திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்?

இந்த பதிவை நான் ஏன் பதிகிறேன் என்றால் நேற்று ஒருவர் என் முகப்புத்தகத்தில் உரையாடி கொண்டிருக்கையில் என்னுடைய பெயர் தமிழ் பெயர் இல்லையாம். பிறகு ஏன் தமிழுக்காக உழைக்கிறிங்க உங்க பெயரை மாத்தலாமே சகோதரி என்றார்.நான் அவருக்கு பதில் எதுவும் கூறவில்லை. முகப்புத்தகத்தில் இருந்து வெளியேறி விட்டேன். பிறகு சிந்தித்தேன் அப்போதுதான் பல விடைகள் எனக்கு கிடைத்தன.

அரசி.. எஸ்தர்
கிறிஸ்தவர்களுக்கு பெரும்பாலும் தமிழ் பெயர்கள் கிடையாது. எல்லாம் யூத, எபிரேய, போர்த்துக்கேய, மற்றும் ஆங்கில மொழி பெயர்கள் வைக்கப்படுகின்றன. திருவவிலியத்திலிருந்தும், கிறிஸ்தவத்திற்காக உழைத்த பெரியார்களாகிய புனிதர்களின் ஞாபகமாகவும் அப்பெயர்கள் வைக்கப்படுகின்றன. எனினும் சில பெயர்கள் தமிழுக்காக திரிபடைந்த பெயர்களாக உள்ளன.உதாரணமாக தமிழில் அந்தோணி எனும் பெயர் ஆங்கிலத்தில் அன்ரனி என்பதாகும் ஆனால் இப்பெயரின் மூல மொழி போர்த்துக்கேயமாகும். ஏனெனில் அந்தோணியார் ஒரு போர்த்துக்கேயர். அவரை போர்த்துக்கேயத்தில் அன்ரோனியோ என்று அழைப்பர். அன்ரோனியோவிலிருந்து அன்ரனி பிறந்தது, அன்ரனியிலிருந்து, அந்தோணி பிறந்தது. இதுவே கிறிஸ்தவ பெயர்களின் அடித்தளம். சரி என் விடயத்துக்கு வருகிறேன்.

யாழ்ப்பாண நுாலகம்
என் பெயர் (எஸ்தர்) ஏறக்குறைய 2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு யூத பெயர். எஸ்தர் அரசி யூத, கிறிஸ்தவ பெண்களின் காவிய நாயகி அமைதியின் சொரூபம். அதனால்தான் நானும் அப்படி இருக்க வேண்டும் என்று என் சடங்கின் பின் திருமுழுக்கின் போது இப்பெயர் எனக்கு சூடப்பட்டது.

புனித.பத்திரிசியார்
கல்லுாரியல் அமைந்துள்ள
அருட்தந்தை லோங் அவர்களின்
உருவ சிலை
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றின் அதிக தமிழ் இலக்கியங்களை ஈழத்தில் விட்டு சென்றது கிறிஸ்தவ பாரிதியார்கள். இவர்களுக்கென்ன தமிழ் பெயரா இருந்தது. தமிழை வளர்த்தார்கள்தானே. ஏன் அயர்லாந்திலிருந்து அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மதிப்புக்குரிய அருட்தந்தை லோங் அடிகளார் யாழ்ப்பாண நுாலகத்தின் இணையற்ற செல்லம் என வர்ணிக்கப்படுகிறார். அவர் என்ன தமிழனா அல்லது தமிழை தாய் மொழியாக கொண்டவரா? இல்லையே

வீரமா முனிவர்
ஏன் இந்திய தமிழ் மக்கள் வீரமா முனிவர் என்று அழைக்கப்படும் கொன்ஸ்ரன்ரைன் யோசேப் பெஸ்கி என்பவர் பற்றி இறியாதவர்களே இருக்க மாட்டார்கள் தமிழ் இலக்கியத்திற்காக சதுரகராதி, தேம்பாவணி போன்ற இலக்கிய படைப்புகளை செந்தமிழ் தன் கைபட எழுதியவர். அவர் ஒரு இத்தாலி நாட்டவர். இலத்தீனை தாய் மொழியாக கொண்டவர். ஆனாலும் இந்தியா வந்து கிறிஸ்தவத்திற்காகவும் தமிழுக்காககவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மொத்தத்தில் பார்க்கப் போனால் தமிழ் வளர்க்க தமிழ் பெயர் மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது, தமிழ் மேல் பற்றிருந்தால் போதும். நானும் என் பெயரை  மாற்ற வேண்டிய தேவையும் இல்லை....

10 கருத்துகள்:

 1. தமிழன் என்ற உணர்வுடையோர் எல்லாரும் தமிழர்கள்தான். தமிழ் பெயர் வைத்திருப்பவர்கள்தான் தமிழர்கள் என்றால் ஒரு சதவீதம்பேர் கூட தேற மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 2. நிச்யம் தமிழ் மேல் பற்றிருந்தாலே போதுமே அண்ணா,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி றொபின் அண்ணா

  பதிலளிநீக்கு
 3. உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன், தமிழ் பெயர் என்றுக் கூறிக் கொண்டு 90 விழுக்காடு வடமொழிப் பெயரை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலும் பெற்றோர் வைத்ததால் அவ்வாறு பெயர் கொண்டு இருக்கிறார்கள், அது போல் தான் கிறித்துவப் பெயர்களும். உங்களுடன் முகநூலில் உரையடியவரின் பெயரைக் குறிப்பிடுங்கள் அது தமிழ் பெயர் தானா என்று நான் சொல்கிறேன்.

  :)

  பதிலளிநீக்கு
 4. தமிழை வளரக்க தமிழ்ப் பெயர் இருத்தல் வேண்டும் என்பது மேம்போக்கான கருத்து தங்கையே. மொழியின் மேல் ஆர்வமும் காதலும் இருந்தால் யாரும் எந்த மொழியிலும் படிக்கலாம், எழுதலாம். இதைக் கருத்தில் கொண்டு நிறைய எழுதுங்கள் எஸதர்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரி,
  மானிடரில் பலரும் பலவித குணாதிசயங்களை
  கொண்டவர்கள். அவரவர்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல
  அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது ஒரு
  தனி மனிதனை அவர் உணர்வுகளை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும்..

  தமிழனாய் பிறந்தால் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பது
  பொதுவாக நிலவும் கருத்து. அவரவர்களின் மதப்பெயர்கள் கொண்டும்
  பெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஸ் ஷ் என்று முடியும் வட மொழிப்
  தங்கள் பெயருக்கான விளக்கம் அருமை.
  பெயர்களுக்குத் தான் எதிர்ப்புகள் பலமாக இருக்கிறதே தவிர
  மதம் சார்ந்த பெயர்களுக்கு அல்ல..

  திரு.ஜி.யூ.போப் அவர்களின் தமிழ் அறிவு பற்றி தமிழறிந்த
  அனைவருக்கும் தெரியும்.

  ஆகையால், சொல்பவர்களின் கருத்துக்களை ஒதுக்க வேண்டாம்..
  ஏற்றுக்கொண்டு.... உங்கள் நடையை என்றும் தளர்த்தாது..
  பின்னோக்கி செல்லாது ... தொடர்ந்து நடை போடுங்கள்..

  வாழ்த்துக்கள்..

  அன்பன்
  மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கோவி கண்ணன் அண்ணா அவர்களே என் கருத்து உடன்பாட்டிற்கும் , வருகைக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. வாங்கோ கணேஸ் அண்ணா தமிழ் மேல் பற்றிருந்தால் போதும் தமிழ் வளர்க்க.. ஆமோதித்தலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் மகேந்திரன் அண்ணா உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. தமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்?...

  இல்லை...குசும்புவாதிகளின் வாதம் தான் அது..

  அதே நேரம் உங்கள் குழந்தைக்கு அதுவும் குறிப்பாக பெண் பிள்ளை பிறந்தால் கிறிஸ்தவ பேரோடு சேர்த்து ஒரு இனிய தமிழ் பெயரையும் வைக்க வேண்டுகிறேன்
  எஸ்தர்...

  என் மகளை இனிய தமிழ் பெயர் சொல்லி அழைக்கையில் உள்ள சுகம்... வேறெதிலும் இல்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்...

  பதிலளிநீக்கு
 10. தமிழ் பெயர் என்றால் அழகுதானே வேறென்ன.ரெவரி அண்ணா

  பதிலளிநீக்கு