சனி, 18 பிப்ரவரி, 2012

இசைப்ரியாவுக்கு நீதி வேண்டும்

இப்பதிவு ஒரு கலைஞ்ஞருக்கு நடந்த அவலத்தை கூறுவதற்காக பதியப்படுகிறது தவிர எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்து நிற்கவில்லை

இசைப்ரியா இவரை ஈழத்து கலை அரசி என்று கூறுவது மிகையாகாது. விடுதலைப்புலிகளிள் தொலைக்காட்சி ஊடகவியலாளராக செயற்பட்டவர். தமிழே என் மூச்சு என்று வாழ்ந்தவர் அழகும் அறிவும் இவர் தனித்துவம். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

சிங்கள ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நடந்த இறுதிகட்ட யுத்தத்தின் போது இவர் தொலைக்காட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் அப்போதுதான் இசைப்ரியாவுக்கு திருமணமாகி ஆறு மாத கைக்குழந்தை இருந்ததாக தற்போது புணர் வாழ்வு நிலையங்களில் இருந்து மீண்டு வரும் பெண் போராளிகள் கூறுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் போது இசைப்ரியா சிங்கள் வெறியர்களிடம் சிக்கியிருக்லாம் என்பது அப்பெண் போராளிகளின் கருத்து. ஏனென்றால் இசைப்ரியா யுத்தில் ஈடுபட்டிருக்க வாய்புக்கிடையது. சில வேளைகளில் அவர் ஆயுதம் ஏந்த கூடிய நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறான சூழ்நிலையில்தான் இவரின் ஆறு மாத குழந்தை இறந்ததாக அவர்கள் கூறினர்.தங்களோடு அவரை அழைத்த போதும் கூட அவர் கணவருக்காக முள்ளிவாய்காலில் காத்திருப்பதாக கூறி வர மறுத்ததாக அப்பெண் போராளிகள் கூறினர்.ஏனெனில் அவர் கணவர் விடுதலைப்பலிகள் இயக்கப் போராளி.

அதன் பின் தாங்கள் அவரைக் காணவில்லை என்ன நடந்தது என்பது இப்போதுதான் தெரியுது என்றும் கண்ணீர் வடிய அவர்கள் கூறினர்.

அப்போது என்ன நடந்தது என்பது உலகிற்கே இப்போது தெரியுமே பல பெண் போராளிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த போதும் மனித நேயம் கொண்டவர்களிடம் சிக்கிய சிலரே புணர் வாழ்வு நிலையம் வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் சிங்கள் வெறியர்களின் காம பசிக்கு இலக்காகி உயிர்விட்டனர்.

அப்படிப்பட்ட நிலையே இசைப்ரியாவுக்கும் நேர்ந்தது. சனல் 04 ஆவணப்படத்தில் அவரின் சிதைக்கப்பட்ட உடலைக்கண்டு அதிர்ந்து போனேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை ஒரு நாள் கல்லுாரி நடவடிக்கைக்காக வன்னி சென்றிருந்தேன் ஆசிரியர்களோடு அப்போதுதான் இசைப்ரியாவை முதலும் கடைசியுமாக பார்த்தேன் அவர் கையால் தோசையும் சாப்பிட்டேன். இதை நினைத்து நான் புலம்பினேன் ஒரு கலைஞருக்கு இந்த நிலையா????

வாழ் நாளிலில் அவர் ஈழத்துக்கு ஆற்றிய கலைச் சேவை மிகப் பெரிது இப்படிப்பட்ட கலை அரசியை நாய்களும்,நரிகளும் சேர்ந்து கடித்தது சரிதானா??
இசைப்ரியாவுக்கு நீதி வேண்டும்.....................
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக