வியாழன், 8 மார்ச், 2012

உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்கள்

அன்னை தெரேசா


அன்னை தெரேசா இன்றும் உலகின் வியப்பின் குறியீடு. மனித வர்க்கமே புறந்தள்ளிய மனிதர்களை மனிதநேயத்தோடு மதிக்க கற்று கொடுத்த மனுசி. கிறிஸ்தவ துறவியாகிய போதும் ஜாதி,மதம்,மொழி கடந்து அன்பால் உலகை ஆழ கற்று தந்த அதிசய பெண். தன்னிடம் பணமில்லாத போதும் பிச்சை எடுத்து மற்றவருக்கு உணவு கொடுத்த மாபெரும் வள்ளல். அதனால்தான் இன்று கத்தோலிக்க கிறிஸ்தவ உலகம் இன்று இவரை புனிதையாக உயர்த்தி கொண்டாடுகின்றது.

ஜான்சி ராணி


ஜான்சி ராணி என்று அழைக்கப்படும் ராணி லக்ஸ்மி பாய் வீரத்தின் விளைநிலம். யாருக்கும் அஞ்சாத புரட்சிப்பெண். ஆண்களே ஆங்கிலேயருக்கு அடிமையாக துணிந்த காலகட்டத்தில் வாளெடுத்து வில்தொடுத்த வீராங்கனை. இவர் வரலாற்றின் சரித்திர குறியீடு. பிரித்தானியாவையே நடுங்க செய்த பெண், ஆண்களை ஆண்ட விக்டோரியா மாராணியையே கதிகலங்க வைத்த வீரப்பெண்.

க்ளியோபாட்ரா


எகிப்தின் தலை சிறந்த மாராணிகளுள் முதலிடம் பெறுபவள். அழகால் உலகை ஆண்டவள் எனும் பெருமை இவளையே சாரும். தந்தை இறந்த பின் ஆட்சி செய்ய வந்தாள். 18வது வயதிலேயே ஆட்சி தந்திரோபாயங்களை பயன்படுத்தி சிறந்த எகிப்தை உருவாக்க பாடுபட்டவள். அப்போதைய உலகின் சாம்ராட்சியமான உரோமை நிர்மூலப்படுத்திய சாதனை மங்கை. அழகுடன் சேர்த்து வீரத்தையும் கொண்டிருந்தவள். இன்று வரை இவளின் இறப்பு வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

10 கருத்துகள்:

 1. Saint.அன்னை தெரேசா...என்னை திரும்பி பார்க்க வைத்து...திருந்தி வாழ வைத்த நடமாடிய தெய்வம்...

  நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. Thanks for removing Word Verification Esther...It helps me comment from anywhere...Cheers

  பதிலளிநீக்கு
 3. மனித நேயம் , வீரம் , அழகு ..அனைத்து கலைகளையும் பெற்ற அன்பு மங்கையர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி .

  பதிலளிநீக்கு
 4. நன்றி ராஜா அண்ணா

  நன்றி ரெவரி அண்ணா வேர்ட்பிகேஷன் எப்படி எடுப்பது என தெரியாமல் இவ்வளவு நாளும் திண்டாடினேன் மது மதி அண்ணா துணை கொண்ணடு நீக்கினேன்

  நன்றி சசிகலா அக்கா தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
  " பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா " என்ற பாரதியின் வரிகளை நினைவு கூர்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. உங்கள் பயண அனுபவங்களை பகிந்தமைக்கு நன்றி. பாலைதீவை பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி எஸ்தர்.

  பதிலளிநீக்கு