சனி, 14 ஏப்ரல், 2012

இன்று திருநங்கைகள் தினம் (சித்திரை 15) அவசியமா?


இன்று திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் திருநங்கையர் தினம் அவசியமா? என கேள்வி எனக்கு எழுகின்றது.

திருநங்கைகளை பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கொண்டுள்ளனர். நான் என் வலை பதிவில் அதிகம் பேசும் விடயம் திருநங்கைகள்  காரணம் நானும் ஓர் திருநங்கை(பெண்). இன்று தமிழ் நாட்டில் திருநங்கைகள் தினம். அனுஷ்டிக்கப்படுகின்றது. இது போற்றுதற்குரிய விடயம்.இந்திய சமூகத்தில் பிச்சை கேட்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாக மாத்திரம் அறியப்பட்டவர்கள் திருநங்கைகள். அதையும் தாண்டி இன்று அவர்கள் முன்னேறி வருகின்றனர் குடும்பம் அவர்களை ஆதரிப்பதை பொதறுத்தே சமூகம் அவர்களின் நிலையை தீர்மானிக்கும்.

இன்று குடும்பத்தால் பெண்ணாக ஏற்று கொள்ளப்பட்ட பல திருநங்கைகள் மதிப்புமிக்க இடத்தில் இருக்கின்றனர். சாதிக்கின்றனர் ஒதுக்கப்பட்டவர்களில் ஓங்கி ஒலிக்கும் சங்கொலியாய் திளழ்கின்றனர். இவர்கள் எல்லாம் திருநங்கை என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து பெண் என்ற வட்டத்துக்கள் சேர்ந்தவர்கள். பல திருநங்கைகள் படிப்பறிவின்றி தவறான வழியில் நடக்கின்றனர் இதற்கு காரணம் இவர்களின் குடும்பமே.

பலர் திருநங்கைகளை ஆணுமில்லை பெண்ணுமில்லை என்றெல்லாம் வர்ணிப்பார்கள். இக்கருத்தை நான் முற்று முழுதாக எதிர்கிறேன்.ஆணில்லை இதை நான் ஏற்கொள்கிறேன் நாங்கள் ஆண் இல்லாத படியால்தான் பெண்ணாக வாழ்கிறோம். அதென்ன பெண்ணுமில்லை. நானும் ஓர் பெண்தான் திருநங்கைகளும் பெண்கள்தான். எங்களை மூன்றாம் பாலினம் என்று கூறுவதை விட அவர்களும் பெண்கள்தான் என்று கூறுவது விரும்பதக்கது.

சில திருநங்கைகள் திருநங்கை திருநங்கை என்று அந்த வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றனர். அதற்கடுத்தாக பெண் என்ற வட்டத்துக்குள் வர முயர்ச்சிப்பது கிடையாது.

துாற்றும் உலகம் துாற்றட்டும், போற்றும் உலகம் போற்றட்டும். அதை பற்றி என்ன கவலையும் கொள்ளாது நீதியின் பாதையில் நடப்போமெனில் வெற்றி நமக்கே............

இப்படிப்பட்ட ஓர் நிலையில் திருநங்கைகள் தினம் அவசியமா? என எனக்கு கேள்வி எழுகிறது. சமூகத்தில் முழுமையான அங்கீகாரமில்லாமல் , மழு சுதந்திரம் இல்லாமல் இது கொண்டாடப்படுவது எனக்கு விருபமில்லாத விடயமாக தெரிகிறது. இந்த திருநங்கையர் தினத்தை முன்னெடுப்போர் திருநங்கைகளுக்காக, அவர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசாங்கத்தின் முன் கூக்குரல் எழுப்பியிருந்தால் அது சந்தோஷம். சிந்தித்தால் வழியுண்டு.

இன்று திருநங்கைகள் தினம் என்பதால் சில வெற்றி திருநங்கைகளை பற்றி பார்ப்பது என் பதிவக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்.

கல்கி சுப்ரமணியம்

முழுக்க முழுக்க திருநங்கைகளுக்கென சகோதரி அமைப்பை நிறுவியவர். அதுமட்டுமன்றி திரைப்பட கதா நாயகியுமாவார். நர்த்தகி திரைப்படத்தின் காதாநாயகி இவர். இத்திரைப்படம் ஜேர்மன் திரைப் பட விழாவில் தேர்வாகியிருப்பது குறிப்பிடதக்கது. அது மட்டுமன்றி இப்போது ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

ரோஸ் வெங்கடேஷன்
ஊடகத்தில் பிரபலமாக அறியப்பட்டவர் இவர். ரோஸ் என்பதை விட இப்படிக்கு ரோஸ் என்றாலே எல்லோர்க்கும் தெரியும். ரோஸி ரோஸ் என்ற பாப் ஆல்பத்தை இவர் மிக விரைவில் வெளியிட உள்ளார்.

ரேவதி


தெனாவட்டு திரைப்படத்தில் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதுமட்டுமல்ல உணர்வும் உருவகமும் என்ற திருநங்கைகள் பற்றிய நுாலை எழுதியுள்ளார். இவர் மிக சிறந்த எழுத்தாளரும் கூட.

ப்ரியா பாபு

கண்ணாடி என்ற அமைப்பை நிறுவி. திருநங்கைகளுக்காக போராடும் ஒரு சமூக போராளி.


ஆஷா பாரதி

திருநங்கைகளுக்கென தினியார் நிறுவனங்களை நிறுவி அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தொண்டாற்றி வருகிறார்.

நர்த்தகி நட்ராஜ்

பிரபல பரத நாட்டிய கலைஞர். தமிழ் நாட்டிக் கலை மாமணி உட்பட பல விருதுகளை வாரி குவித்தவர். இந்தியாவில் தமிழ் நாட்டில் பெண் என்ற அங்கீகாரத்தோடு கடவு சீட்டு பெற்ற முதலானவர் இவர். அமெரிக்க உட்பட உலகின் பிரபலமான இடங்களில் நாட்டியம் ஆடி இந்தியாவிற்கு பெருமை
சேர்த்தவர்.

ப்ரியா மிர்ஷா

காஞ்சனா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அதன் பின ஏற்பட்ட விபத்தால் தேடிவந்த படங்களை தவிர்த்தார் இவரும் ஓர் மொடல் அழகி.

34 கருத்துகள்:

 1. முதல் தடவையா உங்க தளத்துக்கு வந்திருக்கேன். (சாக்லெட் தருவீங்களா?) திருநங்கைகள் தினம்னு ஒண்ணு கொண்டாடப் படறது எனக்கு இன்னிக்குத்தான் தெரியும். ‘மூ்ன்றாம் பாலினம்’னு ஒதுக்கப்படாம, இயல்பா அவங்க நடத்தப்படணும்கறதுல எனக்கும் உடன்பாடே. இந்தப் பதிவுல பாதி எழுத்துக்கள் படிக்க முடியாம மறைஞ்சு டிஸ்டர்ப் பண்ணுது. கவனிங்க. லிவிங் ஸ்மைல் வித்யா, ரோஸ் தவிர மத்தவங்களைப் பத்தி இப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். Thanks.

  பதிலளிநீக்கு
 2. ‘திருநங்கைகள் தினம்’னு ஒண்ணு கொண்டாடுறாங்களா? புதுத் தகவல் எனக்கு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சமூகத்துலருந்து தனியாப் பிரிச்சு வெக்காம அவங்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி,
  தலைப்பிலே சிறு மாற்றம்...

  திருநங்கைகள் தினம் ஏப்ரல்-15

  தங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே...
  சாதித்தவர்களின் பட்டியலில் நீங்களும்
  இடம்பெற்று ..
  சாதனைகளின் சிகரங்களை
  தொட்டிட என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 4. நனறி நிரஞ்சனா அக்கா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். ஆம் சில எழுத்துக்கள் மறைந்துள்ளன. நான் ஒவ்வொரு படங்களுக்கும் கீழ் அவர்களை பற்றி விளங்கினேன். அது தெரியுதில்ல என்ன காரணம் என தெரியவில்லை அக்கா...

  பதிலளிநீக்கு
 5. நன்றி கணேஷ் அண்ணா, நீங்கள் புரிந்து கொள்ள என் எழுத்துக்கள் மூலம் உங்களுக்கு உதவுவேன்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி மகேந்திரன் அண்ணா. நீங்கள் கூறிய படி தலைப்பை மாற்றுகிறேன் ஆனாலும் இது சர்வதேச திருநங்கையர் தினம் கிடையாதே...

  பதிலளிநீக்கு
 7. இப்போது தான் கேள்விப்படுகிறேன்.அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள சகோதரி எஸ்தர் உங்களுடைய பதிவுகள் நன்றாக இருந்தன திருநங்கைகளை பற்றிய இந்த சமுதாயம் பற்றி சமுதாயம் கொண்டு இருக்கும் தப்பான அப்பிபிராயங்களை மாற்றும் சக்தி உங்களுடைய பதிவுகளுக்கு உண்டு என நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
 9. தோழிக்கு எனது திருநங்கை தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படி ஒரு சிறப்பு நாள் இருப்பதை இன்றுதான் அறிந்தேன். உங்கள் எண்ணப்படி வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நல்லபடி ஈடேற மனதாற வாழ்த்துகிறேன்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. சதிஸ் அவர்களே உங்களை வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்கு என் நன்றி

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரர் முரளி அவர்களே உங்களை வருவேற்பதில் பெரு மகிழ்ச்சி தங்கள் கருத்துக்கு என் நன்றிகள். முழுமையான அங்கீகாரமற்ற திருநங்கையர் தினத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை..

  பதிலளிநீக்கு
 12. நன்றி சகோதரர் மாசிலா அவர்களே உங்களையும் வரவேற்கிறேன் தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. //துாற்றும் உலகம் துாற்றட்டும், போற்றும் உலகம் போற்றட்டும்.// மற்றவர்கள் தூற்றக்கூடாது என்று எதிர்பார்ப்பது நியாயம்தான். அதைப்போல இவர்களும் பொது இடங்களில் மற்றவர்கள் தூற்றாதபடி நடந்துகொள்வதும் அவசியம்.

  பதிலளிநீக்கு
 14. நன்றி சகோதரர் றொபின் அவர்களே. இவர்களும் எனும் போது எல்லாரையும் குறிப்பதாய் எனக்கு தோன்றுகிறது சேற்றிலும் தாமரைப் பூக்கள் உண்டு என்பதை மறவாதீர்.

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. முழுவதுமாக வாசித்தேன் தங்கையே ..வெற்றி பெற்ற நங்கைகளையும் படத்தோடு அடையாளம் காட்டியது சிறப்பு."முழுமையான அங்கீகாரமற்ற திருநங்கையர் தினத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்றாய். சரிதான்..விரைவில் அங்கீகரிக்கப் படும் என்பதில் ஐயம் வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 17. ஆமாம்.உன்னை முதலில் பின் தொடர்ந்தவன் நான் தானே தங்கையே..பின்பற்றுவோர் பட்டியலில் எனது படம் இல்லை.. என்னவாயிற்று. .சரி..இதோ மீண்டும் இணைந்து கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 18. அருமையான பதிவு! யோசிக்க வேண்டிய விஷயம்

  பதிலளிநீக்கு
 19. அருமை சகோ
  பதிவுக்கு வாழ்த்துகள்!
  நன்றி

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் எஸ்தர்-சபி!
  இன்றுதான் நானும் தெரிந்து கொண்டேன் இப்ப்டி ஒரு நாள் உண்டு என்று!அவர்களை நாம் ஒதுக்காமல் சமுகத்தில் அரவனைத்துச் செல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
 21. நன்றி மதுமதி அண்ணா தங்கள் கருத்துக்கு மிக்க றன்றி உங்களை வலைப் பதிவில் றொம்ப நாள் காணவில்லையே.. (உங்கள் வலைப் பதிவில்) இந்த தளத்தில் இணைக என்ற மாறிற்று இப்போதுதான் இந்த ஓடையை உருவாக்கினேன். நீங்கள் இல்லாமல் இந்த பேரொளி இல்லை..

  பதிலளிநீக்கு
 22. நன்றி சசி அக்கா தங்கள் வாழ்த்துக்கு எனக்கு இவ்விழாவில் உடன்பாடு இல்லை

  பதிலளிநீக்கு
 23. நன்றி நிலவன்பன் சகோதரரே தங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு
 24. நன்றி சார்காவன் அவர்களே உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..

  பதிலளிநீக்கு
 25. நன்றி நேசா அண்ணா தங்கள் கருத்துக்கு.. உங்கள் கருத்து நியாயமானது.

  பதிலளிநீக்கு
 26. இன்று தான் தெரிந்து கொண்டேன் இப்ப்டி ஒரு நாள் உண்டு என்று...

  பதிலளிநீக்கு
 27. யோசிக்க வேண்டிய பதிவு....

  பதிலளிநீக்கு
 28. நன்றி ரெவரி அண்ணா தங்கள் கருத்துக்கு...

  பதிலளிநீக்கு
 29. தங்கள் கருத்துக்கள் ஏற்புடையதே...நன்றி

  பதிலளிநீக்கு
 30. நன்றி மாலதி அக்கா தங்கள் கருத்துக்கு.

  பதிலளிநீக்கு
 31. Dear Sabi,

  Please correct the below word from your post
  "பொதறுத்தே"

  With regards
  Jayapraksh

  பதிலளிநீக்கு
 32. இன்னும் இன்னும் திருநங்கைகள் குறித்த மேலான படைப்புகளை வெளியிட்டு அவர்களும் சமூகத்தில் பெண்களாக அங்கீகரிக்க பட வேண்டும் தங்கையே...

  பதிலளிநீக்கு