ஞாயிறு, 25 மார்ச், 2012

என்னை அழ வைத்த passion the christ

ப்போது கிறஸ்தவர்களின் தபக் காலம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இக் காலங்களில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பனவற்றை நினைவு கூர்ந்து பல விதமான கலை நிகழ்வுகளையும் வழிபாடுகளையும் நடத்துவர். அந்த வகையில் கிறிஸ்தவ தொலைக்காட்சிகளும். இவ்வாறான கருத்துள்ள நிகழ்ச்சிகளையே தொகுத்து ஒளிபரப்பும். அந்த வகையில் நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் மட்டுமே l.b.n கேபிள் மூலம் ஒளிபரப்பப்படுகின்ற தமிழ் கத்தோலிக்க லங்கா தொலைக்காட்சி என்ற தொலைக் காட்சியில் நேற்றய தினம் passion of the christ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இத் திரைப்படம் பற்றி கேள்வி பட்டுள்ளேன் ஆனால் முதன் முறை பார்த்தேன்.

ஏற்கனவே இயேசுவின் வரலாறுகளை கூறும் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ள போதும் அவரின் பாடுகளை மையப்படுத்தி வந்த முழு நீள திரைப்படம் இதுதான். இதில் யேசுவாக நடித்த நடிகர் நிஜயேசு எப்படி இருந்திருப்பாரோ தெரியாது ஆனால் வரை பார்க்கும் போது ஒரு தெய்வ பயம் நெஞ்சில் ஏற்படுகின்றது. எல்லா பாத்திரங்களும் தம் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

கசையடிகள், முள்முடி தரித்தல், சிலுவையில் அறைதல் போன்றவற்றிலும் தசைகள் கிளிந்து இரத்தம் ஆறு போல் ஓடும் நேரங்களிலும் என்னை அறியாமல் நானே அழுது விட்டேன் ஏனென்றால் காட்சிகள் அனைத்தும் உண்மையாக எடுக்கப்பட்வைகளாக காட்சி தந்தன. என்னோடு சேர்ந்து என் குடும்பமும் கண்ணீர் கடலில் மூழ்கினர் என்று சொல்ல எனக்கு ஜயமில்லை. நீங்கள் இப்படம் பார்க்கவில்லை எனில் இதோ உங்களுக்காக முழு திரைப்படமும்.........


4 கருத்துகள்:

  1. தெய்வங்கள் பல நிகழ்வுகளை பாரமாகச் சுமந்து தான் பாடமாக காட்டியிருக்கின்றார்கள் புரிந்து கொள்வது நம் புரிதலில் இருக்கு தோழி.பார்த்தபடம் தான் என்றாலும் கல்வாரி மறக்கமுடியாது!

    பதிலளிநீக்கு
  2. நான் பள்ளி படிக்கிற காலத்துல ஸ்கூல்ல ‘ஏசுநாதர்’ன்னு ஒரு படம் போட்டுக் காட்டினாங்க. ஜீசஸின் தியாகத்தப் பார்த்து அப்பவே அழுதிருக்கேன் நான். எஸ்தர் சொன்னதுக்காக இந்தப் படத்தையும் பாத்துடறேன். சரியா!

    பதிலளிநீக்கு