்கள் இன்று உன்ன நிலை என்பது உலகிற்கு தெரியுமா? ஓலை குடிசையில்தான் முன்னும் வாழ்ந்தனர் எனினும் சந்தோஷமாக குடும்பமாக இன்றும் ஓலை குடிசையில்தான் வாழ்கின்றனர் எனினும் அந்த குடும்பம் எங்கே? அந்த நிம்மதி எங்கே? சந்தோஷம் எங்கே எல்லாம் எறிகணை குண்டுகளின் புழுதியோடு சென்றுவிட்டன.

ஓடியாடி விளையாடிய செம்மண் வீதிகள் இன்று குன்றும் குழியுமாய் கிடக்கின்றன.யாரும் அற்ற அனாதையாய் எம் குழந்தைகளும் ஆயன் அற்ற ஆடுகளாய் எம் தமிழ் மக்களும் இன்று உள்ளார்கள்.உச்ச நாற்காலியில் அட்டணைகால் போட்டு சிங்களவன் சிக்கன் சாப்பிட வன்னி மக்களோ பழம் கோதுமையில் மூங்கில் ஓட்டையில் புட்டவித்து உண்ணும் பரிதாபம் சொல்ல என் எழுத்துகளுக்கு தெம்பில்லை.

சுதந்திரம் என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா?அந்த சிங்கள அரசுக்கு சுதந்திரம் என்பது அடுத்தவருக்கு தீங்கு ஏற்படாதவாறு எம்மனதின் விருப்பின் படி செயல்படுவது சுதந்திரம் இது நான் அரசறிவியல் பாடத்தில் கற்ற வரைவிக்கணம்.சுதந்திரம் சிவில் சுதந்திரம் அரசியல் சுதந்திரம் குடியியல் சுதந்திரம் என் பொதுவாக மூன்று வகைப்படும்.இவற்றுள் ஏதாவது ஓன்றையேனும் தமிழர்கள் முழுதாக அனுபவிப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதைபற்றி மேலும் பேசி அர்த்தமில்லை தமிழர்கள் உலகிற்கு என்ன துரோம் செய்தனரோ தெரியவில்லை.உலகம் இப்படி தமிழர்களை பகைக்கிறது.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பால் திரைப்படம் வெளிவருமா? வராதா?

அனேகருக்கு என்னடா இது புது பெயராக இருக்கே என் எண்ணலாம்.உண்மை அது கிடையாது ,இப்படம் தொடங்கப்பட்டது 2010ல் ஆனால் என்னும் இப்படம் வெளிவரவில்லை.

ஒரு திருநங்கைக்கும் ஆணுக்குமான காதலை உணர்ச்சி ததும்பும் வகையில் இப்படம் சொல்லும் என்கின்றனர் படகுழுவினர் ஏற்கனவே திருநங்கைகளின் காதலை தொட்டு சென்றது நர்த்தகி அதற்கடுத்ததாக திருநங்கைகள் பற்றி வெளிவர இருக்கும் முழுநீள திரைப்படம் என்னை பொறுத்த மட்டில் பால் கதிர் நாயகனாக அறிமுகமாக மும்பாய் தமிழ் சமூகத்தை சேர்ந்த திருநங்கை கற்பகா நாயகியாக அறிமுகமாகிறார்.அதனுடன் இன்னுமொரு நாயகியாக வினிதா அறிமுகமாகிறார்.

படம் தொடங்கப்பட்டு 03 வருடமாகிறதே இயக்குனர் சங்கர் கூட தன்படத்தை இவ்வளவு நாள் இழுக்கமாட்டார் போல் தெரிகிறது.ஈனால் பாலை பற்றிய தகவல்கள் ஒன்றையும் காணோம்.கூகுள்ளில் தேடினாலும் கிடைப்பது திருநங்கை கற்பகா பற்றிய விடயங்கயே.இப்படத்திற்கு என்ன ஆச்சு என தெரியவில்லை.என்ன சிரமமோ புரியவில்லை


இப்படம் பற்றி தெரியவந்தால் சொல்வீர்களா?????