ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

மரித்துப் பிளைத்தவள் 02

முகமாலை நோக்கிய நடை பயணம்......

சென்ற பதிவில் என் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இடம் பெற்ற அசம்பாவிதங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்போது யாழ் மக்களின் யுத்த கட்டத்தின் முக்கிய இடப் பெயர்வாக கூறப்படும் வன்னி இடப் பெயர்வின் போது நடந்த  அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1995ம் ஆண்டு யாழ்பாண் மக்கள் எல்லாரும் வன்னிக்கு இடம் பெயருமாறு கூறப்பட்டு எல்லாரும் வண்டிகளிலும்,சைக்கிள்களிலும் என்னும் நடந்துமாக பயணத்தை ஆரம்பித்தோம். குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முகமாலையை தாண்ட வேண்டிய சூழ்நிலை. ஏனென்றால் அதன் ஏ9யின் பாதை அடைபட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லாரும் கிடைத்தவற்றை கையில் எடுத்துக் கொண்டும், சிலர் தம் தங்க நகைகளை பொலதீன் பையில் இட்டு மண்ணில் புதைத்துவிட்டும் தம் பயணத்தை ஆரம்பித்தனர்.

என் குடும்பமும் நடை பயனத்தை ஆரம்பித்தது. என் அப்பா, மாமாமார் துவிச்சக்கர வண்டிகளில் பொருட்களை சுமந்த வண்ணமு்ம். என் அக்கா என்னை கையில் துாக்கிய வண்ணமும் பயணம் தொடர்ந்தது. ஏனென்றால் அப்போதுதான் என் அம்மா என் தம்பியை பெற்று சிறிது நாட்கள் ஆகியிருந்தது. நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் போதே. பீரங்கிகளின் முழகங்களும். ஆகாய விமானதாக்குதல்களும் இடம்பெற்ற வண்ணமே இருந்தது.போகும் இடங்களில் பாரிய பதுங்கு குளிகள் அமைக்கப்பட்டிருந்ததால் குண்டுகள் தாக்கும் போது குளிகளுள் பதுங்க ஏதுவாய் இருந்தது. எனினும் பல உயிர்கள் மாண்டதை மறுக்க முடியாது.

இதில் என்ன கொடுமை என்றால் நடக்க முடியாத முதியவர்களை போகிற போகிற இடங்களில் குடம்பத்தினர் விரும்பியும் விரும்பாமலும் விட்டுச் சென்றனர். இவர்களை வாகனங்களில் ஏற்றி முதியோர் இல்லங்களில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை கத்தோலிக்க குருக்கள் முன்னி்ன்று நடத்தினர்.

நாவற் குளி எனும் இடத்தை கடக்க வேண்டுமானால் பாலம் வழியாகவே அவ்வூரை அடைய முடியும் செல்தாக்குதலில் அப்பாலம் முழுதும் சேதப்பட்டிருந்தது. மார்புக்கு மேல் தண்ணீர் இருக்கக் கூடிய அந்த பாலத்தின் கீழ் உள்ள நீர் ஓட்டத்தை மக்கள் கடந்தனர் சிலர் அடித்தும் செல்லப்பட்டனர். இதில் கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் என பலரும் பெரும் அவதிப்பட்டு ஆந்நீரோட்டத்தை கடந்தனர். தமக்கென்ன ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன என்று சுயநலம் கொண்டு ஓடியவர்களும் உண்டு. நீரோட்டத்தை கடக்க நீந்தி மக்களை கரை சேர்த்த நல்லவர்களும் உண்டு.

போகும் வழிகளில் ஏராளமான குண்துதாக்குதல்கள் உயிரை கையில் பிடித்த வண்ணம் ஒரு வழியாக முகமாலை வந்தடைந்தோம்

எழுத்து- எஸ்தர்.


தொடரும்.....

15 கருத்துகள்:

 1. அடடே..தொடர் பதிவா..அதுவும் அனுபவத் தொடர்..தொடர் நன்றாக அமைய வாழ்த்துகள்.. தொடர்ந்து வாசிக்கிறேன்..சற்று மனதை ரணப் படுத்தத்தான் செய்யும்..தாங்கிக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. இடம்பெயர்வதும் அவலங்களைச் சுமக்கும் நம் வாழ்வின் கடந்தகாலத்தை கணனியில் பதிக்கும் உங்களோடு நானும் கடந்தகாலத்தை அசைபோடுகின்றேன்.வலிகள் மட்டும் மிச்சியவனாக. தொடருங்கள் இந்த நகைவிடத்தையும் என் தொடரில் சொல்லுவேன் ராலுகுலின் அனுபவங்கள் விசித்திரம் எஸ்தர்-சபி .நான் பார்த்த இடம்பெயர்வு புலப்பெயர்வு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை இடங்களோ??? அதை எழுத எனக்கும் ஆசை வருகின்றது நீர் நிரம்பிய நாவற்குழிப்பாலத்தை நினைக்கும் போதெல்லாம்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி மதுமதி அண்ணா நீண்ட நாளின் பின் கண்டது சந்தோஷம். ஆம் இவை என் வாழ்வின் அனுபவங்கள்

  பதிலளிநீக்கு
 4. நன்றி நேசா அண்ணா உங்களாலும் சரி யாராலும் சரி அந்த இடப் பெயர்வு அனுபவங்களை மறக்க முடியாது. நிச்சயம் உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. இதில் என்ன கொடுமை என்றால் நடக்க முடியாத முதியவர்களை போகிற போகிற இடங்களில் குடம்பத்தினர் விரும்பியும் விரும்பாமலும் விட்டுச் சென்றனர். இவர்களை வாகனங்களில் ஏற்றி முதியோர் இல்லங்களில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை கத்தோலிக்க குருக்கள் முன்னி்ன்று நடத்தினர். //நெஞ்சம் கனத்துப் போனது சகோ தொடருங்கள் .

  பதிலளிநீக்கு
 6. நன்றி சசி அக்கா இதுதான் உலகம் பார்தீர்களா???

  பதிலளிநீக்கு
 7. எத்தனையெத்தனை கஷ்டங்களை நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் அனுபவித்திருககின்றனர் என்பதை படிக்கும் போதெல்லாம் கண்கள் நனைந்து விடுகின்றன எஸ்தர். ஆனாலு்ம் இது சொல்லப்பட வேண்டிய விஷயம் என்பதால் தொடர்ந்து படிககிறேன். தொடரும்மா...

  பதிலளிநீக்கு
 8. நன்றி நிரு தொடவேன் தொடர்ந்து படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. வலி..ரணம்..உணர்வு...சோகம்...நம்பிக்கை..சுகம்..எல்லாம் இது போல் திரும்பிப்பார்க்கையில் ஒட்டி வருவதை உணர முடியும்...தொடருங்கள் எஸ்தர்...தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. நன்றி ரெவரி அண்ணா. தங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு
 11. உயிர் பிரியும்போதுகூட இந்த வலிதான் பெரிதாய்த் தெரியும்.அதுவும் மண்ணை விட்டுப் பிரிந்திருக்கும் நம் ஆன்மா அடங்கவே அடங்காது எஸ்தர் !

  பதிலளிநீக்கு
 12. தொடருங்கள்,தொடர்கிறேன்.ஈழ மண்ணில் எம் இனம் படும் துயர் மனதை வேதனைப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 13. நிச்சயம் கேமா அக்கா எம் தாகம் ஒருநாளும் ஓயாது.....

  பதிலளிநீக்கு
 14. நன்றி விஜயன் அண்ணா தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன் உங்களை வருவேற்கிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 15. நன்றி விஜயன் அண்ணா தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன் உங்களை வருவேற்கிறேன்.தங்கள் கருத்துக்கு நன்றி...

  பதிலளிநீக்கு