வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

இலங்கையில் சுதந்திர தினம் எதற்கு??

இலங்கை சுதந்திரமடைந்து அறுபது வருடங்களுக்கு மேலாகி விட்டது.ஆனால் அங்கு வசிக்கும் தமிழ்களுக்கு சுதந்திரம் என்னும் இல்லை என்பது உலகம் கண்டும் காணா உண்மை.

இன்று மாசி 04ம் நாள் இலங்கை சுதந்திர தினம்.ஆனால் அங்குள்ள தமிழர்களுக்கோ??????? ஆனாலும் வரும்பியோ விரும்பாமலோ இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்.வாழ்வை தொலைத்த வன்னி மாமக்கள் இன்று உன்ன நிலை என்பது உலகிற்கு தெரியுமா? ஓலை குடிசையில்தான் முன்னும் வாழ்ந்தனர் எனினும் சந்தோஷமாக குடும்பமாக இன்றும் ஓலை குடிசையில்தான் வாழ்கின்றனர் எனினும் அந்த குடும்பம் எங்கே? அந்த நிம்மதி எங்கே? சந்தோஷம் எங்கே எல்லாம் எறிகணை குண்டுகளின் புழுதியோடு சென்றுவிட்டன.

ஓடியாடி விளையாடிய செம்மண் வீதிகள் இன்று குன்றும் குழியுமாய் கிடக்கின்றன.யாரும் அற்ற அனாதையாய் எம் குழந்தைகளும் ஆயன் அற்ற ஆடுகளாய் எம் தமிழ் மக்களும் இன்று உள்ளார்கள்.உச்ச நாற்காலியில் அட்டணைகால் போட்டு சிங்களவன் சிக்கன் சாப்பிட வன்னி மக்களோ பழம் கோதுமையில் மூங்கில் ஓட்டையில் புட்டவித்து உண்ணும் பரிதாபம் சொல்ல என் எழுத்துகளுக்கு தெம்பில்லை.

சுதந்திரம் என்பதற்கு வரைவிலக்கணம் தெரியுமா?அந்த சிங்கள அரசுக்கு சுதந்திரம் என்பது அடுத்தவருக்கு தீங்கு ஏற்படாதவாறு எம்மனதின் விருப்பின் படி செயல்படுவது சுதந்திரம் இது நான் அரசறிவியல் பாடத்தில் கற்ற வரைவிக்கணம்.சுதந்திரம் சிவில் சுதந்திரம் அரசியல் சுதந்திரம் குடியியல் சுதந்திரம் என் பொதுவாக மூன்று வகைப்படும்.இவற்றுள் ஏதாவது ஓன்றையேனும் தமிழர்கள் முழுதாக அனுபவிப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதைபற்றி மேலும் பேசி அர்த்தமில்லை தமிழர்கள் உலகிற்கு என்ன துரோம் செய்தனரோ தெரியவில்லை.உலகம் இப்படி தமிழர்களை பகைக்கிறது.

2 கருத்துகள்:

 1. இலங்கையில் சுதந்திர தினம் எதற்கு?? இது என்ன கேள்வி சகோதரியே.... நான்கு மதத்தினருக்கும் இலங்கையில் சுதந்திரம் உண்டு. ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். தனிநாடு வேண்டும் என்று நாட்டையும் குழப்பி தமிழ் குழப்பியது தமிழன் தானே..... புலித்தோல் போர்த்திய பூனையாக....

  சுதந்திரட்இ விடுதலைஇ உரிமை என்ற பெயர் கொண்டு தமிழ் மக்களையும் மடையர்களாக்கி பல்லாயிரக் கணக்காக உயிர்களை பறித்துவிட்டு எமது வாழ்க்கையையும் மண்ணோடு மண்ணாக்கிவிட்டு இவர்கள் மாத்திரம் என்ன பலன் கண்டார்கள்? 30 வருட யுத்தம்? என்ன பயன்? இந்த 3 வருடத்தில் தமிழன் அடைந்த சந்தோசம் அதற்கு முன்னர் அடைந்ததுன்டா? போலியாக வாழாதீர்கள் சகோதரியே!! அடுத்தவர்களை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றுவது உங்களது வழமையா? இல்லை மடமையா??

  இதை மறந்து விட்டு இவ்வாறு இன்னும் இன்னும் மடமையில் மனச்சாட்சிக்கு விரோதாமாய் புலிக்கு வக்காளத்து வாங்காதீர்கள் சகோதரியே....

  தமிழர்களின் சாபக்கேடு புலிகளும் புலிப் பினாமிகளான தமிழ் கூட்டமைப்பும் தான் என்பதை தமிழிச்சியாக நான் ஆழ்ந்த கவலையுடன் கூறிக்கொள்கின்றேன். மடமையில் இருக்கும் உங்களைப் போன்ற பலரை அறிந்துள்ள எனக்கு இதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். என்ற அவாவுடனே இந்த கருத்து... மனஞ் சங்கட பட்டிருந்தால் மன்னிக்கவும். உண்மையச் சொல்ல துணிவு மட்டுமெ போதுமானது..

  பதலளிக்க விரும்பினால் எனது ஈமெயில் முகவரி:
  கிழக்குப் பல்கலைக்கழகம்
  மட்டக்களப்பு.

  பதிலளிநீக்கு