புதன், 14 மார்ச், 2012

விலங்கை உடைத்தெறி திருப்பெண்னெ

கதை கேளு திருப்பெண்னே
உலகை கண்டு பயப்படாதே
நியாயங்கள் தோற்றுப் போகுமோ?
அநியாயம் வாகை சூடுமோ?
இல்லையே........................................
உன் நியாயத்தை உரக்க கேளு
வெல்லுவாய் உலகை 
எதற்கும் சிரம் தாழ்த்தாதே


நீ நாணல் புல்லம்மா
புயல் அடிக்கலாம்
தென்றல் வீசலாம்
சாய்வாய் மாண்டு விடுவாயோ?
பூகம்பமே தாக்கினாலும்
வேர் விட்டு முளைப்பாயன்றோ
பெண்ணாக வாழ துணிந்த பின்
பெண்ணியம் போற்றிடு - உன்னில்
பாலியல்தாரி எனும் முகத்திரை கிளித்திடு
உடலை சித்தரிக்க தெரிந்த - எனக்கு
உலகை சித்தரிக்க தெரியாதா?


வாழ்க்கை எனும் பாதை 
பரமபதம் போலவே
ஏணியுண்டு சர்ப்பமுமுண்டு
போகும் பாதை மத்தியிலுண்டு
முயர்ச்சி துணிவு என்ற ஏணிகள் 
உன்னை ஏற்றி விடும்
பயம் சோகம் எனும் பாம்புகள் 
உன்னை கொத்தி விடும்
கொத்த வரும் பாம்புகளை 
வாளெடுத்து வெட்டி விடு
அலி என்று கூறும் நாய்களை 
கந்தகம் கொட்டி கொளுத்திடு


நீ பட்டாம் பூச்சியடி 
வண்ணமிருந்தும் வண்ணமில்லை
சிறகிருந்தும் பறக்க முடியவில்லை
எச்சில் கூட்டுக்குள் இருந்து 
வெளியே வர நினைத்தாலும்
சாதிக்க துடிக்கும் உன்னை - துாற்றி
சாக்கடையில் வீழ்த்தும் மானிடரால்
அப்படியே கிடக்கிறாய்
கூட்டை பிய்த்தெறி
சிறகின் விலங்கை உடைத்தெறி
விண்ணை தொட உயரப்பற
வானத்தை வண்ணமய மாக்கு........எஸ்தர்.....

6 கருத்துகள்:

 1. ஆசியாவில் தான் திருநங்கைகளை அதிகம் அடக்குமுறை செய்கின்றது சமுகம்.திருநங்கைகளின் ஏக்கங்களுக்கு விடிவு கிடைக்கனும் அவர்களின் அறியாமையைப் போக்கனும் என எழுச்சி கொள்ளவைக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 3. நல்லாயிருந்தது உத்வேகக்கவிதை சகோதரி எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 4. தன்னம்பிக்கை வரிகள்....


  இவர்களும் சமூகத்தின் அங்கத்தினர் என்ற தன்னம்பிக்கையை இவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்...

  பதிலளிநீக்கு
 5. தனிமரம் ஆசிரியருக்கு என் நன்றிகள் நிச்சயம் ஆசியாவில் இவர்கள் நிலை இப்போதுதான் சற்று முன்னேறி வருகிறது

  நன்றி ரெவரி அண்ணா

  நன்றி அருள் அண்ணா

  நன்றி சௌந்தர் அண்ணா

  பதிலளிநீக்கு
 6. உணர்ச்சி மிகும் வரிகள் . உணர வேண்டும் .

  பதிலளிநீக்கு