வெள்ளி, 27 ஏப்ரல், 2012

என்னை வாழ விடு

உன் காதல் நாடகம் போதும்
என்னை விட்டு விலகி விடு
காதலே வேண்டாம்
என்றிருந்த நெஞசில் காதலை
நீ விதைத்தாய்
விருட்ச்சமாய் அது பிரகாசிக்கும்
நேரம் விதி என்கிறாய்

நெருப்பை குளிர் நிலவென
நினைத்தேன் - என்
தவறுதான் - ஆசை மொழி
பேசிய உன்னில் அசடு
வழிந்தது என் தவறுதான்...
போதும் இனிமேல் போதும்
என்னை விட்டு விடு வாழவிடு

போ நீ போ
போகும் போது உன்
நினைவுகளையும் எடுத்துச் செல்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்க எனக்கு விருப்மில்லை
காதலின் சுவட்டை மறக்க செய்
நீயே எனக்கோர் பாடம்
நீயே சதிகாரர்க்கு உதாரணம்

போதும் விலகி விடு
என்னும் உன் கதல் வலையில்
சிக்குவேன் என நினைக்காதே
பனி துளி போல் ஆனது
உன் காதல் - ஆனால்
என் காதல் சமுத்திரம் போன்றது.
என்றும் நிலைக்கும் - போதும்
என்னை வாழ விடு

8 கருத்துகள்:

 1. கவிதையின் பின்னுள்ள கதை சோகம். அதனால் கவிதை நன்றாகயிருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

  மூன்றாவது பத்தியில் "விருப்மில்லை" கடைசிப்பத்தியில் காதலுக்குப் பதில் "கதல்". எழுத்துப் பிழைகள் கவன்ம். மற்றபடி நன்றாக எழுத வருகிறது தொடர்ந்து எழுதவும்

  பதிலளிநீக்கு
 2. காதலின் சோகம் மனதைக் கனக்கச் செய்கிறது. சொல்லாடல் அருமை.

  பதிலளிநீக்கு
 3. காதலின் தோல்விதனை தாகமாக கொண்ட கவிதை கண்டு போய்விடவா? என்றால் எஸ்தர்-சபி என்னையும் தொனைந்தவன் பட்டியலில் சேர்த்துவிடுவா!
  காதல் கவிதையில் சோகம் சொல்லும் சுகம் இருக்கு சமுத்திரம் வற்றாது பனித்துளி பகலவன் வர விலகிவிடும் பொய்க்காதலும் அப்படித்தான். 

  பதிலளிநீக்கு
 4. காதலில் சோகமும் ஒரு சுகம்தான்.சுமையைச் சுமக்கப் பழகுவோம் தோழி !

  பதிலளிநீக்கு
 5. நிச்சயம் அக்கா நன்றி தங்கள் கருத்துக்கு...

  பதிலளிநீக்கு