புதன், 28 மார்ச், 2012

நான் ஓர் சுயநல காதலி

என் தோழியின் காதலன் - என
தெரிந்தும் உன் மேல் காதல் கொண்டேன்
உன் அழகை கண்டு அல்ல - நீ
அடுத்தவர் மேல் கொண்டுள்ள
பாசத்தையும், நேசத்தையும் கண்டு
அது எனக்கும் கிடைக்க கூடாதா என்ற
ஏக்கத்திலேயே உன் மேல் காதல் கொண்டேன்.

என் தோழிக்காய் என் வாயை மூடி
பாதலை மறைத்தேன். ஆனால்
உன் மனதில் அவளில்லை
நான்தான் இருக்கிறேன் - என
அறிந்தும் என் காதலை நான் மறைத்தால்
அது என் முட்டாள் தனம்

என் தோழிக்கு துரோகம் செய்ய
எனக்கு விருப்பமில்லை - ஆனால்
இது துரோகமாக எனக்கு தெரியவில்வை
அவளின் ஒரு தலை காதல் ஜயோ பாவம்

ஆனால் யாருக்கும் உன்னை நான்
விட்டுக் கொடுக்க தயாராக இல்லை
தியாகி என்று கூறிவிட்டு உன்னை
அவளோடு சேர்த்து வைக்க மாட்டேன்
நான் என்ன பொதுவுடமைவாதியா?
உன்னை தானம் வார்க்க - அல்லது
நீ என்ன பொதுவுடமையா? தானம் கொடுக்க
மொத்தத்தில் நான் ஓர் சுயநல காதலி...

6 கருத்துகள்:

 1. கிடைத்தற்கரிய பாசமிகு காதலை
  விட்டுக்கொடுக்க மனம் வருமா!!!?

  உணர்சிக் குவியலாய் ஒரு அழகிய கவிதை சகோதரி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி சகோதரர்களே.... மகேந்திரன் அண்ணா உங்களை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இதில் சுயநலம் என்பது மற்றவர் பார்வையில் தான், நமது வாழ்க்கையை எதுக்கு மற்றவர் பார்வையில் வாழ வேண்டும்?

  நாம் விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழும்போது அது மற்றவர்களுக்கு சுயநலமாக தெரிந்தால் அது சுயநலமாகவே இருக்கட்டும். ஒருதலைப்பத்சமநதுஎந தெரிந்தும் விட்டுக்கொடுக்க வேண்டும் என நினைப்பது மட்டும் சுயநலம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 4. இதில் சுயநலம் என்பது மற்றவர் பார்வையில் தான், நமது வாழ்க்கையை எதுக்கு மற்றவர் பார்வையில் வாழ வேண்டும்?

  நாம் விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழும்போது அது மற்றவர்களுக்கு சுயநலமாக தெரிந்தால் அது சுயநலமாகவே இருக்கட்டும். ஒருதலைப்பத்சமநதுஎந தெரிந்தும் விட்டுக்கொடுக்க வேண்டும் என நினைப்பது மட்டும் சுயநலம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 5. யார் என்ன சொன்னால் என்ன என் காதலன் எனக்கு மட்டும்தான் டனஸ் அண்ணா

  பதிலளிநீக்கு