புதன், 25 ஏப்ரல், 2012

மரமே மரமே நீயின்றி நாங்களில்லை

ஒற்றை காலில் நின்று
எமக்காய் தபம் புரிகிறாய்
நிழல் தர
உன்னை போல் பிறரன்பு
கொண்டவரை
மானிடரில் நான் காணவில்லையே

தொட்டிலும் உன்னாலே
பாடையும் உன்னாலே
மனித வாழ்கையில் உன்னை
பிரித்து விட முடியாதே

நகர மயமாக்கல் எனும் போர்வையில்
உன்னை வெட்டி சாய்கின்றனரே
இந்த நெறி கெட்ட மானிடர்
உன் பலன் அறியாது.

காற்றும் உன்னாலே
மழையும் உன்னாலே
மருந்தும் உன்னாலே
நாம் உண்ணும் உணவும் உன்னாலே

உன்னில் பயன்படா உறுப்புக்கள்
உள்ளனவோ பிற உயிர்க்கு
உன் இலை முதல் விதை வரை
எல்லாம் எமக்காகவன்றோ

உயிர் எடுக்கும் நஞ்சையும்
நீ கொண்டுள்ளாய்
உயிர் காக்கும் மருந்தையும்
நீ கொண்டுள்ளாய் - தேர்வு
செய்வது மானிடரின் பொறுப்பன்றோ

உன்னை கொன்று குவித்து
மானிடர் தமக்கே தாம்
கேடு விளைவிக்கின்றனர்
நீயின்றி அவர்கள் இல்லை என்
அறியாது

மரமே உனக்கு தெரியுமோ
எனக்கு தெரியாது
மரமே மரமே நீயின்றி
நாங்களில்லை

20 கருத்துகள்:

 1. // மரமே உனக்கு தெரியுமோ
  எனக்கு தெரியாது
  மரமே மரமே நீயின்றி
  நாங்களில்லை//

  சிந்தனைச் செறிவு மிக்க கவிதை! மனித சமுதாயம் உணரவேண்டிய கவிதை!அருமை!
  மரம் மனிதனுக்குக் கடவுள் தந்த வரம்!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. நன்றி ஜயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. Sir this is Vijay In & Out Chennai nra peyaril oru fortnightly news paper nadathi kondu irukiren , viraivil wonawill nra peyaril oru webmagazine arambikka ullen , atharkku ungal pangalippu kidaithal migavum santhosa paduven , ennai thodarbu kolla vijay@wonawill.com allathu mobile 8122220258 nantri

  பதிலளிநீக்கு
 4. உன்னில் பயன்படா உறுப்புக்கள்
  உள்ளனவோ பிற உயிர்க்கு
  உன் இலை முதல் விதை வரை
  எல்லாம் எமக்காகவன்றோ//உன்னத வரிகள் சகோ வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 5. மரமே உனக்கு தெரியுமோ
  எனக்கு தெரியாது
  மரமே மரமே நீயின்றி
  நாங்களில்லை//

  ரொம்ப சுப்பரா இருக்கு எஸ்தர் ..அழகா எழுதுரிங்க நீங்க

  பதிலளிநீக்கு
 6. நன்றி கருவாச்சி தங்கள் வருகைக்கு....

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதை மிக அருமை .சில வருடமுன் ஒரு இடத்தில
  தன் கடைக்கு முன் இடையூரா இருக்கு என்று ஒரு மகா பரதேசி கொஞ்சம் கொஞ்சமா ஆசிட் ஊற்றியே பெரிய மரத்தை கொன்று போட்டது .இந்த கவிதை படித்ததும் அந்த நினைவு வந்தது .நன்றி கெட்ட மானிடர்கள் .

  பதிலளிநீக்கு
 8. இயற்கையை என்றும் வணங்குவோம் நன்றியோடு.மனிதரை விட உணர்வாலும் உயர்ந்தவர்கள் !

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஏஞ்ஞலின் அக்கா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  பதிலளிநீக்கு
 10. நன்றி ஹேமா அக்கா. எப்படி இருக்கிங்க?ஹேமா அக்கா ஊர் என்ன சொல்லுது?

  பதிலளிநீக்கு
 11. ஆளுக்கு ஒரு மரம் நட்டால் போதும்...எல்லாரும் பிழைத்துக்கொள்ளலாம்..

  நல்ல சிந்தனை...நல்ல ஆக்கம்..எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 12. நன்றி ரெவரி அண்ணா தங்கள் கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 13. எஸ்தர்...நான் நல்ல சுகம்.சுவிஸ்ம் சுகம்.அழகு.அமைதி.எல்லாமே இருந்தாலும் எங்கட ஊர்போல
  வருமோ !

  பதிலளிநீக்கு
 14. madam , ungal padaippugal enathu vijay@wonawill.com entra id kku anuppa mudiyumaaa, plz viravil arambikka virukkum wonawill entra online webmagizine kku , plz help me out sir

  பதிலளிநீக்கு
 15. மரத்தின் பெருமையை மாண்போடு சொல்லும் சிறப்பான கவிதை சிந்தனைமிக்கதும் சிறப்பியல்பும் உண்டு மரத்திற்கு .

  பதிலளிநீக்கு
 16. மரத்தை நினைத்து பெருமை கொள்ளவேண்டிய மானிடர் மரத்தை அழிப்பது தமக்கு குழிபறிப்பதற்குச் சமன்!

  பதிலளிநீக்கு