புதன், 29 பிப்ரவரி, 2012

எழுத்தாளர்களே பேச்சாளர்களே தயவுசெய்து கவனியுங்கள்நண்பர்களே நாம் ஒரு விடயத்தை பற்றி பேச வேண்டுமாயினும் சரி எழுத வேண்டுமாயினும் சரி முதலில் அந்த விடயம் பற்றி நமக்கு முழுதாக தெரிங்திருக்க வேண்டியது அவசியம் அல்லவா? அதுவே நமக்கும் நல்லது அடுத்தவருக்கும் நல்லது.

என் தலைப்பு எல்லா எழுத்தளர்களையும் சுட்டி நிற்கவில்லை ஒரு சிலரையே சுட்டி நிற்கிறது. அதுவும் சமூகத்தில் முன்னேறி வரும் திருநங்கைகளை பற்றி எழுதும் எழுத்தாளர்களையே வட்டம் போடுகிறது

நான் இலங்கையை சேர்ந்தவள் இலங்கையில் திருநங்கைகளை பற்றி இதுவரைக்கும் ஒரு புத்தகம் கூட வெளிவரவில்லை.இது இருக்கட்டும் நான் இந்தியாவிற்கும் வந்ததில்லை ஆனால் நான் அறிந்த வரை தமிழ்நாட்டில் சில புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அவை படிப்பதற்கான சந்தர்பம் கூட எனக்கு கிடைக்கவில்லை உதாரணமாக திருநங்கை லிவிங் ஸ்மைல் நான் வித்யா என்ற நுாலும் திருநங்கை ப்ரியா பாபுவால் மூன்றாம் பாலின் முகம் என்ற நாலும் லதா சரவணன் அவர்களால் காகித பூக்கள் என்ற நாவலும் திருநங்கை ரேவதியால் எழுதப்பட்ட உணர்வும் உருவகமும் என்ற நுாலும் என்னும் ஒரு பிரபல எழுத்தாளரால் (மன்னிக்கவும் அவர் பெயர் எனக்கு நினைவில் இல்லை) எழுதப்பட்ட அவன் +அவள்= அது என்ற நுாலும் வெளிவந்ததாக தெரிகிறது. ஆனால் அவை ஒன்றையும் நான் படித்ததில்லை நான் இவர்ளை பற்றி பேச வரவில்லை. இணைய வலைப்பதிவு எழுத்தாளாகளையே கூறுகிறேன். இவா்களின் எழுத்துளைதானே என்னால் படிக்க முடியும்

திருநங்களை பற்றி மற்றவர்களுக்கு இலகுவில் புரியாது இது ஒரு வகையில் உண்மை நாம் எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும் அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி திருநங்கையாக இருந்தாலும் சரி அவரை உடனே எடை போடுவது மிக மிக தவறு அவருடன் பழகிய பின்னரே அவரின் நடத்தையை நாம் அறிந்து கொள்ளலாம்

சில கவிஞர்கள் திருநங்கைகளை பற்றி எழுதும் போது காகித மலர்கள் என்று வர்ணிப்பார்கள் திருநங்கைகள் என்ன உயிரற்ற ஜடமா???? அவர்கள் கனி ஈன்றெடுக்கா வாசனை வீசும் அழகிய மலர்கள் (தற்போது இக்கருத்தும் திருநங்கைகளுக்கு பொருந்தாது ஏனெனில் பிரிட்டிஸ் திருநங்கை ஒருவர் ஓர்மோன் மூலம் கருப்பையை செயற்பட செய்து குழந்தை பெற்றுள்ளார்.) இன்னுமொன்றை வாசித்தேன் இவர் திருநங்கை பற்றிய ஒரு கவிதை அதை எழுதும் முன் யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை என் ரயில் பயண அனுபவத்தை வைத்துதான் எழுதுகிறேன் என்றுவிட்டு எழுதினார் ”திருநங்கை வாங்கி விடாதே
திருட்டு நங்கை என்ற பெயரை” இதுக்கு யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லையாம் அவர். இதை எழுதியவருடன் சம்மந்தப்பட்டது  ஒரு திருநங்கை எனினும் இவர் ஓர் மனித வர்க்கத்தை குறிக்கும் பெயரை பயன் படுத்தியது என் பார்வையில் பிழையே....

பலர் திருநங்கைகளை அர்த்தனாதீஸ்வரர் என்று வர்ணிப்பார்கள் இதை நான் பிழை கூற வரவில்லை. ஆனால் தாய்லாந் திருநங்கைகளுக்கு யார் அவர் என்பது கூட தெரியாதே.இன்னும் சிலர் ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் அலைபவர்கள் என்று எழுதியதையும் வாசித்ததுண்டு.அதென்ன ஆணில்லை என்று தானே பெண்ணாக வாழகிறார்கள். அவர்களை பெண்ணாக ஏற்று கொள்ளாவிட்டாலும் ஆண் என்று கூறாதீர்கள்.

நான் இலங்கையில் தற்போது உள்ளதால்(29.02.2012) இலங்கையில் வெளியிடப்படும் தினக்குரல் பத்திரிகை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு ஞாயிற்று கிழமை பத்திரிகையை புரட்டி படித்துக் கொண்டிருக்கையில் சபிக்கப்பட்ட பாலினம் என்ற தலைப்பை கண்டேன் அதை வாசிக்கவும் ஆரம்பித்தேன் பார்த்தால் திருநங்கைகள் பற்றிய விடயம் அதை முடித்த பின்தான் எனக்கு தெரியவந்தது அந்த கட்டுரைக்குரிய ஆசிரியர் இணையத்தில் படித்ததை சுட்டு இதை கொஞ்ஞம் மாற்றி தான் எழுதுவது போல் எழுதியிருக்கிறார். நான் இலங்கை திருநங்கைகளை பற்றி எழுதியிருப்பார் என்று பார்த்தால் இந்திய திருநங்கைகளை பற்றியே எழுதியுள்ளார். எழுதியது நல்ல விடயம்தான் எனினும் விடயத்துக்கும் தலைப்புக்கும் பொருத்தம் கிடையாது. அவர் வைத்த தலைப்பை பார்த்தீர்களா? சபிக்கப்பட்ட பாலினம் இது அவர்கள் தங்களுக்கு வைத்த பெயர் கிடையாது உலகம் அவர்களுக்கு வைத்த பெயரும் கிடையாது சிலரின் கல்லு நெஞ்சத்தால் உருவான பெயர்.

திருநங்கைகள் எல்லாரும் பாலியல் தொழிலாளிகள் என்ற கருத்து உண்டு. நான் கேட்கிறேன் ஆண்கள் கூடத்தான் ஓரின சேர்க்கை என்ற பெயரில் பாலியல் தொழில் செய்கிறார்கள் அதனால் எல்லா ஆண்களும் அப்படி ஆகிவிடுவார்களா? பெண்களும்தான் பாலியல் தொழில் செய்கிறார்கள் அதனால் எல்லா பெண்களும் அப்படி ஆகிவிடுவார்களா? இல்லையே அது போல் தான் திருநங்கைகளும். எல்லா திருநங்கைகளும் பாலியல் தொழிலாளிகள் கிடையாது பாலியல் தொழிலாளிகள் எல்லாரும் திருநங்கைகள் கிடையாது.

திருநங்கைகளை பற்றி எழுதும் முன் ஏதாவதொரு திருநங்கையை நேரில் கண்டு உரையாடுவது மிக்க நல்லது. இல்லை என்றால் விட்டுவிடுங்கள் ஏன் இந்த வீண் முயர்ச்சி

ஒரு பேச்சாளர் யூடியுப்பில்தான் அந்த நாசமா போன பேச்சை கேட்டேன் ஒரு வகையில் எனக்கு சரிப்பு மறு பக்கம் எனக்கு ஆத்திரம் நான் நினைக்கிறேன் அவருக்கு ஏதோ உளவியல் ரீதியான பிரச்சினை இருக்குமோ என்னதோ? திருநங்கைகள் அந்த மனுசனுக்கு என்ன துரோம் செய்தனரோ தெரியவில்லை மனுசன் வச்சு வாங்குது நல்ல வேளை நான் மட்டும் அந்த நிகழ்வுக்கு போகவில்லை இல்லண்ணா அங்க நடை பெற்றிருக்க வேண்டிய பேச்சே வேற....... அந்த நாசமா பேன பேச்சை நீங்களும் கேளுங்க இது நியாயமா கூறுங்க? எழுத்தாளர்களை போலதான் பேச்சாளர்களுக்கும் சொல்கிறேன் ஒரு விடயத்தை ஆய்ந்தறிந்த பிறகே அதை பற்றி எழுதவோ அல்லது பேசவோ துணிய வேண்டும்.   

9 கருத்துகள்:

 1. ஒரு விடயத்தை ஆய்ந்தறிந்த பிறகே அதை பற்றி எழுதவோ அல்லது பேசவோ துணிய வேண்டும்...

  Amen...

  Pl takeoff word verification Esther....

  பதிலளிநீக்கு
 2. போகிற போக்கில் தன் கருத்தைச் சொல்லி விட்டுச் செல்வது பெரும்பாலோரின் பழக்கமாக உள்ளது. அதிலும் எழுத்து என்று வரும்போது நிச்சயம் ஆராய்ந்து உணர்ந்துதான் எழுத வேண்டும். சரியான கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள் எஸ்தர். நன்று.

  பதிலளிநீக்கு
 3. ரெவெரி அண்ணா நன்றி எப்படி வேர்ட் பிகேஷனை நீக்குவது என்று கூற முடியுமா?

  கணேஷ் அண்ணா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. மன்னிக்கவும் தோழி,

  ஏற்கனவே உனது கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதமும் சரி, நான் அனுப்பிய புத்தகமும் சரி உன்னை சேரவில்லை என்பதில் வருத்தமே... இலங்கை தபால் துறையின் தலையீடாக இருக்குமோ என்று தான் அஞ்சுகிறேன்.

  உனது ஆதங்கம் நியாயமானது.. தொடர்ந்து எழுதி வருவது குறித்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. விபச்சாரம் என்று கூறாமல் பாலியல் தொழில் என்று கூறலாமே..

  நமக்கு நிகழாத ஒன்றைக் குறித்து முன்முடிவோடோ/தாழ்த்தியோ சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாமே.. மேலும் அதிக இலக்கிய பரிச்சையத்தோடும், கூரான எழுத்தோடும் வளர வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. "எழுத்து என்று வரும்போது நிச்சயம் ஆராய்ந்து உணர்ந்துதான் எழுத வேண்டும்" என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. சரியான கருத்தே

  பதிலளிநீக்கு
 6. அரவாணிகள் குறித்த உண்மைகளை தொடர்ந்து வெளி கொண்டு வருகிறீர்கள்... நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அக்கா ஸ்மைலி உங்கள் கடிதமும் புத்தகமும் கிடைக்காதது என் அதிஷ்டம் இன்மை.

  தங்கள் கருத்துரையை வரவேற்கிறேன் அவ்வசனத்தை மாற்றம் செய்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. avainaayagan அண்ணா உங்கள் கருத்தையும் உங்களையும் வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. PUTHIYATHENRAL அண்ணா தொடர்ந்து என் பக்கங்களை படித்து வருகறீர்கள் மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு