திங்கள், 16 ஏப்ரல், 2012

கல்வியால் பிளந்த காதல்

தொலையப் போவது - என்
இதயம் என தெரிந்தும்
முழு மனதோடே தொலைத்தேன்
உன்னிடம்......

இயற்கை கொண்ட விருப்பம்
நம்மை காதலர்களாய்
மாற்றிப் பார்த்தது - அதே
இயற்கை கொண்ட முடிவுதான்
நம்மை காதலெதிரிகளாய்
மாற்றிப் பார்த்தது.

காதலிக்கும் போது கேட்டாய்
என்னை எங்கு வைத்துள்ளாய் என்று
சோனையறையில் என்றேன்
வலதா? இடதா? என சோதித்தாய்
இரண்டிலும் என்றேன். அறியாது
அப்போ மற்ற இரண்டிலும்
யார் என்றாய் ??
நான் கலைப் பிரிவு - நீயோ
மருத்துவ பிரிவு என நமக்குள்
இருந்த கல்வி
பிரிவை காட்டி விட்டாய்

அன்றோடே உனக்கு போய் வருகிறேன்
கூறினேன்
அன்றோடே பிளந்தது நம்
காதலும்
நாம் தேர்ந்த கல்வியால்...

14 கருத்துகள்:

 1. வித்தியாசமான காரணம் இந்த பிரிவுக்கு எஸ்தர்...நல்லாயிருக்கு கவிதை...

  பதிலளிநீக்கு
 2. கல்வியால் வருவது ஈகோ; ஈகோ பிரிக்கிறது காதலை. அந்தக் காதல் நிஜமானதாயின், அதுவே அவர்களை மீண்டும் இணைத்து விடும்தானே..! நல்ல கவிதை எஸ்தர்! இன்னும் இதுபோல பல நற்கவிதைகள் தர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி ரெவரி அண்ணா தங்கள் கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 4. நன்றி கணேஷ் அண்ணா. என் கற்பனைக்கு எட்டிய மாத்திரத்தில் நான் கவிதைகள் கொடுக்க தயார்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி சதீஸ் அண்ணா தங்கள் கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 6. "காதலிக்கும் போது கேட்டாய்
  என்னை எங்கு வைத்துள்ளாய் என்று
  சோனையறையில் என்றேன்
  வலதா? இடதா? என சோதித்தாய்
  இரண்டிலும் என்றேன்"

  நல்லாயிருக்கு எஸ்தர்..

  பதிலளிநீக்கு
 7. நன்றி அண்ணா தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. காதலுக்கு தூது தேடியது போக போக இடையில் இந்த பிரிவும் ஏனோ ? அருமை சகோ .

  பதிலளிநீக்கு
 9. நன்றி சசி அக்கா ஊடல் இருந்தால்தான் கூடல் அர்த்தம் பெறும்..

  பதிலளிநீக்கு
 10. கல்வியில் பிரிவைக் காட்டி காதல் பிரிந்து விட்டதா ? காதலுக்கு இதுவும் ஓர் எதிரியா ?? :(

  பதிலளிநீக்கு
 11. ஆம் கல்விதான் முக்கிய எதிரி தமிழாவணன் அண்ணா

  பதிலளிநீக்கு
 12. காதல்ல பிரிவு இப்படி காரணத்தால கூட வருமா எஸ்தர்..? நல்லா எழுதியிருக்கீங்க. நிரூவுக்கும் யாரையாவது நல்லவனை (ஐயோ பாவம் அவன்) லவ் பண்ணலாமான்னு தோண வெச்சுடுவீங்க போலருக்கே...

  பதிலளிநீக்கு
 13. நிரூ கலாய்காதீங்க உங்களுக்கு ஏற்கனவே ஒரு நல்லவர் இருக்குறார் போல...

  பதிலளிநீக்கு