வெள்ளி, 13 ஏப்ரல், 2012

காலம் தவறி பொழிந்த காதல் மழை

தேடுகிறேன் இப்போது - உன்னை
அழுகிறேன் நினைத்து
நீ எங்கே என தேடி புலம்புகிறேன்

சூரியன் போன பின்
மலர துடிக்கும்
தாமரை முகை ஆனேன்
கலையற்ற பெண்மானானேன்
எங்கே சென்றாய் எனை விட்டு

உனை எண்ணி என்
கண்கள் கடல் சமைக்கின்றன.
என் கால்கள் வலுவிழந்தன.
என் கைகள் தழர்கின்றன
நாரை கால் போல ஆனது தேகம்

நீ காதலுற்ற போது - என்னிடம்
காதல் இல்லை
இப்போது நான் காதல்
கொண்ட போது நீயில்லையே
மழை ஓய்த பிறகும் கூதலாய்
வந்திற்றே உன் மேல் காதல்.

தொடருமோ என் கண்ணீ பயணம்
நிறுத்த நீ வருவாயா?
உனை எண்ணி
கண்ணனுக்காய் காத்திருக்கும்
மீராவைப் போல்
உணக்காய் என்றும் காத்திருப்பேன்

காலம் தவறி பொழிந்த மழையால்
என்ன பயன் எனகிறது உலகு?
வினாவிற்கு விடை கூற
விரைந்து வா - என் தலைவா..

6 கருத்துகள்:

 1. உன்னை எண்ணி என் கண்கள் கடல் சமைக்கின்றன. -அருமையான வரிகள் எஸ்தர்! கவிதையில் ஒரு சோகமும், சுகமும் இரண்டு உணர்வுகளையும் தருகிறது. அருமை.

  பதிலளிநீக்கு
 2. காதலுடன் கூடி களித்திருந்த
  நிலை விடுத்து
  கண்காணா தேசம் போன
  இன்னுயிர் மன்னவனை
  தென்றலின் ஊடே
  மனக்கண்களில் தேடி வரும்
  தலைவியின் பிரிவு சொல்லும்
  அழகிய கவிதை...

  நிதம் தோறும் நிதம் தோறும்
  என்னைப் போன்ற
  கொண்ட காதலை பிரிந்து
  வருவாயின் நிமித்தம்
  சொல்லொனாத் துயரம்
  அனுபவிப்பவர்களுக்கு
  இது போன்ற கவிதை
  தேசிய கீதம் சகோதரி....

  நெடுநல்வாடை படித்தது போல இருக்கிறது
  உங்கள் கவிதை..  ===============================
  செறிந்திருக்கும் சொல் வளமாய்
  பொதிந்திருக்கும் பொருள் வளமாய்
  தங்கத் தமிழின் இன்சுவையாய்
  தங்கள் வாழ்வில் இனிமை நிறைந்திருக்கட்டும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி கணேஸ் அண்ணா. உங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்தியது.

  பதிலளிநீக்கு
 4. நன்றி மகேந்திரன் அண்ணா. தங்கள் கருத்து என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தினருக்கும் என் புது வருட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. காதல் தூதும் கவிதை நயமும் கொண்ட கவிதை ரசித்தேன் இலக்கியக் காதல் வருகின்ற வார்த்தைகள் சிலிக்க வைக்கின்றது.மீரா,நாரை,ம்ம்ம 
  நீ இருக்கும் போது வாராத பாசம் நீ தாண்டின பின் வருவது ம்ம்ம் இல்லாத வலிகள் அதிகம் தான்!

  பதிலளிநீக்கு
 6. நன்றி நேசா அண்ணா தங்கள் கருத்துக்கு......

  பதிலளிநீக்கு