ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

காதலனுக்கு துாது

உன் மௌனமும்
உன் ஊடலும் - எனை
வாட்டுகின்றது. - உன்
பார்வை என் மேல் இல்லை
அதனால் என் உள்ளம்
கலங்குகின்றது
புயலும் இல்லாமல் - கடுங்
காற்றும் இல்லாமல் - என்
நெஞ்ஞம் சாய்ந்து விழுகின்றது.

என் கடற் கரை செவ்வாய் நாராய்
என் தலைவன் இல்லம் சென்று
அவன் கோபத்திற்கு என்ன
காரணம் என அறிந்து வா...
ஒரு பானை நெத்தலி பரிசாக தருகிறேன்

ஏய் மைனாவே நான் இங்கு
தனிமையில் புலம்புகிறேன் - நீ
உன் யோடியுடன் சுற்றுகிறாயோ
உன் யோடியுடன் என் மன்னவன்
இல்லம் சென்று எனக்காய் பரிந்து பேசு...

தெருவில் சோம்பேறியாய் உறங்கும் நாயே
உனக்கோர் வேலை தருகிறேன்
என் மணவாளனிடம் சென்று உனக்காய்
இங்கு இவள் புலம்புகிறாள் என்று கூறு
உனக்கு மாம்சமதை கொடுக்கிறேன்

என் வீட்டு கிளியம்மா உன் தலைவனிடம்
சென்று தலைவியவள் புலம்புகிறாள்
உங்களுக்காக பாவம் அவள் என்று கூறு
உனக்கு வழமயை விட அதிக
கௌவைப் பழம் தருகிறேன்.

நிலவே என் இரவின் கொடுமையை
பார்க்கும் தோழி நீ ஒருத்திதான்
என் அன்பனிடம் சென்று
துாக்கமில்லை வெகு நாள்
இவளுக்கென்று கூறு

நந்தவன பூங்காற்றே பூக்களோடு
காதல் கொண்டது போதும் என்
புலம்பல் கேட்டும் இரங்கவில்லையா
எனக்காய் அவன் இல்லம் வருடி
பேசுவீரா?????????????

யாராகிலும் எனக்காய் என்
மன்னவனிடம் பேசுவீர்களா
அப்படியானால்
நான் உங்களுக்கு அடிமை......

21 கருத்துகள்:

 1. காதலின் ஏக்கமும் தனிமையின் புலம்பலும் காதல் தூதுதனுப்பும் முறையும் கண்டு ரசித்தேன். 

  பதிலளிநீக்கு
 2. ஜோடி,மாமிசம் மெருகூட்டப்பட்டிருக்கலாம். நாராய் ,நெத்தலி ம்ம்ம் மீண்டும் எங்கோ சென்று வந்த உணர்வு கவிதையில்!

  பதிலளிநீக்கு
 3. தலைவனுக்காய் தலைவி படும் துயரம் கவிதையில் பொங்கி வழிகிறது, நான் தூது போகிறேன் தங்கச்சி... தலைவனின் அட்ரஸ் ப்ளீஸ்...!

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி தனிமரம் ஆசிரியரே தங்கள் பெயர் என்னவென்று அறியலாமா??

  பதிலளிநீக்கு
 5. கணேஷ் அண்ணா உங்களுக்கேன் வீண் சிரமம் நீங்க உங்க பாட்டுக்கு உங்க எழுத்து வேலகளை கவனியுங்கள்

  பதிலளிநீக்கு
 6. அருமையான வரிகள் தங்கையே . தூது செல்ல புறா வேண்டுமா ?

  பதிலளிநீக்கு
 7. ஏற்கனவே அனுப்பி விட்டேன் சசி அக்கா

  பதிலளிநீக்கு
 8. யாராகிலும் எனக்காய் என்
  மன்னவனிடம் பேசுவீர்களா
  அப்படியானால்
  நான் உங்களுக்கு அடிமை......
  >>>
  அடிமையாகலாம் இருக்க வேணாம். தங்கச்சியின் ஏக்கம் தீர்ந்தால் போதும். உம் தலைவனின் முகவி சொல்லும். நான் பேசுகிறேன்

  பதிலளிநீக்கு
 9. நன்றி அக்கா தங்கைமேல் கொண்ட அக்கறைக்கு. உங்கள் பாசத்தின் முன் காதல் ஒன்றும் பெரிதல்ல

  பதிலளிநீக்கு
 10. ஊடலின் நிமித்தம் பிரிந்திருக்கும்
  தலைவியின் உணர்வுகளை,,
  தூதுகள் மூலம் தெரிவிப்பது

  அழகு அழகு.

  பதிலளிநீக்கு
 11. கண்ணில் கண்ட அத்தனை உயிரினத்தையும் தூதணுப்பி விட்டீரே... பதில் வந்ததா??

  பதிலளிநீக்கு
 12. ஊடல் இருந்தால் தானம்மா கூடல் இனிக்கும்.

  பதிலளிநீக்கு
 13. நன்றி மகேந்திரன் சகோதரரே தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். மற்றும் செல்லம் சகோதர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 14. உணவு சமைப்பது போலவே இந்த எழுத்துக்களையும் சமைக்க கற்றது உங்கள் கவிதையில் வரிகளில் வெளிப்படுகிறது யார் அந்த தலைவன் என்று சொன்னால் தூது அனுப்ப என்னிடம் ஒரு வழியுண்டு

  பதிலளிநீக்கு
 15. பெண்கள் சமையல் ருசிப்பது போலவே அவர்களின் கவிதைகளிலும் தெரியும் இலக்கிய பசிக்கு அவர்களே சமைத்துக்கொள்ளும் வித்தை தெரிந்து கொண்டு என் போன்றவர்களூக்கும் பசியாற்றுகிறார்கள்
  வாழ்த்துக்கள் தோழி
  அருமையான படைப்பு

  பதிலளிநீக்கு
 16. யார் என்று சொன்னால்தான் வழி சொல்வீகளா?? பராசக்தி அவர்களே.. நல்ல எண்ணம் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 17. என் கடற் கரை செவ்வாய் நாராய்
  என் தலைவன் இல்லம் சென்று
  அவன் கோபத்திற்கு என்ன
  காரணம் என அறிந்து வா...
  ஒரு பானை நெத்தலி பரிசாக தருகிறேன்//தலைவனுக்காய் தலைவி படும் துயரம் கவிதையில் பொங்கி வழிகிறது...

  பதிலளிநீக்கு
 18. நன்றி மாலதி அக்கா தங்கள் கருத்துரை கண்டு மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. நன்றி சாந்த குமார் அண்ணா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  பதிலளிநீக்கு