வியாழன், 15 மார்ச், 2012

ஜ.நா வின் முயர்ச்சி வெல்லுமா???

இன்று உலகளாவிய ரீதியில் பெரும்பாலும் பேசப்படும் விடயம். அமெரிக்கா ஜ.நா சபையூடாக இலங்கையின் கொடூர செயல்களுக்கெதிராக கொண்டு வந்த போர்க்குற்ற தீர்மானமே.

கடந்த யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு நடந்த கொடூரங்கள் சொல்லில் அடங்காதவை. நானே நேரடி சாட்சியங்களை கண்டுள்ளேன். அவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லிலும் வேதனை,மகாதுக்கம்,வெளிப்படும். இதை கேட்ட நானே குளறி அழுதுள்ளேன். நான் அந்த கால கட்டங்களில் பிரான்ஸில் இருந்ததால் என்னால் உணர முடியவில்லை. ஆனால் என் குடும்பத்தினர் அனுபவித்தனர். இப்போது நான் வன்னியில் இருந்தும்,புணர் வாழ்வு நிலையங்களில் இருந்து வரும் என் சொந்தங்களை விசாரிக்கும் போது அதன் கொடுமைகள் புரிகின்றன.

எம் கன்னி பெண்கள்,பெண் சிறுமியர் அந்த கேடான சிங்கள் ராணுவத்தினரின் பாலியல் வேட்டைக்கு இலக்காகி தம் உயிரை ஈந்தனர். காமத்தின் பசி மேலோங்கி காணப்படும் சிங்களவனே ஏன் நீயும் ஓர் பெண்ணின் வயிற்றில் பிறந்தாய் என்பதை மறந்து விட்டாயா? உனக்கு 10,12 வயது தமிழ் சிறுமியர்தானா கிடைத்தனர். இவை நான் சந்தித்த நபர்கள் நேரில் கண்ட அனுபவங்கள்.

இதுமட்டுமல்ல கர்ப்பிணி பெண்களை கூட இந்த காம நாய்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கொடுமைப்படுத்தி கடித்து கொதறியுள்ளனர். பெண்கள் சமுதாயமே கொந்தளி உன் வர்க்கத்திற்கு நடந்த கொடுமைக்கு சிங்கள அரசிடம் நீதிகேள் ஜ.நாவுடன் இணைந்து கொள்.

இதற்காக மனச்சாடசியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் இன்று தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் படுகின்றது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேற்று சனல் 04 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களங்கள்,தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற தனது இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயதேயான பால சந்திரன் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதும், பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்டு ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பதுங்கியிருந்த இடத்துக்குள் எறிகணை தாகடகுதல் நடத்தியதும்,காயமடைந்து உயிருக்கு போராடிய மக்களுக்கு மருத்து வசதிகளை கொடுக்க விடாது தடுத்ததும், பெண்கள் சிறுவர்கள் உட்பட பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த அனைவரையும் பட்டினி போட்டு கொலை செய்தது, என பிரதான 04 குற்றங்களை அந்த ஆவணப்படம் சுட்டி காட்டுகிறது.

இதற்கிடையில் இப்போது யாழ்ப்பாணம் உட்பட சகல இடங்களிலும் வசிக்கும் தமிழ் மக்களை கட்டாயப்படுத்தியும்,இலங்கை அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்குமாறு ராணுவமும் கேடு கெட்ட கறுப்பு ஆட்டு மந்தையுமான ஈழமக்கள் சன நாயக கட்சியும் வற்புறுத்தியது. இதை அறிந்து படம் பிடிக்க சென்ற என் கமராவுக்கு நடந்தது சொல்ல தேவயில்லை.என்னையும் பிடித்து அக்கூட்டத்தில் விடப்பார்த்தனர். அப்புறம் நான் பிராஸ் குடியுரிமைக்காரி என அறிந்து விட்டுவிட்டனர்.

இப்படிப்பட்ட கேடான செயல்கள் நடப்பது இன்று உலகம் காணா உண்மை. ஆனால் ஆதரவு கொடுக்க வேண்டிய இந்தி அரசு இன்னும் இந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது புரியாத புதிராக உள்ளது.

இறுதியாக என் கோரிக்கை என்னவெனில் அனைவரும் ஒன்றுபடுவோம். தமிழர்களுக்கு நடந்த அவலத்தை தட்டி கேட்போம். அமெரிக்காவுடன் கை கோர்ப்போம்.இந்தியாவை மனமாற்றுவோம். ஜ.நாவின் முயர்ச்சி வெல்ல ஒத்துளைப்போம். இப்போது இலங்கையில் ஆரம்பித்திருக்கும் கட்டாயப்கடுத்தல் போராட்டத்திற்கு எதிராகவும் முழங்குவோம்.............எஸ்தர்..........

4 கருத்துகள்:

 1. ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

  http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 2. இத்தனை கொடுமைகளையும் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருந்த சர்வதேசம் இப்போதும் மெளனம் காக்கின்றது ஒரு வேளை தமிழ் உயிர்கள் அவர்களின் பார்வையில் பெறுமதியில்லையோ என்று எண்ண வைக்கின்றது.

  பதிலளிநீக்கு
 3. உண்மை எஸ்தர்... இதற்காக ஒவ்வொரு தமிழரும் குரல் எழுப்ப வேண்டும். இனி உலகில் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்திடக் கூடாது.

  பதிலளிநீக்கு