வெள்ளி, 23 மார்ச், 2012

நீங்கள் சிக்கன் 65 பிரியரா? அப்ப இத கேளுங்க....

தற்போது பிரபலமடைந்து வரும் உணவுகளில் சிக்கன் 65 மிக முக்கியமானது ஜரோப்பா அன்றி இந்தியா, இலங்கை உட்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இதன் பிரியர்கள் ஏராளம்.ஏன் அதில நானும் ஒருத்திதான் கடந்த வியாளக் கிழமை(22.03.12) இதற்கு ஆப்பு வைக்குமா போல் ஒரு செய்தி தின கரன்(l.k) பத்திரிகையில் வெளியானது அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று இருந்தாலே சாப்பிட துாண்டும் உணவு இந்த சிக்கன் 65. இந்த கண்னை கவரும் நிறத்துக்காக இதில் சேர்கப்படும் மசாலா துாளில் உள்ள இரசானப் பொருட்கள் உடலுக்கு மிக தீங்கானவை என மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதை சாப்பிடுகின்றவர்களுக்கு சிறு நீரக பிரச்சினைகளும், மரபணு பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதீத வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவு வகைகளில் பயன் படுத்த கூடிய செயற்கை நிறங்கள், பயன் படுத்த கூடாத செயற்கை நிறங்கள் என இரு வகையான செயற்கை நிறங்கள் உண்டு. 08 வகையான நிறங்கள் மட்டுமே பயன் படுத்த அனுமதி உண்டு அதுவும் குறிப்பிட்ட அளவு மாத்திரமே.இவை பொதுவாக அடைத்து வரும் உணவுகளிலும், ஜஸ்கிறீம் வகைகளிலும் பயன்படுபவை. அதனால் இதை யாரும் கடைப் பிடிப்பது கிடையாது.

சிக்கன் 65 உணவில் அனுமதிக்கப்பட்ட நிறத்திற்கு அதிகமாக நிறங்கள் சேர்ப்பதாலும் சுவையூட்டி அமிலங்கள் சேர்பதாலும் சாப்பிட்ட மாத்திரத்திலேயே நெஞ்சு எரிச்சல், அரைப் பை அழற்சி போன்ற நோய்களை கொண்டு வந்து விடும்.சிக்கன் 65 ல் துணிகளுக்கு சாயமேற்ற பயன்படும் சூடான டை மொட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது பலவேறான நோய்களை கொண்டு வரும் காரணியாக உள்ளதென மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த நிறங்களில் இனிப்புகளில் மட்டும் சேர்க்க வேண்டும் காரங்களில் சேர்க்க அனுமதி கிடையாது என உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை விற்பனை செய்பவர்களும் இதில் உள்ள தீவினைகள் அறியாமல் விற்பனை செய்கிறார்கள். மக்களும் அறியாது வாங்கி உண்கிறார்கள். செயற்கைக்கு பதிலாக மிளகாய்யில் உள்ள சிவப்பு இயற்கை நிறத்தை உபயோகிக்கலாம் என நான் நினைக்கிறேன்.

சிக்கன் பிரியர்களுக்கு இந்த விடயம் கவலையை ததரலாம் என்ன செய்வது இதுதானே உண்மை என மருத்துவ உலகம் கூறி நிற்கிறது. முடிந்த வரை இதை நாம் தவிர்த்தால் எம் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.

6 கருத்துகள்:

 1. எஸ்தர்! நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் எனக்குக் கவலை இல்லை. அசைவம் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு பயத்தை உண்டாக்கிட்டியேம்மா..!

  பதிலளிநீக்கு
 2. குடி குடியை கெடுக்கும் என சொல்லியே கேளாத மக்கள் இதையா கேட்ப்பார்கள் ?

  பதிலளிநீக்கு
 3. aaaaaaaaaaaaaaaavvvvvvvvvvvv..esther enakku romba pidikkumeeeeeeeeeeeeee

  பதிலளிநீக்கு
 4. சொன்னாலும் கேட்பதில்லை மக்கள் மனது .

  பதிலளிநீக்கு
 5. இதை சாப்பிடுகின்றவர்களுக்கு சிறு நீரக பிரச்சினைகளும், மரபணு பிரச்சினைகளும் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதீத வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால் புற்று நோய் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.//veri nice

  பதிலளிநீக்கு