ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

என் கல்லுாரி காலம்

என் வாழ்வின்
கனா காலம் - அது
என் கல்லுாரி காலம்


குறும்புகள் பல செய்த 
விந்தை மிகு காலம்
தமிருந்தாலும் - இனி
கிடைக்காத காலம்


அன்பு கொண்ட நண்பர்கள்
ஆசை வைத்த ஆசான்கள்
அவர்கள் என்றும் - என்
நெஞ்சில் நீங்காத நபர்கள்


வீறு கொண்ட மின்னலாய்
நான் சுற்றி திரிந்த - என்
கல்லுாரி வளாகம் - அதை போல்
இடம் வேறென்ன வேண்டும் எனக்கு


பாடங்களை நினைவூட்டும் - என்
கல்லுாரி மணியோசை
செந்தமிழ் கற்ற பூஞ்சோலை - உங்களை
எப்படி மறப்பேன் நான்


அன்பினால் அறிவு புகட்டும் ஆசான்களும்
பிரம்பினால் ஒழுக்கம் புகட்டும் ஆசான்களும்
என்றும் என் நெஞ்சில்
நீங்காத பேரலைகள்


நண்பரோடு சண்டையிட்ட தருணங்கள்
ஆசிரியர்களுக்கு பயந்து - நடுங்கிய 
வேளைகள் - இனி
என் வாழ்வில் கிடைக்குமா???


மாணாக்கர் அனைவரும்
புத்தாடை தரிக்கும் - என்
கல்லுாரி தினம் - இனி
என் வாழ்வில் கிடைக்குமா????


வான் சிந்தும் நீர் துளியும்
ஓர் நாள் வற்றலாம்
என் உயிர் கொண்ட நாள் வரை
உனை மறவேன் கல்லுாரியே..............

12 கருத்துகள்:

 1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தங்கையே... தங்கையே... திரும்ப வராத அந்தக் கல்லூரி தினங்களுக்கான ஏக்கம் இன்னும் என் நெஞ்சில்! நற்கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மலரும் நினைவுகள்?
  ரசித்தேன் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 3. கல்லூரி வாழ்க்கை காலமெல்லாம் நெஞ்சுக்குள் இனித்திடும்

  பதிலளிநீக்கு
 4. அந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்துடுங்க தங்கச்சி கண்ணை கட்டுது. அதனால் எந்த பயனுமில்லை. கமெண்ட் போஉறாவங்களை அது குறைக்கதான் செய்யும்.

  பதிலளிநீக்கு
 5. ரெவெரி அண்ணாவுக்கு நன்றி
  ராஜி அக்கா உங்களுக்கும் நன்றி ஆனால் நீங்கள் எந்த வேர்டு பற்றி பேசினீர்கள் என்று எனக்கு தெரியல அக்கா??

  பதிலளிநீக்கு
 6. ரெவெரி அண்ணாவுக்கு நன்றி
  ராஜி அக்கா உங்களுக்கும் நன்றி ஆனால் நீங்கள் எந்த வேர்டு பற்றி பேசினீர்கள் என்று எனக்கு தெரியல அக்கா??
  >>>>
  உங்க பதிவுகளுக்கு நாங்க கமெண்ட் போஸ்ட் பண்றதுக்கு முன், வேர்டு வெர்ஃபிகேஷன் வருதே. அதைத்தான் சொன்னேன். வந்தமா பதிவை படிச்சோமா? கமெண்ட் போட்டுட்டு போனோமான்னு இல்லாம வேர்டு வெர்ஃபிகேஷன் கண்ணை கட்டுதும்மா. வேணும்ன்னா கமெண்ட் மாடரேசன் வச்சுக்கோ

  பதிலளிநீக்கு
 7. ஓஓஓஓ அது எப்படி என தெரியவில்லை நான் எடுக்க முயர்ச்சி செய்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. செட்டிங்க்ஸ் ல போய் கமெண்ட்ஸ் கிளிக் பண்ணுங்க. அங்கே வேர்டு வெரிபிகேஷன், அனானியும்போடலாமா? கூகுள் அக்கவுண்ட் உள்ளவங்கமட்டுமா? மாடுரேஷன் வேணுமான்னு கேட்கும். உங்க விருப்பப்பட்டதை தேர்ந்து எடுத்துக்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. மறக்க முடியாத பள்ளி நினைவுகளை மீட்டிவிட்டது கவிதை.

  பதிலளிநீக்கு
 10. இந்த வேர்டு வெரிபிக்கேஸனால் கடந்தபதிவுக்கும் பின்னூட்டம் இடாமல் ஓடிவிட்டேன் ராஜி அக்கா சொன்னதில் தப்பில்லை தோழி.

  பதிலளிநீக்கு
 11. நன்றி தனி மரம் வலைப்பதிவாளரே.. உங்கள் வருகை கண்ட மகிழ்கிறேன் வேர்ட்பிகேஷனை நீக்கிவிட்டேன். தாங்கள் இலங்கையா?? எந்த ஊர்?

  பதிலளிநீக்கு