வியாழன், 1 மார்ச், 2012

உன்னதமான நட்பு

உலகது கண்ட
உத்தம உறவிது
சான்றோர் பறைசாற்றும்
உன்னத உறவிது

காதலை எல்லாரும்
வரமாக கேட்பார்கள்
கேட்காமல் கிடைத்த                                      
வரம் நட்பு

காதல் வந்தால் இதயமெல்லாம்
பொடிப் பொடியாகி விடும்
பொடிப் பொடிப்யான இதயமெல்லாம்
நட்பில் ஒன்று சேரும்


உறவுகளுக்குள் காயம் - வந்தால்
உயிரையும் தின்று விடும்
நண்பர்களுக்குள் காயம் வந்தால்
நாளை மாறிவிடும்


காதலும் சில நேரம்
ஜாதி மதம் பார்த்து வரும்
உன்னதமான நட்பு
உள்ளங்களை மட்டும் பார்க்கும்


திமிரு பிடித்த நெஞ்சத்தை - எல்லாம்
சல்லடை போட்டு விடும்
நன்மை தீமை அறியும் - விதத்தை
விரைவில் கற்றுத்தரும்


நன்நிலத்தில் நட்ட மரம் - இது
பட்டுப் போகாது
கண் மூடும் வேளையிலும் 
கை விட்டு போகாது......

16 கருத்துகள்:

 1. ''.....காதல் வந்தால் இதயமெல்லாம்
  பொடிப் பொடியாகி விடும்
  பொடிப் பொடிப்யான இதயமெல்லாம்
  நட்பில் ஒன்று சேரும்...''
  இது (இவ்வரிகள்) வித்தியாசமாக உள்ளது. வாழ்த்துகள் சகோதரி.(முதற் தடவையாக தங்களிடம் வந்துள்ளேன்).
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. நட்பைப் பாடிய பா மிக அருமை எஸ்தர். ஜாதி மதம் எதையும் பாராததும், இடர் என்றும் பாராமல் உதவிக்கு ஓடிவருவதும் நட்பு ஒன்றுதான் என்பது என்னுடைய எண்ணம். ஆகவே மிக ரசித்தேன். தொடரட்டும் இதுபோன்ற நற்படைப்புக்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. எஸ்தர்... Dashboardல் Settings க்ளிக் செய்து அங்கே comments என்றிருப்பதை க்ளிக் செய்தால், கீழே இரண்டாவதாக வேர்ட் வெரிபிகேஷன் யெஸ் ஆர் நோ இருக்கும். அதில் நோ க்ளிக் செய்து Save செய்தால் Word Verification நீங்கி விடும். செய்து பாரம்மா...

  பதிலளிநீக்கு
 4. அருமைக்கவிதை வாழ்த்துகள். ஆனால் காதலைவிட நட்பின் வலி அதிகம்.

  பதிலளிநீக்கு
 5. உன்னதமான நட்பு
  உள்ளங்களை மட்டும் பார்க்கும்
  >>>
  உண்மை சொன்னாய் தங்கச்சி, தூய நட்பு இனம், குணம், மதம்லாம் பார்க்காது தங்கச்சி

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் எஸ்தர் நட்பு குறித்து ஒரு அழகான பதிவை தந்திருகீன்கள்.... வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணிகள்.

  பதிலளிநீக்கு
 7. கணேஷ் அண்ணா மிக்க நன்றி ...நான் ஷாட்போர்டில் செட்டிங்கை தேடினேன் கிடைக்கவில்லை எங்குள்ளது

  பதிலளிநீக்கு
 8. DhanaSekaran,PUTHIYATHENRAL சகோதரர்களுக்கு நன்றி உங்கள் ஆதரவை கண்டு மகிழ்கிறேன்.
  ராஜி அக்கா உங்களுக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. காதலை எல்லாரும்
  வரமாக கேட்பார்கள்
  கேட்காமல் கிடைத்த
  வரம் நட்பு// தொடரட்டும் .....

  பதிலளிநீக்கு
 10. தங்கச்சி உன் ஓட்டை நியே போடலைன்னா எப்படிம்மா? தமிழ்மணம் ஓட்டு பத்தி சொல்றேன்

  பதிலளிநீக்கு
 11. நட்புக்கான நல்லிலக்கணக் கவிதை சகோதரி...

  பதிலளிநீக்கு
 12. ராஜி அக்கா போட்டு விட்டேன்.
  மகேந்திரன் அண்ணாவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 14. நட்பின் வரிகள் அற்ப்புதம் தங்கள் பதிவு எனக்கு தெரிவதில்லையே ஏன்?

  பதிலளிநீக்கு
 15. எனக்கும் தெரியல அக்கா நீங்கள் என் தளத்தில் இணைய வேண்டும் போல

  பதிலளிநீக்கு