வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவி சரங்கள்

அடையாளம்


மேலாடை,சிவத்தவிளக்கு,கருந்திலகம்
கொல்லி வைக்க தனக்குதானே
காத்திருக்கும் கரங்கள்
அவையவங்களில் ஏதோ ஒன்று-எனும்
இழந்து போன ஆட்கள்- இவையே
இன்றைய எம் தமிழினத்தின் அடையாளம்
மறந்த பின்னும் காதல்....


உன்னை மறக்க நினைக்கும்
பொழுதுகளில் எல்லாம்
உன்னைத்தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து-உன்னையே
நினைக்கிறேன்


கண் இமையாத நாளும் 
உண்டா வாழவில்-அது போல்
உனை நினையாத நாளும்
உண்டா.......................


நாம் சேர்ந்து ரசித்த
பசுமையான நினைவுகள்
இன்றும் என் நெஞசில்
சல்லடை போடுகின்றன.


சிலுவை வலி கூட
மும்மணி நேரம்தான்
காதல் வலியோ
கண் மூடும் நேரமும்
தொடரும் வலி....


கல்லறை


நல்லவராயினும்
தீயவராயினும்...
நிம்மதியாக துாங்கும்
ஆறடி அரண்மனை.


திருமணம்


ஈர் உயிர்கள் 
ஓருயிராகும் சடங்கு


உன் இதயம்  


நான் இரண்டாம் முறை
குடி கொண்ட கருவறை


இவள் ஒரு திருநங்கை


ஆண்மையை நிழலாக்கி
பெண்மையை நிஜமாக்கிய
அதிசய பெண்ணிவள்


கனி ஈன்றெடுக்கா
அழகிய மலரிவள்
சாபத்தின் கோலமல்ல
படைப்பின் விசித்திர
பெண்ணிவள்


கஸ்ரப்பட்டு வாழும் வாழ்க்கையை
இஸ்ரப்பட்டு வாழும் மனுசிகள்
பிறப்பின் நியதியை
மாற்றி எழுதிய அற்புதவரத்திகள்  

பிரம்மன் படைப்பில்
விசித்திரமானவள்
இவள் ஒரு திருநங்கை......

9 கருத்துகள்:

 1. கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
  குறிப்பாக காதல் வலி
  திருமணம குறித்த அழகிய குறிப்பு
  மனம் கவர்ந்த பதிவுகள்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்கையே..கவிதைகள் அருமையம்மா.. குறிப்பட முடியவில்லை.. எல்லாம் சிறப்பு..இரண்டாம் முறை வாசித்தேன்..இதே வழியில் பயணிக்க அண்ணனின் வாழ்த்துகள்ம்மா..

  பதிலளிநீக்கு
 3. Ramani,மதுமதி இரு சகோதரர்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. கவிதைகள் அருமையாக இருக்கு.... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் தோழரே.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

  பதிலளிநீக்கு
 6. PUTHIYATHENRAL சகோதரருக்கு நன்றி
  Rishvan அண்ணாவிற்கு இந்த விருதை தந்தமைக்கு நன்றி கூறுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. கவிதைகள் அத்தனையும் அருமை சகோதரி.
  இன்று என்னுடைய முதல் வரவு..
  இனி தொடர்கிறேன்..

  பதிலளிநீக்கு