சனி, 21 ஏப்ரல், 2012

அமைதி இழந்த ஆத்மாவின் கதறல்

நன்றி கூகிள்
அமைதி தேடும் என்
ஆன்மாவின் கதறல்
நிம்மதி வருமோ என
ஏங்கும் என் நெஞசம் - என்
வாழ்கை ஓர் சிறுகதை - அதில்
சோகம் ஓர் தொடர் கதை
எனக்கிரங்குவார் யாருமில்லையோ??

பகலில் வெம்மை போல்
சுடு மொழிகள் எனை வாட்டுகின்றது.
இரவில் நிசப்தமாய் பயம்
எனை அலற வைக்கிறது
என் கைகள் தழர்ந்தன.
என் கால்கள் வலுவிழந்தன.
இத்துயரை விட்டு நீங்க வழியில்லையோ

வசந்தம் என் வாழ்வைவிட்டு போனது
சோகம் எனை துரத்துகின்றது - என்
நண்பரும் என்னை பிரிந்தனர் என்
உறவுகளும் என்னை பகைத்தனர்
என்னை புரிவார் யாரும்
இல்லையோ இவ்வுலகில்...........

13 கருத்துகள்:

 1. வேதனையை வெளிப்படுத்தும்
  கற்பனைப் பாடல் அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. My Goodness! என்னாச்சு எஸ்தர்? ஏனிந்த சோகம்? உன் உணர்வுகளைப் புரிந்து ஆறுதல் தர என்போல பல அன்புள்ளங்கள் உண்டே எஸ்தர்? ஒருவேளை கற்பனைக் கதாபாத்திரத்திற்காய் உருகிய சோகமா இது?

  பதிலளிநீக்கு
 3. எஸ்தர்....என்ன இது.எங்கள் சந்தோஷங்கள் எங்களுக்குள்தான்.நாங்கள்தான் அதை உருவாக்க முயற்சிக்கவேணும்.இப்படி மனம் சோர்ந்தால் விழுந்துவிடுவோம் தோழி.தைரியமாய் இருங்கள் முதலில் !

  பதிலளிநீக்கு
 4. காதலின் தவிப்பும் உறவுகளின் தாக்குதலும் புரியாத பெண்மையின் புலம்பல் கவிதை.

  பதிலளிநீக்கு
 5. நாட்டில் பல அவலம் காதலைமட்டும் பாடாமல் பேரோளி சமுகத்தையும் பாடு பொருளாக கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு
 6. இரவு வணக்கம் எஸ்தர் சபி!குமுறல்களுக்கு ஒரு நாள் விடிவு வரும் சகோதரி!!!!

  பதிலளிநீக்கு
 7. இது கற்பனை அல்ல நிரூ என் கடந்கால வாழ்வின் அவலத்தின் போது என் நாட்குறிப்பில் வரைந்த கவி இது அதை இப்போததான் வெளியிட்டேன் .....

  பதிலளிநீக்கு
 8. நன்றி ஹேமா அக்கா தங்கள் ஆறுதல் வசனம் என்னை பலப்படுத்திற்று...

  பதிலளிநீக்கு
 9. இது காதலின் தவிப்பல்ல நேசா அண்ணா. தன்னையும் சமூகம் ஏற்று கொள்ளுமா என ஏங்கிய ஒரு திருபெண்ணின் தவிப்பு

  பதிலளிநீக்கு
 10. வாங்க யோகா ஜயா உங்களை என் தளத்திற்கு வரவேற்று நிற்கிறேன். விடிவுக்காய் காத்திருப்பேன் கருத்துக்கு மிக்க நன்றி ஜயா

  பதிலளிநீக்கு
 11. வேதனைகளை வார்த்தையாக்கி வடித்துள்ளீர்கள்,சோகம் சுகமாகும் நாள் மிக அருகில் என்று எதிர்பாருங்கள்,கவலைகள் பறந்தோடும்...

  பதிலளிநீக்கு