திங்கள், 20 பிப்ரவரி, 2012

எஸ்.என் லட்சுமி பாட்டிக்கு என் கண்ணீர் பூக்கள்

விண்மீன் ஒன்று - ஒளி
தணிந்திற்று
கடல் முத்தொன்று
அதன் சிற்பியிற்
தவறிற்று

மாபெரும் சுடர்
அணைந்து விட்டது
மண் வேண்டாம் என்று
மண்னை விட்டு சென்று விட்டது

உன் போல் தலை முறை
நட்சத்திரம் - இனி
எமக்கு கிடைக்குமா? நீ
சந்திக்காத நட்சத்திரம் - உண்டோ
இத்தமிழ் நாட்டில்.....

தென்றலில் உன்னை
பார்த்து பொறாமை கொண்டேன்
இந்த வயதிலும் இப்படி நடிக்கிறாயே - என்று
என் கண்தான் பட்டதோ பாட்டி
உனக்கு இந்நிலை

உன்னை கண்டதில்லை - ஆனாலும்
என் கண்களில் கண்களில் கண்ணீர்
உன்னை பார்த்ததில்லை - ஆனாலும்
என் நெஞ்சில் பதற்றம்..

செந்தணலில் உன் உடல்
வேகப் போகிறதே - ஜயோ
ஆனாலும் உன் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது

மார்பில் அடிக்கிறேன்
வாயோயாது புலம்புகிறேன்
ஆனாலும் உன் உடலை
இறுதியாக பார்க்கும் பாக்யமும்
எனக்கில்லையே பாட்டி

உன்னை நான் எப்போது பார்ப்பேன்
உன் நடிப்பை எப்படி ரசிப்பேன்
மீண்டும் அந்த காலன்
உன் உயிரை கொடுத்தால்
அவனுக்கு மாபெரும் கோவில் கட்டுகிறேன்

எஸ்தர்

4 கருத்துகள்:

 1. உறவுகளையே திரும்பிப் பார்க்காத இந்த காலத்தில் நாம் நேரிலே பார்த்திராத ஒருவருக்காக ஒரு பதிவைக் காண்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது தங்கையே . வாழ வளமுடன் .

  பதிலளிநீக்கு
 2. உன் தளத்தின் வாயிலாக நானும் எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேனம்மா.

  பதிலளிநீக்கு
 3. நன்றி சசிகலா அக்கா மற்றும் மதுமதி அண்ணா

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு