ஞாயிறு, 4 மார்ச், 2012

நாக மாணிக்கம் (ரத்தினம்)

நாக ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக நவரத்தினங்களில் இருந்து நாக ரத்தினம் முற்றிலும் வேறுபட்டது. நவரத்தினங்கள் பூமியிலிருந்து எடுக்கப்படும். நாகரத்தினமோ நாகபாம்பிலிருந்து எடுக்கப்படும்.

நாகபாம்பு பல வகைப்படும் யோகிகள்,ரிஷிகள் இவைபற்றிய நிறைய ஆய்வுகளை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே நடத்தியிருக்கின்றனர். அவற்றில் ஒரு வகையான நாகங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டவை யாரையும் தீண்டாமல் இறந்தவற்றை மாத்திரம் உண்டு வாழக் கூடியவையாக இருந்தன. இதனால் இவற்றின் விஷம் பயன்படாமல் போய்விடும் இரையை தாக்கவே விஷம் பயன்படும் என்பதால் அவை இந்த நாகங்களில் தேங்கியே காணப்படும்.

இப்படிப்பட்ட நாகங்கள் இளமையை பாதுகாப்பதில் வலு கெட்டிகாரர்கள் சுமார் 110-150 ஆண்டுகள் வாழக்கூடியன. இதனால் பயன்படாத இதன் விஷமானது நாளடைவில் நாகரத்தினமாக உருவாகும். நாக ரத்தினம் இந்த பாம்புகளுக்கு உருவாகும் தருவாயில் இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை கொண்டனவாக காணப்படும். இதுதவிர இவைக்கு வேறுபலன் கிடையாது கண்பார்வை மங்கி காணப்படும்

இச்சந்தர்ப்பத்தில் அமாவாசை தினங்களில் காரிருள் காரணமாக இவை ஒளியின்றி,இரை தேட வசதியின்றி இந்த நாக ரத்தினத்தை வெளியில் கக்கி அதன் ஒளியில் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் வந்து உள்ளெடுத்துக் கொள்ளும்.

நாக ரத்தினம் பற்றிய உண்மைகள்
இவை பல நுாறு வருடங்களாக சேமித்த விஷத்தில் உருவாகியது. இதனால் மகா கொடிய விஷத்தன்மை வாய்தது. கையில் காயம் உள்ளவர்கள் இதனை தொட்டால் உடனே மரணம் நேரும். வாயில் வைத்தாலோ புண்களில் பட்டாலோ உடனே மரணம் நேரும்.பார்த்து கையாள்வது சிறந்தது. 

4 கருத்துகள்:

 1. இதற்காண ஆதாரங்களை வெளியிட முடியுமா... எதை மூலமாக வைத்து கூறுகிறிர்கள்...

  பதிலளிநீக்கு
 2. வழமையாக ஊர்ப்புறங்களில் சொல்லபடுகிற கருத்துகள்தான் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 3. நாகமாணிக்கத்தை இன்னும் நம்புகிறார்களா?.பாம்பு பறக்குமா? இதையும் ஒருமுறை பாருங்கள். http://chandroosblog.blogspot.in/2010/09/blog-post.html

  பதிலளிநீக்கு
 4. nagamani..... oru கோதுமை ... size la irrukum..... na paarthu irrukan kodaikannal tribal kita..... athuil varum oooliii oru paanai pola irrkum... 30 feet ku mela ooli vanthuchi...

  பதிலளிநீக்கு