வெள்ளி, 30 மார்ச், 2012

பூவாய் இருந்தோம் புலியானோம்

அழகாய் பட்டுடுத்தி
கால் சதங்கை அணிந்து
வலம் வந்த எம் கால்கள்
காட்டிலும் முட்களிலும்
பள்ளம் மேடு பற்றைகளிலும்
மேய்தது ஏன் - எம்
தமிழினத்திற்காகவன்றோ

பூவாய் இருந்தோம்
புலியானோம் - எம்
தமிழ் பெண்களை காக்கக
ஈழத்து ஜான்சி ராணிகளானோம்
பாரதம் கண்டது ஒரு லக்ஸ்மி பாயை
தமிழீழம் கண்டது
ஆயிர கணக்கான லக்ஸ்மி பாயை

பாவாடை தாவணியில்
நல்லுார் கோவலில்
பார்த்த உங்களை - காட்டிலில்
நீள காற்சட்டையுடன்
பார்த்தோமே - எம தமிழ்னத்திற்காய்

மற்றய பெண்கள்
காதல் கல்யாணம் குழந்தை
என்றிருக்க நீங்கள் தமிழே
இவையெல்லாம் என்றிருந்தீர்கள்
உங்களுக்கு யாரை நான் ஈடு சொல்ல

தலை பின்னி மல்லிகை பூ
சூடவேண்டிய உங்கள் கூந்தல்
தோட்டாக்களை சுமந்ததேன்.?
குடம் துாக்கி நீர் இறைக்க வேண்டிய
உங்கள் இடுப்பு ஆட்றோளி சுமந்ததேன்?
அழகாய் குழந்தை துாக்கி
கொஞ்ச வேண்டிய உங்கள் தோள்கள்
வெடி குண்டுகள் சுமந்ததேன்?

படிக்க புத்தகமும் பேனாவும்
ஏந்த வேண்டிய உங்கள்
கைகள் துப்பாக்கி ஏந்தியதேன்.?
காதல் வானில் வட்டமிட்டு
நிலவை பார்த்து கவிதை
பாடவேண்டிய நீ
புரட்ச்சி கவிதைகள் தோற்றியதேன்.?

எல்லாம் முடிந்ததென்று இன்று
வெறி கொண்ட நாய்களிடம்
சிக்கி மூளைசிதறி அம்மணமாகி
கற்பையும் தமிழிற்காய் பறி கொடுத்து
மண்ணானதேன்? - எல்லாம்
தமழினத்தை காக்கவன்றோ

9 கருத்துகள்:

 1. தமிழர்  அடிமை வாழ்வுக்கு முடிவுரை எழுத்தப் போனவர்கள் மங்கைகள் அவர்கள் முகத்தின் வலிகள்அதிகம் ஆழ மிக்க கவிதையில் சொல்லியிருக்கின்றீர்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரி!முதல்முறையாக உங்கள் வலைப்பூவில் அடியேன்.கவிதை மழை பொழிந்தது!என்ன சொல்ல,என்ன எழுத?நாமெல்லாம் சுயநலமிகள்!!!!

  பதிலளிநீக்கு
 3. மனம் கனக்கச் செகிறது கவிதை.
  இரணமாகிபோன உணர்வுகளின் வெளிப்பாடு...

  பதிலளிநீக்கு
 4. நம் தமிழ் பெண்கள் சங்ககாலம் தொட்டு இன்றுவரை வீரம் நிறைந்தவர்கள் என்பதை நிருபித்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
 5. நல்லோர்களிடத்தில் பூவாகவும், தீயோரிடத்தில் புலியாகவும் மாறிதான் தீர வேண்டும் தங்கச்சி. அப்போதுதான் அநீதியை வேரறுக்க முடியும்

  பதிலளிநீக்கு
 6. என் தோட்டத்து மலர்கள் எல்லாம் என் சகோதரியே உன் பாதம் சொறிந்து வணங்குவதற்கே. எம் இனத்தை காக்க நீ காடுமேடலைந்தாய் ஆனால் ஈன நாய் பிறவிகள் காட்டிக் கொடுப்புடன் உன் மானம் மட்டுமல்ல உயிரையும் பறி கொடுத்தாயே. ஊமையாய் அழுகின்றோம். என் அன்னையே.

  பதிலளிநீக்கு
 7. நிச்சயம் ராஜி அக்கா. அநீதி கழைய வேண்டுமானால் புலியாகத்தான் வேண்டும்..

  பதிலளிநீக்கு