ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மரித்துப் பிளைத்தவள் 01

பீரங்கிகள் முழங்க கொண்டாடிய என் முதலாவது கிறந்த தினம்.

நான் என் தாயின் வயிற்றில் உதிக்கும் போதே என் நாடு யுத்த மயமாய்தான் இருந்தது. 1992 கார்த்திகை 15 நான் யாழ்ப்பாண பூமியில் பிறந்தேன். நான் பிறக்கும் போதே இலங்கையில் யுத்த நிலை மோசமாய் அமைந்தது..

ஆகாய தாக்குதலின்
நினைவுத் துாபி
1993 என் முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக பல ஏற்பாடுகள் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது. என் அக்காமார் சித்திமார் என்று பலரும் கொண்டாட்ட வேலைகளிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 13ம் திகதி ஆகாய விமானத்தின் மூலம் என் குருநகருக்கு எதிரே இருக்கும் கல்முனை எனும் இடத்தில் இருந்த புலிகளின் முகாமை இலங்கை ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அது போல் யாழ்ப்பாண் கோட்டையிலுமிருந்து கல்முனைக்கு தாக்குதல் நடத்தினர். ஆனால் அந்த குண்டுகளும், எறிகணைகளும் பெரும்பாலும் வீழ்ந்தது.என் ஊருக்குள்தான். (குருநகர்). குருநகரில் ஓங்கி உயர்ந்திருந்த புனித யாகப்பர் ஆலயம் குண்டு தாக்குதலால் தவிடு பொடியானது.. அதுமட்டுமல்லாது பல வீடுகளும் சிதைந்தன, பல உயிர்களும் மாண்டன.

புனித யாகப்பர் ஆலயத்தின்
தற்போதைய தோற்றம்

இதற்கிடையில் கரையோர பிரதேச மக்களை இடம்பெயர்ந்து உள்ளுக்குள் பிரவேசிக்குமாறு இலங்கை ராணுவம் அறிவித்தது. கையில் சிக்கியவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஆணை கோட்டை, பண்டத்தரிப்பு பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்தோம். வீதியால் நடக்கும் போதே கெலிகாப்டர்களும், சுப்பர் சோனிகளும் பீதியை ஏற்படுத்தின. ஆனாலும் வீதி ஒவவொன்றிலும் பல பதுங்கு குளிகள் பொதுமக்களால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வெட்டப்பட்டிருந்தது. ஆகாய விமானங்கள் தாக்கும் வேளையில் எல்லோரும் அடிபட்டு இடிபட்டாவது பதுங்கு குளிகளுள் புகுந்து ஒளிந்து கொள்ளுவோம் அது போனதும் எம் இடப் பெயர்வை ஆரம்பிப்போம்.

13ம் திகதி இரவே ஆணைக் கோட்டையை அடைந்து அகதி முகாம்களை அமைத்து தங்கினோம்.14ம் திகதி விடிந்தது. அது பயத்தோடும் பீதியோடும் கடந்தது.

மறு நாள் 15 என் பிறந்த தினம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பலகாரங்களை என் அக்காமார் பத்திரமாக கொண்டு வந்தனர்.அங்கே அகதி முகாமில் தங்கியிருந்த அனைவருக்கும் அவை பகிர பட்டுக் கொண்டிருக்கையில் தீடீர் என்று எங்கள் கூடாரத்துக்கு அருகில் பாரிய வெடி குண்டு வெடித்தது எல்லோரும் சிதறி திக்கு திசை தெரியாமல் அலறி ஓடினர்.அக்குண்டு வெடிப்பில் பல உயிர்கள் போனது.எங்கும் அழுகையும் பலம்பல் ஓலங்களுமாய் இருந்தன. அந்த வெடிப்பில் தம் உறவினரும் இறந்திருப்பாரோ என ஓலமிட்டவர்களும், தடுமாறி ஓடியதில் குடும்பத்தை தவறவிட்டவர்களில் புலம்பலும் ஒங்கி ஒலித்து நின்றது.

அந்த வேளை என்னை வைத்திருந்தது என் சின்ன அக்கா அப்போது அவளுக்கு 11 வயதுதான் இருக்கும். அவளும் நானும் குடும்பத்தை தவற விட்டு அழுதபடி அங்குள்ள அடைக்கல மாதா கோவிலில் இருந்தோம். வெகு நேரம் கழித்து ஒருமரத்தின் கீழ் அழுதபடி இருந்த என் அம்மாவையும் மற்றவர்களையும் கண்டு பிடித்தோம்...அந்த நாள் என் குடும்பத்தினரால் இன்று வரை மறக்கப்படாத நாள்........

(என் முதல் வயது அனுபவங்கள் எனக்கு ஞாபகம் இல்லாத படியால் இவற்றையெல்லாம் என் அம்மாவின் துணை கொண்டு எழுதினேன்.)

அனுபவங்கள் தொடரும்.......எஸ்தர்

16 கருத்துகள்:

 1.  வணக்கம் சகோதரி!
  ஒவ்வொருத்தருக்கும் பிறந்த நாள் விழா சிறப்பாக செய்யணும் என்ற ஆசையிருக்கும் ஆனால் யுத்தத்தில் கொண்டாடும் அவலம் நம் தேசத்தவருக்கு அதிகம் கிடைத்தது கொடுமைதான்.
  அதையும் தாண்டி கார்த்திகை என்றால் பலர் மாவீரருக்கு நினைவு செலுத்தும் நினைப்பில் இருக்க இடம் பெயரும் துயரம் வருவதும் இயல்பான விடயமாகிப்போனது அதுவும் உங்களின் சிறப்பு நாளில் இடம் பெயர்வு  மறக்க முடியாத விடயமாகத்தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 2. புனித யாகப்பர் ஆலயத்தை பார்த்து பல வருடங்கள் இன்று மீண்டும் உங்கள் பதிவு மூலம் பார்த்து பழைய நினைவுகளை அசைபோட வரம் கிட்டியது.

  பதிலளிநீக்கு
 3. மரித்துப் பிழைத்தவள் பைபிள் வாசகம்! வார்த்தைகள் கேட்கும் போதே மீண்டும் சிலரின் ஞாபகம்!ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 4. மறைக்கப்படாத நாள் குறித்து மனம் கனத்தது சகோ . தொடருங்கள் ..

  பதிலளிநீக்கு
 5. நன்றி நேசா அண்ணா உங்களுக்கு யாகப்பர் ஆலயத்தை தெரியுமா?? ஓஓ உங்களுக்கு யாழ்ப்பாணத்தில் தெரியாத இடமே இல்ல போல

  பதிலளிநீக்கு
 6. நன்றி சசி அக்கா தங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு
 7. நாங்கலாம் சின்ன வயசு நினைவுகளை பகிரும்போது சந்தோசம் மட்டுமே தெரியும். ஆனால், உங்கள் பதிவில் சோகம் தெரியுது. ஈழத்து எதிர்கால சந்ததினராவது குழந்தை பருவத்தை அனுபவிக்கனும்ன்னு ஆண்டவனை வேண்டிக்குறேன்.

  பதிலளிநீக்கு
 8. மரித்துப் பிழைத்தவள்...

  அனுபவ பகிர்வு எங்களையும் அங்கேயே அந்த தருணத்திற்கு அழைத்து செல்கிறது...

  மரித்துப் பிழைத்தவள்...தொடரட்டும் எஸ்தர்...

  அம்மாவுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 9. எங்கள் வலிகள் மறக்காது மறையாது.கொஞ்சம் மாற்ற முயற்சி செய்வோம் தோழி !

  பதிலளிநீக்கு
 10. நன்றி ராஜி அக்கா. ஈழத்து வருங்கால் சந்ததியினரின் நிலையும் கேள்ளி குறிதான்..

  பதிலளிநீக்கு
 11. நன்றி ரெவரி அண்ணா தங்கள் கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் ஹேமா அக்கா நம் நினைவுகள் பசுமரத்து ஆணி போல நமக்கு பதிந்து விட்டது. மறக்க முயர்ச்சிப்போம்.

  பதிலளிநீக்கு
 13. நெஞ்சம் கனக்கிறது எத்தனையோ வலிகளை சுமந்து விழிகளை உயர்த்தி விடியல் கிடைக்காதா என நெஞ்சம் பதறுகிறது ஓர்நாள் விடியும் ....

  பதிலளிநீக்கு
 14. நன்றி மாலதி அக்கா. நிச்சயம் ஓர்நாள் விடியும்..........

  பதிலளிநீக்கு
 15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_4.html) சென்று பார்க்கவும். நன்றி !

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சொந்தமே!வலி சுமந்த சுமக்கின்ற தேசத்தின் பிள்ளையின் ஈரமான நினைவுகள்.வாழ்த்துக்கள்...:((

  பதிலளிநீக்கு