புதன், 18 ஏப்ரல், 2012

தமிழ் சினிமாவின் கலைவாணிகள்

நம் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று பெயர் தந்தவர்கள் சிலர். சினிமா என்பது பல துறைகளின் கூட்டு முயர்ச்சியால் உருவாக்கப்படும். ஒரு பொழுது போக்கு துறை.அந்த வகையில் இதில் தடம் பதித்த பெண்கள் சிலரே. அவற்றுள் தற்போது சினிமாவின் முக்கிய துறைகளில் சாதித்து கொண்டிருக்கும் பெண்களை பற்றியே நான் பேசுகிறேன். சினிமாவின் முக்கிய துறைகளில் இசை,நடிப்பு இன்றியமையாதது. இவற்றை தம்வசப் படுத்தியவர்களுள் முக்கியமான இரு கலைவாணிகளை பற்றி பேசப்போகிறேன்.

ஆன்ரியா

இவர் இன்றைய நடிப்புலகில் நம்பப்படும் நாயகிகளில் ஒருவர். பச்சை கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆயினும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படமே நட்ச்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அதன் பின் இன்று உலக நாயகன் கமல்காசனின் ஆஸ்தான நாயகி ஆகிவிட்டார். அவரின் விஸ்பரூபம் திரைப் படத்தில் இவர்தான் நாயகி. தொடர்ந்து சிம்புவுடன் வடசென்னைலும் நடித்து வருகிறார்.

நடிப்பு உலகத்தினர் சினிமாவில் இவரை தரிசித்ததை விட இசைப் பிரியர்கள் இவரை நன்கு அறிவார்கள் இவர் பிரபல பின்னனி பாடகியும் கூட. யுவன் முதல் தே.ஸ்ரீ.பிரசாத் வரை தற்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.அவற்றில் இது வரை இல்லாத உலகிது , நோ மணி எல்லாம் வெற்றிப்பாடல் வரிளையில் உள்ளன. அது மட்டுமல்ல இவர்தான் நண்பன் திரைப்படத்தில் இலியானாவுக்கு குரல் கொடுத்தவர். பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். ஆன்ரியா என்னும் மென்மேலும் வளர அவரது கலைப்பணி சிறக்க நாமும் வாழத்துவோம்.

ஸ்ருதி காசன்

7ம் அறிவு மூலம் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வரப்பட்டவர் ஸருதி. இவர்.நடிப்பிற்கு வரும் முதலே இசையின் மூலமே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்தான. அதன் பின் இன்று உலக புகழ் பெற்ற வை திஸ் கொல வெறி காரியும் இவர்தான். இன்று தமிழ் சினிமாவின் முன்னனி நாகியாக உருவெடுப்பார் என் திரை உலகத்தினரால் நம்பப்படுகிறது..அது மட்டுமல்லாது பினனி பாடகியாகவும் உள்ளார் .

அது மட்டுமல்ல பாப் ஆல்பங்கள் வெளியிடுவதிலும் இவர் கெட்டிகாரி. ஸ்ருதியும் வளர நாம் வாழ்த்துவோமாக.

20 கருத்துகள்:

 1. இந்த இருவரையும் எஸ்தருடன் இணைந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன். (அதுசரி... நடுராத்திரில பதிவு போடறீங்களே... தூங்கறதே கிடையாதா எஸ்தர்?)

  பதிலளிநீக்கு
 2. நடிப்பு தவிர மற்ற துறைகளிலும்
  சிறந்து விளங்குவது சிலர் மட்டுமே..
  இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ள இருவரும்
  இப்போதைய காலச் சூழலில் மேம்பட்டு
  இருக்கிறார்கள்.
  பெருகட்டும் இவர்களது புகழ்..

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் சாத்தியமாகட்டும் நிரூ.எனக்கு இப்ப துாக்கம் வாறது றொம்ப குறைஞ்சு போச்சு நிரூ.(காலையில் ஆய்வுக்கு போகனும் நேரம் இல்ல)

  பதிலளிநீக்கு
 4. நன்றி மகேந்திரன் அங்கிள். உங்கள் வாழ்த்து இருவரையும் சென்றடையட்டும்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல அலசல்.உண்மையிலே இருவரும் திறமைசாலிகள்தான். இருவருக்கிடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளது.அது எப்படி .'.போட்டோ கூட ஒரே மாதிரியா உங்களுக்கு கிடைத்தது? கலக்கல்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே கூகிளில சுட்டதுதான் மணிமாறன் அண்ணா. கருத்துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துதானே..இதோ வாழ்த்திடுறேன்.

  பதிலளிநீக்கு
 8. இருவரும் திறமைசாலிகள்தான் வாழ்த்துக்கள் சகோ .

  பதிலளிநீக்கு
 9. எனக்கு ஆந்ட்ரியாவை மிகவும் பிடிக்கும். மிகவும் வசீகரமான குரலும் அழகும். நடிப்பும். பல்கலை நாயகிகளாக இருவரும் மென் மேலும் வளரட்டும்.

  பதிலளிநீக்கு
 10. இலியானாவுக்கு குரல் கொடுத்தவர் இவர்தானா

  புது தகவல்

  பதிலளிநீக்கு
 11. இலியானாவுக்கு பின்னனி கொடுத்தது ஆன்ரியா தானா

  பதிலளிநீக்கு
 12. ஆ்ன்ரியாவை யாருக்கு பிடிக்காது சிறப்பான கலைஞர்.வல்லிசிம்ஹன்

  பதிலளிநீக்கு
 13. ஆம் சதீஸ் அண்ணா இலியானாவுக்கு குரல் கொடுத்தது ஆன்ரியாதான்.

  பதிலளிநீக்கு
 14. முதல் பொண்ணை பார்த்திருக்கேன்...
  லட்சணமான முகம்...பாட்டும் கேட்டிருக்கேன்...
  நல்லா வரட்டும் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 15. அன்ட்ரியா வாய்ஸ் அட்டகாசமா இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 16. ம்ம் றொம்பவே அட்டகாசமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 17. @Esther sabi
  ஆம் சதீஸ் அண்ணா இலியானாவுக்கு குரல் கொடுத்தது ஆன்ரியாதான்.///

  என்னை அண்ணா என்று அழைக்கவேண்டாம்.

  எனக்கு 18 வயது தான்.அதனால் நீங்கள் என்னை தம்பி என்று அழைத்தாலே போதும்

  பதிலளிநீக்கு