புதன், 21 மார்ச், 2012

இன்று உலக நீர் தினம் மார்ச் 22

இயற்கை அன்னை எமக்கு தந்த செல்வங்களுள் முக்கியமானது நீர் ஆகும். மனஜதன் உணவின்றி இருநாள் உயிர் வாழ்ந்தாலும் நீரி்ன்றி ஒரு நாளேனும் உயிர் வாழ முடியாது. இதிலிருந்தே நீரின் மகத்துவம் உலகிற்கு புரியும்.


இத்தகைய நீரின் அவசியம் கருதி ஜ.நா சபையினால் 1992 மார்ச் 22 சர்வதேச நீர் தினமாக பிரகடணம் செய்யப்பட்டது. 3ம் உலக யுத்தம் ஒன்று ஏற்படின் அது நீருக்காக என்று கூறும் அளவிற்கு நீரின் பற்றாக்குறையும், தேவையும் அதிகரித்துவிட்டது. நம் தமிழ் நாடும் கேரளாவும் இதற்கொரு எடுத்துக் காட்டு ஆயினும் எம் மக்கள் மத்தில் நீர் சிக்கணம், துாய்மை பேணல், பாதுகாத்தல் போன்ற விளிப்புணர்வுகள் ஏற்படாமல் இருப்பது மிக கவலை தருகின்றது.

நீர்வள நிபுணர்களின் தற்போதைய கருத்து என்னவெனில் நிலத்தடி நீரும் தற்போது மிக வேகமாக மாசடைந்து வருவது என்பதாகும். அது பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துவது சுகாதார அமைச்சின் கடமை எனினும் உலகில் நாமும் ஓர் ஜீவராசி என்ற வகையில் மக்கள் மத்தியில் விளிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் , ஊடகங்கள் வாயிலாக சிந்தைகளை அறித்தல் போன்றன. எம் கடமையன்றோ.

நீவளம் ஓர் தேசத்தின் நாடித் துடிப்பு. அதை பாதுகாப்பது நாட்டு பிரயை என்ற வகையில் நம் ஒவ்வொருவரினதும் கடமை.பூமியில் உள்ள நீரில் ஒரு சத வீதமே நன்னீர் காணப்படுகிறது. மிகுதி எல்லாம் உவர் நீர். சனத் தொகை வளர்ச்சி காரணமாக நன்னீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். இன்று மூன்றாம் உலக நாடுகளில் நன்னீருக்கு மக்கள் அலைந்து திரிகின்றனர்.
நன்னீரை மாசு படுத்தாது பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நம்மை பொறுத்த மட்டில் உவர் நீர் நமக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால் அதையே வாழ்விடமாக கொண்ட கடலவாழ் உயிரினங்களின் நிலை என்வாகும் என்பதை யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. அதுமட்டுமல்ல இவற்றை நம்பியிருக்கும் மீனவர்களின் நிலையும்தான் கவலைகிடம்.

நீர் பெறுவதற்கு முக்கிய காரணம் மழை. மழை வருவதற்கு முக்கிய காரணம் மரம். நாம் காடை வெட்டி நகரமய படுத்துவதால் எமக்குதான் தீமை என்பதை யாரும் புரிந்து கொள்வது கிடையாது. காடு வளர்ப்போம் நீா் காப்போம்.எம் உயிர் காப்போம், எம் அடுத்த சந்ததியினர் வாழ வழி சமைப்போம்.

6 கருத்துகள்:

 1. தண்ணீர் தினமான இன்று தனித்துவமாக தண்ணீர் பராமரிப்பின் அக்கறையின்மையை சாடி சிந்திக்க வைக்கும் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. ஊடங்கள் போதியளவு விழிப்பை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்!
  நீர் விரையம் செய்யும் வழிமுறைகள்  எவ்வாறு எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்  போன்ற  விடயங்களை!

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு. இன்று உலக தண்ணீர் தினம் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
 4. நீர் தின வாழ்த்துக்கள்...கண்ணீர் தினம் தான் இன்றைய தேவை சகோதரி

  பதிலளிநீக்கு
 5. தனிமரம் வலைப்பதிவாளர் அண்ணாவுக்கு நன்றி

  தமிழாவணன் அவர்களுக்கும் நன்றி
  அதோடு உங்களை என் தளத்திற்கு வரவேற்கிறேன்.

  மற்றும் ரெவரி அண்ணாவிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு