வியாழன், 3 மே, 2012

சொர்ணக்குயில் சொர்ணலதாவின் வாழ்க்கைப் பாதை (பாகம்-02)

சொர்ணலதா கட்டற்ற இசைக் கழஞ்சியம் பெற்றெடுத்த முத்து. இவரின் ரசிகையாக இருப்பதற்காக நான் பெருமைப் படுகிறேன். இவரை இவர் இறக்கும் 05 மாதங்களுக்கு முன்தான் தெரியும். அதாவது இப்படிப்பட்ட பாடகி ஒருவர் இருக்கிறார் என்று.. இவரின் குரல் ஏற்கனவே எனக்கு பழக்கப் பட்டிருந்தாலும் யார் இவர் என்று யோசித்திருக்கிறேனே தவிர இவரை பற்றி அறிய முன்வரவில்லை இவரின் பெயர் கூட எனக்கு தெரியாது. தேவாலயங்களில் பக்திப்பாடல்கள் பழகும் நேரம் இமையாக எனும் கிறிஸ்தவ ஆல்பத்திலிருந்த மண்ணில் கலந்திடும் மழைத் துளி போல எனும் பாடலை பழகும் நேரம் நாங்கள் ஸ்ருதி மாறி பாடிவிட்டோம். அப்போது பாடலை பழக்கிய அருட்தந்தை ஒருவர் நீங்கள் இந்த பாடலை பாடிய பாடகிக்கே அவமரியாதை செய்து விட்டீர்கள். அவர் எவ்வளவு பெரியவர் தெரியுமா? என்றார். நாங்கள் யார் அவர் என்று கேட்க சொர்ணலதா பற்றி சிறிய விடயங்கள் கூறினார். அப்போதிலிருந்து நான் அவர் ரசிகை. எவ்வளவு பெரிய புகழ் சம்பாரித்த ஆளாக இருந்தும் ஒரு சினி பிரியைக்கு இவரை பற்றி தெரியவில்லை. எவ்வளவு அமைதியானவர் என்று என் உள்ளம் கேட்க ஆரம்பித்து, அவரை பற்றி தேடி படித்து அறிந்து கொண்டேன்.அவர் பாடிய கிறிஸ்தவ பாடல்களாயினும் சரி, சினிமா பாடலகளாயினும் சரி தேடி கேட்க ஆரம்பித்தேன். மெய்மறந்து நின்றேன்.

ஏற்கனவே நான் பதிந்த பதிப்பில் இவரின் ஆரம்ப காலத்தையும், இவரின் விருதுகளையும் பற்றி கூறியிருந்தேன். அது இவரின் சினிமா வாழ்க்கை பற்றிய முன்னோட்டமாக நான் தந்திருந்தேன்.இப்போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து எனக்கு தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

சொர்ணலதா என்றாலே சினிமா வட்டாரத்துக்குள் அமைதி எனும் பெயர் உண்டு. இவரின் சுபாவமே இப்படித்தான். அவ்வளவாக யாரிடமும் பேசிக் கொள்ள மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார்.திருமணம் செய்து கொள்ளாமல் இசைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.கேட்கும் கேள்விக்கு மாத்திரம் பதில், தெரிந்தவர்களை கண்டால் ஒரு புன்சிரிப்பு அவ்வளவுதான். பதிப்பறை (றெக்கோடிங் றுாம்) வந்தாலும் எப்போதும் தான் பாட வேண்டிய பாடல்களை பழகி கொண்டே இருப்பாராம்.

எப்போதும் இவர் முகத்தில் தெரியும் சோகம்  மற்றவர்களை சிந்திக்க வைக்கும். இவருக்கு அப்படி என்ன சோகம்? ஏன் இவர் கவலையாக உள்ளார்? என்ன காரணம் என்றெல்லாம் சிந்திக்க வைத்துள்ளது. இவ்வளவு புகழ் உள்ள இவருக்கு நண்பர்கள் வட்டாரம் மிக மிக அரிது.ஏன் இவர் யாரிடமு்ம் பேசுவது இல்லை, பழகுவது இல்லை என்பது இன்று வரை புரியாத புதிர் இவரின் வாழ்வை ஆராய்ச்சி செய்ய என்னால் முடியுமானால் ஆய்வாளர்களை அழைத்து வருகிறேன்.

இவர் நம்மோடு இன்று இல்லாவிடினும் இவரின் குரல் மூலம் என்றும் நம்மோடு வாழ்வார். சொர்ணலதாவுக்கு விஜய் டி.வி செலுத்திய கண்ணீர் அஞசலி மரியாதை நிகழ்வை இதோ உங்களுக்காக தருகிறேன்.

13 கருத்துகள்:

 1. பல தகவல்களை சொல்லும் பதிவு அருமை சகோ தொடருங்கள் .

  பதிலளிநீக்கு
 2. அன்புத் தங்கையே
  என் மனம்கவர்ந்த இசைப் பாடகி பற்றிய
  பதிவு.. ரசித்துப் படித்தேன்..
  அவரின் குரலை நீண்ட நாட்கள் கேட்க
  நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை...

  அந்த இசைக்குயிலின் குரல் இந்த தமிழ் உலகம்
  இருக்கும் வரை ஒலிக்கும்...

  பதிலளிநீக்கு
 3. ரசித்துப் படித்தேன்...

  பாவம் அவர் எதையும் அனுபவிக்காமல் போனதாய் மனோ சொன்ன போது கஷ்டமாய் இருந்தது எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 4. நிச்சயம் மகேந்திரன் அண்ணா அவரின் குரல் ஓசை ஓயாது...

  பதிலளிநீக்கு
 5. இன்றுதான் உங்கள் வலைத்தளத்துக்கு வர இயன்றது. மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். பல பதிவுகள் பிரமிக்கவைக்கின்றன. இனி தொடர்ந்து வருவேன். பாராட்டுகள் எஸ்தர்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ரெவரி அண்ணா......உங்கள் கருத்துக்கு...

  பதிலளிநீக்கு
 7. நன்றி ரெவரி அண்ணா......உங்கள் கருத்துக்கு...

  பதிலளிநீக்கு
 8. நன்றி கீதா அக்கா உங்களை வரவேற்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடகியின் தொடர்.இப்போதான் முதாலவதையும் தேடி இணைத்துப் படித்தேன் எஸ்தர்.ஒன்று கொடுத்தால் ஒன்று இல்லாமல் போகும் தூரதிஷ்டசாலியாம் அவர்.கலையைக் கொடுத்த கடவுள் குடும்பச் சூழ்நிலையைக் கொடுக்கவில்லைப்போலும்.

  போறாளே போன்னுத்தாயி...மறக்கவே முடியாது.குரலின் நெகிழ்வு...நினைவில் கொண்டு வந்து கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.நன்றி தோழி !

  பதிலளிநீக்கு
 10. நானும் என் தோழியரும் நிறைய முறை அழுது விட்டோம் சொர்ணலதாவை நினைத்து ஹேமா அக்கா.. உங்களையும் சேர்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அவரின் குரல் வசிகம் பிரமிக்க வைக்கும் நான் கொடுத்து வைத்தவன் அவரை நேரில் சந்தித்தேன் கொழும்பு இசைக்கச்சேரியில்! கூடவே ஹரிகரன் என்ன ஆனாலும் சுவர்னலதாவின் பிடித்த பாடல்கள் பல ராஜாவின் இசையில் தான் எனக்கு !ஆனாலும் பூவெல்லாம் உன் வாசம் என் வாழ்க்கைப்பாடல் திருமண் வாழ்த்து தருவாயோ!ம்ம்ம் கேட்டுப் பாருங்கள் புரியும்!

  பதிலளிநீக்கு
 12. உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தனீகள்தான் அண்ணா அவரை நேர்பார்த்ததற்காக.. நான்தான் கொடுத்துவைக்கவில்லை..

  பதிலளிநீக்கு