செவ்வாய், 20 மார்ச், 2012

நானும் ஒரு பெண் (சிறு கதை)

மது ஏன் அழுகிறாய்?
அழாதே.........
அழாதேமா.............

மஞ்ஞல் பூசிய அவள் முகத்தில் ஆறு போல் பெருக்கெடுத்த அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறுகிறாள் சுமதி...
 நீர்வாண சடங்கை முடித்து விட்டு நீராட்டு விழாவிற்காக அலங்கரிக்கப் பட்டிருந்த மதுவின் முகத்தில் அந்த அழுகையிலும் சந்தோஷம் புறம்பாக மின்னியது. அந்த தருணத்தில் தன் கொடுமை நிறைந்த கடந்த கால வாழ்வை மீட்டு பார்க்கிறாள் மது.....

பொன்நகர் எனும் அழகிய கிராமம்.. மதிப்பு மிக்க குடும்பத்தில் ஜந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தவன் மதுசன்.மூத்தது ஒரு ஆண் ஒரு பெண் இளையதும் அவ்வாறே..


மதுசன் நன்றாக படிக்க கூடியவன் வகுப்பில் எப்போதும் முதல் இடம். பாடசாலையில் சின் நிகழ்வென்றாலும் மதுவிக் நடனம் நிச்சயம் இடம் பெறும். மது பிறப்பில் ஓர் ஆண் ஆனால் பாடசாலையிலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் பெண்களுடனே பழகுவான். தன்னை எல்லோரும் வாடி போடி என்று பேசுவதையே விரும்பினான். தன் யாரும் ஆண் என்று கூறினால் உடனே அழுது விடுவான். அதனால் வகுப்பில் ஆண்களும் சரி பெண்களும் சரி மதுவை அவன் விருப்ப படியே அழைத்து வந்தனர். இது அவனின் வீட்டாரின் காதில் எட்டவே பெரிய பூகம்பம் விட்டில் வெடித்தது.அது மட்டுமல்ல அவனின் கால்களில் தணலும் கொஞ்ஙி விளையாடிது. ஆடும் திறமை கொண்ட அவனுக்கு ஆடவதற்கு தடை விதிக்கப்பட்து.

ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அக்காவின் உடையையும் ஆபரணங்களையும் அணிந்து ஆடும் பழக்கம் இவனுக்கு உண்டு வழமை போல் மது ஆடுகையில் தற்செயலாக அங்கே வந்த மதுவின் அண்ணன் கண்டுவிட்டான். பயத்தால் நடுங்கிய மது எல்லாவற்றையும் அவசர அவசரமாக களற்றி வீசினான்.

”உனக்கு இப்ப இல்ல எல்லாரும் வரட்டும் செய்யுறன் வேல” என்றான் கணத்த குரலில் அண்ணன் பாலு காலில் விழுந்து அழுதான் ஆனாலும் இரக்கமின்றி வீட்டில் யாவரும் வந்த பிறகு நடந்தவற்றை கூறினான். இரக்கமின்றி மாறி மாறி எல்லோரும் மதுவை வார்த்தைகளாலும் தடியாலும் தாக்கினர். வீட்டை விட்டு செல்வதற்கே தடைவிதித்தனர். ஏனென்றால் மதுவிற்கு அப்பாவிற்கு யாரோ இவன் சில திருநங்கைகளுடன் பேசுவதை கண்டுவிட்டு கூறியுள்ளனர்..

சில நாள் பாடசாலைக்குக் கூட போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த மதுவிற்கு அம்மாவும் சின்ன தம்பி தங்கை தவிர யாரும் ஆறுதல் கிடையாது.
பின் பல கட்டுப்பாடுகளின் கீழ் பாடசாலைக்கு அனுப்பப்பட்டான் மது. வீதியால் செல்லும் போதே பலரும் பல விதமாக பேசுவதை கண்டு

”நான் ஏன் இப்படி இருக்க வேண்டும்? நான் ஆண்தானே ஏன் பெண்ணாக இருக்க ஆசைப் படுகிறேன் இல்லை நான் ஆண்தான்” என்ற கம்பீரத்துடன் புறப்பட்டவன் கண்ணில் மின்னினான் பாலா தான் ஆண் என்பதை அந்த நொடியே வெறுத்தாள் நானா என்னை ஆனாக நினைத்தேன் சீசீசீக்க்க் என்று தன்னையே நச்சித்தான்.அந்த நொடியே பாலா மேல் காதல் கொண்டாள்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் இக்கெட்டான சூழ்நிலையை தன் உற்ற தோழிகள் சிலரிடம் கூறினான் மது.அவர்களும் பலவிதமான தீர்வு தேடினர் இறுதியாக காவேரி என்பவள் ஒரு யோசனை கூறினாள் தன் தெருவில் சுமதி என்ற ஓர் அக்கா இருப்பதாகவும் ஆரம்பத்தில் அவர் இப்படித்தான் இருந்ததாகவும் கூறினாள். கூறியவள் சுமதியிடமும் அழைத்து சென்றாள். மது சுமதியிடம் எல்லாவற்றையும் கூறினாள்...

அதற்கு சுமதி ”இங்க பாருமா இனி நீ மதுசன் கிடையாது நீ இனி மதுசா... நம்மள இந்த ஒலகம் புரிஞ்சுக்க முற்படுறது றொம்ப கஸ்டம்மா என்றாலும் நாம வீட்ட விட்டு வெளிய வந்தா பெரிய ஆபத்து இந்தா உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கோ இப்போத மனமில்லாவிட்டாலும் நாசமா போன இந்த பாவ வேல செய்து பொளப்பு நடத்துற நிலையா போச்சுமா முடிஞ்ச வரைக்கும் உன்ன பத்தி உன் வீட்டு காரங்களுக்கு கூறு ஏத்துகிட்டா உண்டு இல்லண்ணா வெளிய வந்திடு”.

இதை காதில் வாங்கிய மது வீடு சென்று எல்லாரும் இருக்கும் நேரத்தில் தன் நிலை பற்றி அழுது பலம்பி கூறினாள்.
ஆனால் அவர்களோ........

”சீசீ வாயை மூடு உன்னால எங்களுக்கு வெட்கமாய் இருக்கு.. எங்களுக்கு அவமானமாய் இருக்கு”     என்று கூறி திட்டினர். மதுவோ

”நீங்கள் எல்லாரும் எங்களுக்கு அவமானமாய் இருக்கு எங்களுக்கு வெட்கமாய் இருக்கு என்று உங்கள பத்தியே யோசிக்கிறீங்க என்ன பத்தி யாரும் கவலபடுறது கிடையாது என்ர மனசில எவ்வளவு வேதன இருக்கின்னு யாருக்கும் புரியல..”

என்று கூறிவிட்டு தான் படித்ததற்கான ஆதாரத்தை மட்டும் எடுத்து கொண்டு தன் புது உலகை நோக்கி புறப்பட்டாள். தெருக்களில்,பஸ்களில் தனக்கு நடந்த கொடுமைகளை நினைத்தவாறு சுமதி வீட்டிற்கு சென்றாள் அவளும் அவளை தங்கையாக ஏற்றாள்

என்னம்மா யோசிக்கிறாய்..........
மதுவை தட்டி கேட்கிறாள் அவள் தாயம்மா
”இல்லம்மா நான் அவனாய் இருந்தப்போ நடந்தவற்றை நினைத்துப் பார்த்தேன்” என்றாள்
அளவுக்கடங்கா சந்தோசத்தோடும் இப்போது நானும் ஒரு பெண் என்ற உள்ள செருக்கோடும்.அவள் காதலன் நினைவுகளோடு.. 

8 கருத்துகள்:

 1. நல்லதொரு கருத்தைச் சொல்ல சிறுகதை முயற்சியை முன்னெடுத்திருக்கிறீர்கள். நன்று! இன்னும் சில சிறுகதைகள் எழுதினால் எழுத்து மெருகேறும். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. திருநங்கைகளின் உணர்வை உரித்து வைத்து விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 3. நானும் ஒரு பெண் முடித்த விதம் அழகு தொடருங்கள் சகோ .

  பதிலளிநீக்கு
 4. D.G.V.P.SEKAR மிக்க நன்றி

  சசிகலா அக்கா கருத்துரைக்கு நன்றி முடிவில் சகோதரி என்று முடிக்காமல் சகோ என்று இடைநிறுத்தம் செய்ததேனோ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 6. நிச்சயம் வந்து பார்க்கிறேன். சசி அக்கா

  பதிலளிநீக்கு