திங்கள், 5 மார்ச், 2012

என் கனவு திருமணம்

சொப்பனங்கள் ஆயிரம்
கண்டேன் ஆயினும் - இச்
சொப்பணம் போல் வருமா??

சுற்றி எங்கணும்
சாம்பிராணி நறு மணம்
முற்றம் முழுவதும்
முகை மல்லிகை
தேவர் யாவரும்
புடை சூழ்கிறார்கள்
சுந்தரிகள் என் தோழியராகின்றனர்

மயில் வாகனம் வந்தாயிற்று
பசு வாகனமும் வந்தாயிற்று
வளை பொத்தானும் வந்தாயிற்று
சர்பமஞ்ஞத்தோனும் வந்தாயிற்று
தாமரை பூவரசிகளும் வந்தாயிற்று

எல்லோர் கைகளிலும்
ரோயா இதழ்கள்
அந்த நேரத்தில் நம் மேல் துாவ....

மந்திரங்கள் ஓதுகின்றன
கெட்டி மேளங்கள்
கொட்டு கின்றன - என்
சங்கிலேற மஞ்ஞள் வடமில்லையே
அந்தோ நெற்றிக்கண் திறந்ததுவே
முக்கண் காய் மேலே மஞ்ஞள் வடம்

முத்தலையோன் வடமெடுத்து
அவரிடம் கொடுக்க.- என்
சங்கிலது ஏறுகையில்
கெட்டி மேள்ங்கள் முழங்கலாயின

வானம் தன் வாழ்த்தை
இடியாய் கொட்டிற்று
மேகம் தன் வாழ்த்தை
மழையாய் துாவிற்று
பூமி தன் வாழ்த்தை
மின்னலுடனும் காற்றுடனும்
சேர்ந்து சொல்லிற்று
எல்லோர் கைகளிலும் இருந்த
ரோயா இதழ்கள் எங்கள் மேலே

செந்திலகமிடும் நேரம் வந்ததே
காஷ்மிர் தேவதைகள்
திருமணபதி வந்து - என்
மணவாளனிடம் - பல
குவளைகளை நீட்டின - என்
மணவாளனோ யார் மனதும்
புண்பட கூடாதென்று எல்லோர்
குவளையிலும் சிறு துளி எடுத்து
என் நுதலில் செம்பிறையிட்டார்

அவ்வளவு நேரமும் மூடியிருந்த
என் கண்கள் திறந்தன
அப்போதுதான் தெரிந்தது - அது
என் படுக்கை அறை என்றும் - நான்
கண்டது கனவென்றும்.........

9 கருத்துகள்:

 1. வாரணம் ஆயிரம் சூழ மதுசூதனன் வந்து கைத்தலம் பற்ற கனாக் கண்ட ஆண்டாளின் கனவு போல, முக்கண்ணனை வைத்து என்ன ஒரு அருமையான கனவு! ரசித்துப் படித்தேன். மிக நன்று!

  பதிலளிநீக்கு
 2. வீட்டுல சொல்லி சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க சொல்லுங்க தங்கச்சி

  பதிலளிநீக்கு
 3. கணேஷ் நன்றி
  ராஜி அக்கா எனக்கு மாப்பிள பாத்தாச்சு.....

  பதிலளிநீக்கு
 4. திருமணம் என்பது சுகமானது வரதட்ச்சனை திருமணத்தால் அது பெற்றோர்களுக்கு சுமையாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 5. "சொப்பனங்கள் ஆயிரம்
  கண்டேன் ஆயினும் - இச்
  சொப்பணம் போல் வருமா??"

  இவ்வரிகளை கடைசியில் சேர்த்திருக்கலாமோ என தோன்றியது மொத்தத்தில் அருமையாக உள்ளது

  பதிலளிநீக்கு
 6. அவ்வளவு நேரமும் மூடியிருந்த
  என் கண்கள் திறந்தன
  அப்போதுதான் தெரிந்தது - அது
  என் படுக்கை அறை என்றும் - நான்
  கண்டது கனவென்றும்.........//

  சிறப்போ சிறப்பு திருமண ஆசை இயல்பே திருமணம் ஆகாமல் இருந்தால் நான் நல்ல மாப்பிளையாக பார்க்கவா?

  பதிலளிநீக்கு
 7. சகோதரர்கள் PUTHIYATHENRAL வியபதி உங்களுக்கு என் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 8. கல்யாணத்துக்கு அக்காவுக்கும் மறக்காம அழைப்பு வருமா தங்கையே ? அருமையான கனவு .

  பதிலளிநீக்கு
 9. நிச்சயம் வரும் அக்கா இன்றும் 03 வருடத்துக்கு பிறகு

  பதிலளிநீக்கு