வியாழன், 19 ஏப்ரல், 2012

யுத்த களத்தில் பூத்த காதல்

நேற்று நான் என் அத்தை வீட்டுக்கு போயிருந்தன் அப்போ வன்னி யுத்தத்தின் பின் புணர் வாழ்வு நிலையத்திலிருந்து விடுபட்டு வந்த குடும்பம் ஒன்றை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரியோர்கள் எல்லாரும் கூடியிருந்த இடத்தில நானும் போய் உட்கார்ந்தேன். சரிதான் பாட்டி என்ன பாத்து பெரியாக்கள் இருக்கிற இடத்தில உனக்கு என்ன வேல எழும்பி போ என்றார். நானும் முகம் சுழித்த படியே எழும்பினன். றொம்ப வருசத்துக்கு பிறகு பார்த்தவர்களுக்கு என்னை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். (ஏனென்றுதான் தெரியுமே).

கூகிளில் பறிச்சது
எனக்கு பக்கத்தில கிட்டத்தட்ட 24 வயது நிரம்பிய ஒரு அக்கா இருந்தாங்க அவங்களும் புணர் வாழ்வு நிலையத்திலிருந்து வந்தவங்கதான். அவங்கள பிடிச்சு வன்னி யுத்தத்தை பற்றி கொஞ்சம் கேட்டா பிளாகரில போட்டு தாக்கலாமே என்று நானே கதைய தொடக்கினன். உங்களுக்கு என்ன பெயர்? என்று பிறகு சொல்லவே தேவலங்க முதல்ல என் கதைய கேட்டு முடிச்சு அப்புறமா அவங்க தன் கதைய சொன்னாங்க முதல்ல யுத்த சம்பவங்களை கேட்டா என் கண்ணிலிருந்து யமுனா பட படவென ஓடுவா. ஆனா இவங்க கதை றொம்ப சுவாரஸ்யம் கலந்த சோகமாக இருந்தது. இத சொல்லி முடிச்சதும் அவங்க ஒரு விடயம் சொன்னாங்க தயவுசெய்து இத யாருக்கும் சொல்லிடாதேயும்.

சரி அதை உங்களுக்கு சொல்லிடுறன். இதையெல்லாம் ரகசியமா வைச்சுக்கப்படாது. யுத்த நேரத்தில் வன்னியில் (கிளிநொச்சியில) ஜெயபுர காட்டுக்குள் இவரும் இவரது தோழிகள் சிலரும் சில சிங்கள ராணுவத்தினரிடம் மாட்டி கொண்டார்கள். இவரது குடும்பத்தை பாலாவி எனும் இடத்தில் இவர் தவற விட்டு விட்டார். இவர் மாட்டி கொண்ட சிங்கள ராணுவத்தினரில் 05 பெண் சிப்பாய்களும்.10 க்கு மேற்பட்ட ஆண் சிப்பாய்களும் இருந்தனராம். ஆனால் இவர்கள் 04 பேர். இவர்கள் பிடிபட்ட நேரம் முள்ளிவாய்கால் தவிர மிகுதி எல்லா இடமும் ராணுவத்தினர் வசம் இருந்தது. இவர்கள் மாட்டி கொண்ட சிங்கள ராணுவத்தினரும் தம் படைப் பிரிவை தவற விட்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது.


இதுவும்தான்......
என்றாலும் அவர்கள் இவர்களை துன்புறுத்தவில்லை (ஆகா றொம்ப ஆச்சரியமா இருக்கல்ல) .தேவையான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்தனர். இவர்கள் மாட்டி கொண்ட இடம் காடு என்பதால் ஊர் எல்லை தெரியவில்லை எல்லோருக்கும் புதிய இடமாக தெரிந்தது.கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் அவர்களது கட்டுப்பாட்டில் பேணியில் அடைக்கப்பட்ட மீன் துண்டுகளை உண்டு வந்தார்கள். இதில் அஸங்க எனும் சிப்பாய் உருவர் அந்த அக்காவிடம் மிகுந்த கரிசனையாக நடந்து கொண்டாராம். (காதலாம் - கல்லுக்குள்ளும் ஈரம் உண்டுதான்)போக போக அந்த அக்காவுக்கும் அவர் மேல் காதல் கொண்டாராம்(பாருங்கப்பா அங்க நாடே இரத்த வெள்ளத்தில் மிதக்கிற நேரம்...). இதற்கு அங்க இருந்தவங்களெல்லாம் உதவிகரம் நீட்டினார்களாம்..மொழியே புரியாத நிலையில் காதல் அப்பப்பா(காதலுக்கு மொழி தேவயில்லதானே) அதன் பிறகு அந்த அக்கா அவங்கட தோழகள் உட்பட 04 பேரையும் புணர் வாழ்வு நிலையம் சேர்த்தவரும் அவர்தானாம்.(எப்படி சேர்தார் என்று அந்த அக்கா சொல்லமாட்டெங்கிறா).

இப்பவும் அஸங்க நினைப்புதான் அந்த அக்காவுக்கு அஸங்க மாட்டர் வீட்டில தெரிஞசா, எல்லாரும் உச்சி திறந்து ஊறுகாய் போடுவினமாம். பட் இதுல என்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்பவும் ரெண்டு பேருக்கும் தொடுசல் இருக்காம். அக்கா பாவம் ஆகா ஓன்று மறந்துட்டன். அந்த அக்காவுக்கு பெயர் சாம்ளா. காதல் கனிய வாழ்த்துக்கள்.

23 கருத்துகள்:

 1. யுத்த களத்தில் நடந்த உங்களுக்கு தெரிந்தவரின் காதல் கதையை எழுதியுள்ளீர்கள்.சுவரசியமாக இருந்தது.
  ஆனால் அதற்குள் ஏன் இப்படி ஒரு விசமம்?

  என்றாலும் அவர்கள் இவர்களை துன்புறுத்தவில்லை (ஆகா றொம்ப ஆச்சரியமா இருக்கல்ல) .தேவையான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்தனர்.

  இந்தியாவில் தமிழகத்தில் தான் இது ஆச்சரியம். எனது உறவினர்கள் உட்பட எனக்கு தெரிந்த பலரை சிங்கள ராணுவத்தினர் தான் புலிகளிடம் இருந்து காப்பாற்றினார்கள்.

  பதிலளிநீக்கு
 2. போர்க்களத்துலயும் கூட பூப் பூக்கும்னு இப்பத்தான் தெரியுது எஸ்தர். இதை ஒரு சிறுகதையா எழுதினா நல்லாவே வரும். ட்ரை பண்ணிப் பாரும்மா...

  பதிலளிநீக்கு
 3. என்னுடைய
  அன்பு வாழ்த்துக்களும் சகோதரி..

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் கூறியது சரிதான் பலேனோ. நானும் இந்த விடயத்தை முதலில் கேட்டு ஆச்சரியப்பட்டேன் அதனால் அந்த வவிசமமான சொற்களை உபயோகித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி நிரூ காதல் எந்த வேளையும் வரும் நான் வரும் வாரம் இதை சிறுகதையாக எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. காதல் எங்கும் பிறக்கும் குழந்தை அல்லவா அருமையான நிகழ்வு சகோ .

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் எஸ்தர்....வந்தேன் வந்தேன்.எப்போதும் உங்களைக் கண்டிருக்கிறேன் வரமுயற்சிக்கவில்லை.எல்லாம் நேரப்பிரச்சனைதான் தோழி.இனி அடிக்கடி சந்திக்கலாம் !

  உங்களிடமும் ஊர் ஞாபகங்கள் கனக்க இருக்கும்போல இருக்கே.காதல் மொழி தாண்டும் இனம் தாண்டும் என்பதுபோலப் போர்தாண்டி....!

  பதிலளிநீக்கு
 8. ஆம் சசி அக்கா காதல் எங்கும் பிறக்கும் குழந்தை இக்கதை கேட்ட மாத்திரத்தில்தான் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 9. ஆகா ஹேமா அக்கா வருக் வருக பெரு மகிழ்வுடன் வரவேற்கிறேன் நொம்பவே இருக்கு ஞாபகங்கள் இன்னும் பகிரவில்லை விரைவில் இடம் பெறும்.

  பதிலளிநீக்கு
 10. என் வாழ்த்துக்களும்...உங்கள் ப்ரிய சாம்ளா அக்காவுக்கு...

  பதிலளிநீக்கு
 11. hahhahaha நான் செல்லிடுறன் ரெவரி அண்ணா....

  பதிலளிநீக்கு
 12. வந்தாச்சு,,,, தளத்தை தொடர்ந்தாச்சு...
  காதல் கதையையும் படிச்சாச்சு

  பதிலளிநீக்கு
 13. உங்கள் கூகிள் ப்ளஸ் பக்கத்திற்கு முன்னமே வந்துள்ளேன். அதில் உங்கள் தளத்தை தேடியும் காணாததால் பிறகு வர முயற்சிக்கவில்லை சகோ...

  பதிலளிநீக்கு
 14. hahaha வாங்கோ பிரகாஷ் அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறேன். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 15. பார்ரா....!யுத்த களத்திலும் ஒரு முத்த சத்தம்!

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் எஸ்தர் ..நலமா ...


  காதல் கதையா ..ஹும் ...

  பதிலளிநீக்கு
 17. காதல் மொழி தாண்டும் இனம் தாண்டும் என்பதுபோலப் போர்தாண்டி....!//

  அக்காள் சொன்ன சரியாத் தான் இருக்கும்

  பதிலளிநீக்கு
 18. ஆம் சுரேஸ் இண்ணா யுத்தத்திலும் முத்தம் இனிமையன்றோ..

  பதிலளிநீக்கு
 19. ஆம் கலை நான் மிக்க நலம் நீங்கள் எப்படி?? வருகைக்கு நன்றி....

  பதிலளிநீக்கு