திங்கள், 20 பிப்ரவரி, 2012

சுவர்ணக்குயில் சுவர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை


தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகிகள் உள்ளனர். ஆனால் சுவர்ணலாதாவைப் போல் சோகக் குரல் கொடுக்க கூடிய பாடகி யாதொருவரும் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லை. இது பாடகி அனுராதாவின் கருத்து.

இக்கருத்து நுாற்றுக்கு நுாறு விகிதம் உண்மை. எனக்குப் பிடித்த தமிழ் பாடகிகளில் முதலானவர் சுவர்ணலதா. அதிகம் பகட்டு காட்டாத பாடகி. அமைதியான சுபாவம் கொண்டவர். இசைக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர்.

1987ம் ஆண்டு இவரது 14வது வயதில் மு.கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்கு தண்டனை திரைப்படத்தில் எம்.எஸ் விஸ்வனதனின் இசையில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..... எனும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து குரு சிஷ்யன்,சத்திரியன்,சின்னத் தம்பி,கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் பாடி மிகப்பிரபல பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார்.

பிரபல இசையமைப்பாளர்கள் எம்.எஸ் விஸ்வனாதன், எ.ஆர்.ரகுமான், இளையராயா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா என பலர் இசையில் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு.


இவரின் விருதுகள் • கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற போறாளே பொண்ணுத்தாயி... பாடலுக்காக 1994ல் இந்திய நாடடின் தேசிய விருது கிடைத்தது
 • இரு முறை தமிழ் நாட்டின் சிறந்த பாடகிக்கான விருதை கருத்தம்மா,சின்னத் தம்பி ஆகிய படங்களுக்குப் பெற்றார்.
 • 1994ல் தமிழ் நாட்டின் சிறந்த பாகிக்கான கலைமாமணி விருது பெற்றார்.
 • ஜந்து முறை சிறந்த பாடகிக்கான சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது றெ்றார்.
 • ஜந்து முறை சிறந்த பாடகிக்கான ப்லிம் பேர் விருது பெற்றார். 
இவ்வாறு பல விருதுகளை வேண்டிய போதும் கூட சுவர்ணலாதா பற்றிய குறிப்புகள் மீடியாக்களில் மிக குறைவே. அவரின் திறமைக்கும் குரலுக்கும் ஏற்ற மதிப்பை தமிழ் சினிமா தர மறுத்துள்ளதோ என்பது என் சந்தேகம்.(மறைவுக்கு முன்) அவரின் மறைவுக்குப் பின்னரே அவர் பற்றி ஏராளமான தகவல்கள் வலையுலகில் உலா வர ஆரம்பித்தன.

சுவர்ணலதா தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு ,மலையாளம், உருது, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் கொடிகட்டி பறந்த பாடகி.

அதுமட்டுமல்ல தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு சுவர்ணலதாவின் இழப்பு பேரிடி காரணம் ஏராளமான தமிழ் கத்தோலிக்க பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு கொடுத்த பெருமை இவரையே சாரும். அதில் இவரின் நீயே நிரந்தரம், மண்ணில் கலந்திடும் மழைத்துளி, இன்பக் கனவொன்று, நிலையில்லா உலகு போன்ற பாடல்கள் சர்வ உலக தமிழ் கத்தோலிக்க உலகமே இன்றும் பாடி மகிழும் பாடல்கள். இப்படிப்பட்ட பாடகியின் இழப்பு யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்று. தமிழ் சினிமா எப்படி இவர் இழப்பை ஈடுகொடுக்கிறதோ தெரியவில்லை

7 கருத்துகள்:

 1. நல்லதொரு பதிவு.நான் மறக்க கூடாத முடியாத பாடகி.. நான் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலை ஸ்வர்ணலதா அவர்கள்தான் பாடினார்.அந்நிமிடங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.இப்போது அவர்கள் மண்ணில் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாடலைக் கேட்க விரும்பினால் கீழ்க்காணும் சுட்டியில் செல்லவும்.
  http://www.raaga.com/player4/?id=49675&mode=100&rand=0.6435887950938195

  பதிலளிநீக்கு
 2. சுட்டியை சொடக்க முடியவில்லை அண்ணா தங்கள் கருத்து முற்றிலும் உண்மையே

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் பிடித்த பாடகிகளில் இவரும் ஒருவர்
  அவரின் குரலில் இருக்கும் சோகத்தை போலவே அவரின் வாழ்வூம் சோகமானது என்பதை நான் தெளிவாகவே அறிவேன் அவரின் இழப்பு இசை உலகிற்கு மட்டும் இழப்பாகாது தோழி நம் போன்ற ஏரளமான இசைப்பிரியர்களுக்கான் பேரிழப்பு என்பதையும் நீங்கள் அறிவீர் காலம் அறியும் நான் அறிந்த வரையில் அவர் யாரிடமும் எளிதில் கோபம் கொண்டது கிடையாதவரம் அவ்ரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளுவோம் மற்றபடி உங்கள் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. parasakthi நன்றி தங்கள் கருத்துக்கு நிச்சயம் பிராத்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பாடகி இவரின் மாலையில் யாரோ மனதோடு மறக்கத்தான் முடியுமா என் மனதில் இவரின் பலபாடல்கள் ரீங்காரம் இடுகின்றது அவை ராஜாவின் இசையில் பாடியது.

  பதிலளிநீக்கு
 6. கண் இமைக்கும் நேரத்தில் வானவில்போனது போல் திரையுலகை விட்டுச்சென்றார் இவரின் இழப்புக்கு யாரை ஈடு சொல்ல..

  பதிலளிநீக்கு
 7. எனக்கும் மிகவும் விடித்த படகி அவர்... அவர் பற்றி அவரது இறப்பு அன்று நான் எழுதிய பதிவு இது தான்...

  முகவரியை அட்ரஸ் பாரில் போட்டு பாருங்கள்..

  http://www.mathisutha.com/2010/09/blog-post_4352.html

  பதிலளிநீக்கு