புதன், 11 ஏப்ரல், 2012

விதவைகள் என்றால் தபோதனர்களா?????

பொற்றாலியோடே எல்லாம் போம் என்பது பெரியவர்கள் கூற்று.இதன் அர்த்தம் என்னவென்றால் கணவன் இறந்த பின் பெண்ணுக்கு தாலியறுக்கும் நிகழ்வுக்குப் பின் அவள் வெறும் யடம் என்பதாகும்.
சங்ககாலம் முதல் பாரதி காலம் வரைக்கும் பெண்களின் நிலை படு மோசம் இருபதாம்,இருபத்தோராம் நுாற்றாண்டுகளில் அவர்கள் அறிவு தெளிந்து சிந்தை அறிந்து செயற்பட ஆரப்பிதது விட்டார்கள் (100க்கு75வீதமானோரே)இங்கு நான் குறித்து பேச இருப்பது தமிழ்ப்பெண்களை பற்றியே...

ஜரோப்பிய நாடுகளில் அன்று தொட்டு இன்று வரை சமூககட்டமைப்புகள் சட்ட திட்டங்ககள் வேறு. பெண்ணடிமை இருந்தாலும் குறித்து சொல்லக்கூடிய அளவிலேயே இருந்தது.அதாவது சமாரியர்கள்,எத்தியோப்பியர்கள்,எஸ்தோயிக்கர் போன்ற சமூகங்களிலேயே இப்படிப்பட்ட பெண் அடிமைகள் இருந்தன

சரி தலைப்புக்கு வருவோம் நம் தமிழ் பெண்கள் சங்க காலம் முதல் பலவேறு விதமாக சங்கடங்களுக்குள் சிக்கி வாழ்ந்து வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.சங்க காலத்தில் மடலேறல்,வேரிபாய்தல் என்பவை ஆண்ககள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் வகைகள்.இவை அவர்கள் தங்கள் காதலில் தோல்வியுற்ற வேளைகளில் இவ்வாறு தம் உயிரை மாய்த்து கொள்வர்.இது கட்டாயம் என்பது கிடையாது.அவரவர் விருப்பம் ஆனால் பெண்களின் நிலை அவ்வாறு கிடையாது.போரிலோ அல்லது நோயிலோ கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுதல் அல்லது வீட்டில் முடி கத்தரித்து வெள்ளை அல்லது காவி உடை தரித்து மூலையில் உட்கார வைத்து வெளியே போகவிடாமல் சுப நிகழ்வுகளில் பங்கேற்றக விடாமல் அவர்களை ஒரு பிணத்தை போல நடத்துவது என்று அவர்களுக்கான அடக்கு முறைககள் காணப்பட்டது.

சங்கமருவிய காலத்திலும் சரி சோழர் காலத்திலும் சரி அதன் பின் வந்த காலங்களிலும் இவ்வாறுதான் பெண்கள் நிலை காணப்பட்டது.பாரதி காலத்துக்குப்பின்னரே பெண்விடுதலை ஆரம்பித்தது என்று கூறலாம்.ஆனாலும் இதற்கான விதை சோழர்காலத்தில் இடப்பட்டது.ஏனெனில் காவிய நாயகிகளாக பெண்களை வைத்து புலவர்கள் காவியம் படைக்க ஆரம்பித்தது இக்கால கட்டங்களில்தான் உதாரணமாக இளங்கோ அடிகளாரால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை கூறலாம்.

ஆனாலும் பாரதி காலத்தின் பின் விடுதலைக்கான போராட்டங்ககள் வெற்றி காண ஆரம்பித்தது.இக்கால கட்டங்களில் வடக்கில் பெண்கள் வாளெடுத்து போரும் புரிந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.உதாரணமாக ஜான்சி ராணி லக்ஸ்மி பாய்யை கூறலாம்.

இன்று பெண்களின் நிலையையும் முன்னேற்றத்தையும் நாம் மெச்சவே வேண்டும்.சங்ககாலத்து பெண்களின் வாழ்வுக்கு முற்றிலும் நேர்மாறாக வாழ்கின்றனர் நம் தற்கால தமிழ் பெண்கள்.கணவன் இறந்த பின்னும் தாம் வேலை செய்து தம் பிளைப்பை பார்க்கும் பெண்களும் மறுமணம் செய்து வாழும் பெண்களும் உண்டு. இது வேறு இன்று ஆண்களுக்கு நிகராக பெண்ககள் களமிறங்கி சகலத்திலும் செயற்படுகின்றனர்.

ஆனாலும் இப்போதும் கூட சில பிராமண வகுப்புகளில் பழமை போற்றும் வாதிகளால் பெண்கள் முன்னேறாமல் அக்கால வாழ்க்கை போலே வாழ்கின்றனர்.தலைமுறைககள் எவ்வளவோ மாறி விட்டது இருந்தும் இப்படிப்பட்ட சில சமூகங்களால் பெண்கள் வெளியுலகு தெரியாமல் இருப்பது வருந்தத்தக்கது.இந்நிலையும் மாறி புது உலகு படைத்திட எழுவோம் பெண்மை போற்றுவோம்

14 கருத்துகள்:

 1. பல புதிய தகவல்களுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

  "மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்."

  இது தான் புரியல?

  பதிலளிநீக்கு
 2. இந்நிலை மாறி புது உலகு படைத்திட எழுவோம்.. பெண்மை போற்றுவோம்...//
  Amen...

  பதிலளிநீக்கு
 3. இந்நாட்களில் பிராமண சமூகத்தினரும் கூட இவ்விஷயத்தில் மாறித்தான் இருக்கிறார்கள். முன்புபோல் கண்டிப்பாக முடி இறக்குதலும், மூலையில் முடக்குதலும் இப்போது இல்லை. இம்மட்டில் எந்த மதம், இனமாக இருந்தாலும் பெண்ணின் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. சரியா எஸ்தர்?

  பதிலளிநீக்கு
 4. நன்றி கபிலன் அண்ணா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

  உங்கள் சந்தேகம்தான் எனக்கும் விடை கிடைத்தால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரெவரி அண்ணா பெண்ணியம் வாழ்க

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. நன்றி கணேஷ் அண்ணா
  பிராமண வகுப்பை குறை கூறவில்லை இன்னும் பல மாறுதல்கள் வேண்டும் என்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. ஜரோப்பிய நாடுகளில் பழங்காலத்துல பெண்ணியம் சார்ந்த சமூக கட்டமைப்புநு ஒன்னு இருந்ததான்னு தேரியல. இல்லன்னு தான் சொல்லணும்.

  அப்பறம் சோழனுக்கும் இளங்கோ அடிகளுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல.. இளங்கோவடிகள் சோழத்தை சேர்ந்தவர் இல்ல அவர் சேரத்தை சேர்ந்தவர். அவருக்கு பண்டியனுடனும் சேரனுடனும் தான் தொடர்பு இருந்தது. தவறான தகவல் குடுத்து இருக்கிங்க!!!

  தமிழனை போன்று சங்ககாலதில் பெண்ணியமும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஒரு இடத்தையும் வேறு எந்த நாகரிகமும் குடுத்து இருக்க முடியாது. பெண்களை வேறும் எனபெருக்கக்துகாகவும் வீடு வேலை செய்யவும் தான் பயன்படுத்தி வந்த காலத்தில் ஆணை விட சிறந்தவர்கள் என்று போற்றியது தமிழ் இனம். பின்னர் வந்த ஆரியமும் அதன் கலப்பும் தான் பெண்களை இத்தனை பாடு படுத்தியது, படுத்துகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதும், கணவன் இறந்ததும் பெண்களும் இரக்க வேண்டும் என்கிற விதியும் பண்டைய தமிழர்கள் கிட்ட இல்ல. திருமணம், விவாகரத்து மறுமணம் என்பது எல்லாம் தமிழன் கண்டுபிடித்தது.

  இறுதியாக இன்று பெண்களின் நிலையையும் முன்னேற்றத்தையும் நாம் மெச்சவே வேண்டும்" என்று சொல்வது பெண்களின் அடிமைத்தனத்தை தான் காட்டுகிறது.. இன்றைய நிலையம் மிகவும் வருந்தும் படியாக தான் இருக்கிறது.. பாரதி காண கண்ட பெண்ணியம் இதுவல்ல அதற்கான ஏற்பாடுதான் இன்றைய பெண் விடுதலை ..

  பதிலளிநீக்கு
 9. மிகச் சரியான கருத்துக்கள் சகோதரி.
  மனிதனில் இன பாகுபாடு எதற்கு..
  பெண்ணும் மனிதமே என்ற எண்ணம்
  தழைத்தோங்க வேண்டும்..
  இயற்கையின் செயல்களுக்கு அவர்களை
  பகடைக் காயாக்கக் கூடாது..

  பதிலளிநீக்கு
 10. நன்றி மகேந்திரன் அண்ணா தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 11. "பல புதிய தகவல்களுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !

  "மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்."

  இது தான் புரியல?"

  மன்னிக்கவும் ! வேறு தளத்திற்கு இட வேண்டிய பின்னூட்டம் இது !

  பதிலளிநீக்கு
 12. பெண் விடுதலை பெண் விடுதலை என்று பேசுகிறோம் யாரிடம் இருந்து யாருக்கு விடுதலை ! நாம் நாமாக இருந்தால் நம்மை யாரும் அடிமையாக்கி விட முடியாது . மனதில் அடிமைத் தனம் வாழும் வரை மாற்றம் என்பது கற்பனையே .

  பதிலளிநீக்கு
 13. கபிலன் அண்ணா மாறி கருத்துரையிட்டுள்ளீர்களோ? ஓஓஓஓகே

  பதிலளிநீக்கு
 14. நன்றி சசி அக்கா நாம் நாமாக இருந்தால் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.நிச்சயம்

  பதிலளிநீக்கு