ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

விட்டில்ப் பூச்சி

பசிக்கிறது என்ற குழந்தைக்கு
புசிக்க கொடுக்க ஏதுமில்லை
சாம்பல் பூத்த அடுப்பும்
நெருப்பு பூத்த இடுப்புமின்றி
வெற்று மார்பை எதிர்பார்த்து
பெற்ற பிள்ளை சலிச்சு போச்சு

உலை கொதிக்கவில்லை
அதனால் முலை சுரக்கவில்லை
விற்பதற்கும் ஏதுமில்லை
கற்பை தவிர இப்போ......

பன்னீர் களித்த படுக்கையில்
கண்ணீர் கரையும் அவள் இரவுகள்........

பேரொளிக்காக-உ.குயில்

1 கருத்து:

  1. வறுமையின் தவிப்பை யதார்த்தமா சொல்லி இருக்கீங்க அருமை .

    பதிலளிநீக்கு