ஞாயிறு, 11 மார்ச், 2012

பாலைதீவுப் பயணம்

எல்லோருக்கும் பயணங்கள் புதுப் புது அனுபவங்களை கொண்டுவரும்.அது போலவே எனக்கும் பாலைதீவுப் பயணம் ஓர் புது வித அனுபவத்தை தந்துள்ளது. நான் இலங்கையில் செலவு செய்து கொண்டிருக்கும் இந்த மூன்று மாதத்திலும் புதுப்புது அனுபவங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றுதான் இந்த பாலைதீவு புனித. அந்தோணியார் திருயாத்திரை ஸ்தல பயணம்.

பாலைதீவு இது கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்களால் உருவான பாரிய தீவு. இதன் வரலாறு வாய் மொழி பாரம்பரியமாக கூறப்படுகின்ற போதிலும் முற்றிலும் உண்மை வாய்ந்தது. பாலைதீவு இது யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகர் எனும் மீனவ கிராமத்துக்கு தெற்கே கிட்டத்தட்ட 03 மணி நேர தொலைவில் அமையப் பெற்ற ஓர் அழகிய தீவு.மினவர்கள் தொழில் செய்த பின் ஓய்வெடுக்கும் தீவாக ஆரம்பத்தில் இருந்தது. பின் தங்கும் மீனவர்கள் தம் பாதுகாப்பிற்காக இறைவனின் அடியார் புனித. அந்தோணியாரின் சொரூபத்தை நிறுவினர். அதன் பின் அங்கு பல புதுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கவே அங்கு ஓர் தேவாலயம் மீனவர்களால் கட்டப்பட்டது. பின் 20ம் நுாற்றாண்டின் ஆரம்பத்திலேயே. இது யாத்திரை ஸ்தலமாக பிரகடணம் செய்யப்பட்டு மக்களின் ஆராதனைக்கு விடப்பட்டது.

சரி என் அனுபவம் இதோ நான் குருநகர் எனும் மீனவ கிராமத்தை சேர்ந்தவள். என்பது என் முன்னய பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும்.ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் ஏதாவதொரு ஞாயிற்று கிழமையில் இத்திருவிழா இடம் பெறும் இத்திருவிழாவிற்கு பெரும்பாலும் மீனவ சமூகத்தை சேர்ந்த மக்களே பயணிப்பார்கள்.

என் குடும்பமும்,எனது சித்திமார், மாமிமார் அவர்களின் பிள்ளைகள் என்று ஓர் 34 பேர் எனது அப்பாவின் ரோலர் படகில் மதியம் 03.00 மணியளவில் பயணிக்க ஆரம்பித்தோம். கடல் தாய் தன் சீற்றத்தை குறைத்து நாங்கள் பயமின்றி செல்ல வழி செய்தாள். அந்த அமைதியான கடல் பரப்பு என் உறவினர்களின் ஆரவாரப்பேச்சு அதன் நடுவே கடல் வாழ் உயிரினங்களின் சாகசம் என தொடர்ந்தது என் பயணம். மேலே பார்த்தால் நீலம் கீழே பார்த்தால் கடும் பச்சை என நிறங்கள் எனை சூழ்ந்து அலங்கரித்தன. நான் இது வரை கண்டிராத நாரைகள் எங்கள் படகை காவல்காப்பதற்காய் அனுப்பப்பட்ட தேவ துாதர்கள் போல் தொடர்ந்து வந்தன.

இரண்டு மணி நேரங்களின் பின் ஓங்கி நிற்கும் தொலைபேசி கம்பமும், புனித அந்தோணியார் இது என் ஸ்தலம் என கைகாட்டி அழைக்கும் உயரமான சிலையும் என் கண்களுக்கு புலப்பட்டன. இதன் பின் 1/2 மணி நேரத்தின் நாங்கள் தீவை சென்றடைந்தோம். நாம் போகையிலேயே ஏற்கனவே நுாற்று கணக்கான குடும்பங்கள் வந்திருந்தன. அவர்கள் அங்கே குளித்து மகழ்ந்து கொண்டிருந்தனர்.

பின் நாங்கள் சிறிய விசைப்படகின் உதவியுடன் எம் பொருட்களுடன் கரையை அடைந்தோம். நாங்கள் இறங்கிய நேரம் சுட்டெரிக்கும் சூரியன் தன் கதிர்களை மடக்கும் மாலை நேரம். பின் எங்களுக்காக ஆயத்தம் பண்ணி துப்பரவு செய்யப்பட்டிருந்த பற்றை புதர்களுக்குள் கூடாரம் அமைத்தோம். அன்றிரவு எல்லாரும் சாப்பிட்டு விட்டு இரவிரவாக துாங்காமல் கதைத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் வந்த தினம் முழு பௌர்ணமி முடிந்து மறுதினம் என்பதால் சந்திரன் தன் கதிர்களை மடக்கவில்லை. அழகிய நிலவின்,ஒளி கடலலையின் ஓசை,அடர்ந்த பற்றைக் காடு என எங்களை சுற்றி எங்கணும் இயற்கை அன்னை நிறைந்திருந்தாள். நானும் என் தங்கையும் இவற்றை எல்லாம் பாத்து பேசிக் கொண்டிருந்தோம் நேரம் அதிகாலைக்கு தாவவே துாக்கத்தை போ என மறுக்காமல் நித்திரைக்கு சென்று விட்டோம்.

மறு நாள் புது காலையில் கண் விளித்தோம். ஓ எவ்வளவு அழகான இயற்றை காட்சி பொழுந்து விட்டெரியும் சூரியனை நேர்முகமாய் தரிசித்தது போல் அனுபவம்.செஞ்சுடர் சூரியனை முழுப்பரிதியாய் சிறிய தொலைவில் பார்ப்பது போல் இரந்தது. அந்த நேரம் கடல் மழுவதும் சிவப்பு நிறமாக இருந்தது. அப்போது எனக்கு இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போல் இருந்தது.

மறுநாளுக்கான சமையல் வேலைகள் என் கூடாரத்தில் ஆரம்பித்தன. என் அம்மாவுக்கு சமையலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அடத்திற்கு ஏன் பாலைதீவு என பெயர் வந்தது என தெரிய வந்தது. அவ்வளவு வெப்பம் தாங்கமுடியாமல் இருந்தது நல்ல வேளை நாங்கள் தங்கியிருந்தது.ஓர் நிழல் பற்றைகளின் கீழ்.

இவ்வளவு அழகான தீவுக்கு இரண்டே இரண்டு குறைதான் ஒன்று வெப்பம் (பகலில் மட்டும்) மற்றது நன்னீர் இன்மை. இத்தீவில் எங்கு தோண்டினாலும் உப்பு நீரையும்,ஊரி சங்கு,சிற்பிகளை தவிர ஒன்றும் வராது. விட்டிலிருந்து புறப்படும் போதே பீப்பாக்களில் தண்ணீர் இறைத்துதான கொண்டு செல்ல வேண்டும்.

அந்நாள் வெம்மையின் கோரம் தாங்க முடியாமல் என் அக்கா தங்கையரோடு நானும் கடலுக்குள் சென்று நீராட ஆரம்பித்தோம். அது எனக்கு என் பாரிஸ் கடற்கரையை நினைவு படுத்தியது. ஜரோப்பியன் கடற்கரைகளுக்கு சரி நிகராக பாலைதீவு கடற்கரை காட்சி தந்தது. மிதப்பிகளுடன் சிறுவர் பெரியவர் என்று வேறு காடு காட்டாமல் அனைவரும் துள்ளி குதித்து விளையாடினர். கடலுக்குள் சில ஆண்களின் சேட்டைகளும் எங்களுக்கு அருக்கத்தான் செய்தது. அதுவும் பது உற்சாகத்தை கொடுத்தது.

பின் உணவருந்தி விட்டு ஆலயம் செல்ல ஆயத்தமானோம். ஆலயம் செல்லும் வழியில் என் தோழியர்,தோழர்கள் எல்லாரையும் கண்டு உரையாடினேன். அப்போது அவர்கள் என்னை தங்கள் கூடாரத்துக்கு அழைத்தனர். வழிபாடு முடிந்த பின் வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

அந்தநாளும் சந்தோஷமாக கழிந்து விட்டது. மறுநாள் அந்நாள் நாங்கள் வந்ததற்கு காரணம் அதுதான் திருவிழா நாள். காலை திருவிழாவில் எல்லோரும் கலந்து கொண்டோம். அந்தநாள் அருகிலிருக்கும் சிறு சிறு தீவுகளில் இருந்து மக்கள் வந்த வண்ணமே இருந்தனர். அந்தநாள் திருவிழாவிற்கு வந்தவர்களை விட கடலில் குளிப்பதற்காக வந்தவர்கள் அதிகம் என எண்ணுகிறேன். ஆனால் தீவில் சுமார் 5000 ற்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

பின் கூடாரம் சென்று உடைகளை மாற்றிவிட்டு சமையல் வேலை எல்லாம் செய்த பின் குளிப்பதற்கு தயார் ஆனோம். அந்தன்று கடலில் குளிப்பதற்கே இடமில்லை அவ்வளவு சனம் எங்கிருந்தோ எஸ்தர் என்று என்னை அழைப்பதாக குரல் கேட்டது சுற்றிலும் பார்த்தும் யாரென்று தெரியவில்ல அவ்வளவத்திற்கு சன நெருசல் காணப்பட்டது.

கடலில் பந்து எறிந்து விளையாடி ஒடித்திரிந்து விளையாடி எல்லேரும் சந்தாஷமாக இருந்தோம். இந்தன்றே நாம் வீடதிரும்ப போகிறோம் என்பதை மறந்து.

குளித்த பின் கூடாரம் சென்றோம் கூடாரமெல்லாம் பிரிக்கப்பட்டு கொண்டிருந்தது. எம் பொருட்களெல்லாம் பொதி செய்யப்பட்டு மீண்டும் குருநகர் செல்ல தயார் நிலையில் இருந்தது. விட்டு செல்ல மனமில்லை எனினும் சென்றுதானே ஆக வேண்டும். ஆசையாய் சுற்றிய இடங்களை மீண்டுமொருமுறை பார்த்து விட்டு படகில் ஏறினோம் மீண்டும் அதே அனுபவம்..

என்வாழ்வில் மறக்க முடியாத இனிய அனுபவமாக மாறிப்போனது இந்த பாலைதீவு அனுபவம். இனி நான் நினைத்தாலும் இதை அனுபவிக்க முடியாது. அந்த இனிய நினைவுகளோடு இதனை எழுதுகிறேன் மீண்டும் புரட்டி பார்ப்பதற்காய்
--எஸ்தர்--- 

12 கருத்துகள்:

 1. என் இன்றைய இடுகை வாழ்த்தியல் 25 இட்டுத் திரும்பும் போது, தங்கள் இடுகை கண்ணிற்பட்டது. தமிழ் மணத்தில். பாலை தீவு - என்று இருக்க பாலிதீவோ என்று பர்க்க விழைந்து அற்புதம் அறிந்தேன். நேரிற் சென்றது போல உணர்வு சகோதரி. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,112,116.48 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  பதிலளிநீக்கு
 3. அந்த இயற்கை எழில் கொஞ்சும் வித்தியாசமான இடத்தை நானும் கண்டு அனுபவித்தது போன்ற உணர்வை உங்களது எழுத்துக்கள் தந்தது எஸ்தர். மிக ரசித்துப் படித்தேன். நன்று.

  பதிலளிநீக்கு
 4. உலகம் சுற்றும் வாலிபியோ? பகிர்வுக்கு நன்றி தங்கச்சி

  பதிலளிநீக்கு
 5. நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. நன்றி கனேஷ் அண்ணா உங்கள் ஆதரவு மேலும் எனக்கு வலு சேர்க்கிறது.

  அவ்வாறே ராஜி அக்காவிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 7. நல்லதொரு பதிவு.மண்டைதீவு எனும் மண்ணில் பிறந்தும் இன்றுவரை பாலைதீவுக்குச் செல்ல வாய்ப்புக் கிட்டாத என் போன்றவர்களுக்கு அத் தீவுக்குச் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இன்னும் கொஞ்சம் படங்கள், விரிவான விளக்கம் இருந்தால் உங்கள் கட்டுரை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். எதுவாக இருந்தாலும் பாலைதீவில் குடிநீர் உள்ளதா? என்ற, என் மனதில் பல வருடங்களாக உறங்கிக் கிடந்த 'கேள்விக்கு' விடை தந்தமைக்கு நன்றிகள்.

  "ஒன்றுபட்டு உயர்வோம்"

  அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்
  ஆசிரியர்
  அந்திமாலை
  www.anthimaalai.dk

  பதிலளிநீக்கு
 8. புனித. அந்தோணியார் திருயாத்திரை ஸ்தல பயணம் நேரில் சென்றது போல உணர்வு...தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 9. நன்றி இ.சொ.லிங்கதாசன் ஜயா அவர்களே என்னும் ஏராள படங்கள் கொடுத்திருக்கலாம் இலங்கை மின்சாரத்தை பற்றிதான் உங்களுக்கு தெரிந்திருக்குமே..
  நன்றி ரெவரி அண்ணா

  பதிலளிநீக்கு
 10. மிகவும் சிறப்பான பதிவு உண்மையில் இந்த இடத்தின் தன்மையும் அதேவேளை உங்களின் நேரிய விளக்கங்களும் நேரடிய காணும் காட்சி போல எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது பாராட்டுகள் ...

  பதிலளிநீக்கு
 11. நன்பேண்டா...இல்லை நண்பரே இது வேறு

  மாலதி அக்கா தங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்

  பதிலளிநீக்கு