ஞாயிறு, 6 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 03

சென்ற பதிவில் யாழ்ப்பாணத்திலிருந்து முகமாலைக்கு நடை பயணமாக இடம்பெயர்ந்து சென்ற அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இவை என் 03 வயது (1995) அனுபவங்கள் என்ற படியால் என் அம்மாவின் உதவி கொண்டே சில விடயங்களை எழுதுகிறேன். இதற்காக என் அம்மாவிற்கு எனது நன்றிகள்.

கூடாரங்கள் நிரம்பிய பேணீ மீன்கள்.......ஒரு வேளையாக நடையாக நடந்து போகும் வழிகளிலே கிடைத்தவற்றை சமைத்துண்டு பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்த முகமாலையை வந்தடைந்தோம். வரும் வழியிலே எத்தனை உயிர்கள் எம் கண் முன்னே காவு கொள்ளப்பட்டன. பல இடத்திலிருந்தும் பல்வேறு மக்கள் கூட்டம் முகமாலையில் தஞ்ஞம் அடைந்தன்.

அங்கிருந்த (இப்போது புத்தரின் கோவிலாக மாற்றப்பட்டுள்ள) புனித. பிலோமினா ஆலய வளவிற்குள். பல குடும்பங்கள் கூடாரங்கள் அமைத்தது குடியேறின. பல ஆலமரங்கள் செறிந்து வளர்ந்திருந்ததால். வெய்யிலில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது ஆனால் செல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கவில்லை

அப்போது முகமாலை விடுதலைப் புலிகள் கையில் இருந்தது. அங்கே விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறிதளவே இருந்த படியால் படையெடுத்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர் கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் கைபற்றிய ஆயுதங்களை தவிர. உணவுப் பொருட்களை மக்களின் பாவனைக்காக விட்டு விட்டு வன்னியின் உட்பிரதேசத்திற்கு சென்றனர். அவர்கள் விட்டுச் சென்ற உணவு பொருட்களில் பிஸ்கட்கள், சோயா மீல்ஸ், பேணீ மீன்கள் (ரின் fவிஸ்) போன்றன அடங்கும்.

மக்கள் உணவில்லாது தவித்ததற்கு போதுமான அளவு உணவு கிடைத்தது. என் அப்பா, அக்காமார், எல்லாரும் உணவுப் பொருட்களை சேகரித்து கூடாரங்களில் அடுக்கினர். அதில் அதிகம் சேர்ந்தது பேணீ மின்கள். கிட்டதட்ட அவை எங்களுக்கு மூன்று மாதமளவு போதுமானதாக இருந்தது.

என் அம்மா வழி உறவினர்கள் மாத்திரமே முகமாலையில் எங்களோடு இருந்தனர். ஆனால் என் அப்பா வழி உறவினர்கள் தனங்கிழப்பு மற்றும் நாச்சிக்குடா பகுதிகளில் குடியேறியிருந்தனர். இவை அவ்வளவாக பாதுகாப்பற்ற இடமாக இல்லை. இரு படையினருக்கும் சண்டை முட்டி கொண்ட நேரத்தில் இடையில் சிக்குண்ட இடங்கள் இவையே. இதில் பல உயிர்கள் மாண்டன. எனது அப்பம்மா(அப்பாவின் அம்மா), மாமி (அப்பாவின் தங்கை) , மாமியின் 06 மாத குழந்தை என ஒரு நாளில் என் உறவுகளின் உயிர் காவப்பட்டன. இவை மட்டுமல்ல என்னும் பல எனக்கு அறிமுகமாகாத உயிர்கள் கொல்லப்பட்டன.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய தன்னும் வழியில்லாமல் இருந்த இடத்திலேயே புதைத்து விட்டு எஞ்சி உள்ளவர்கள். தப்பி வன்னியின் உள்ளுக்குள் சென்று காடுகளில் குடியிருப்புகளை அமைத்தனர்.
(படங்கள் - நன்றி கூகிள்)

.......தொடரும்........

6 கருத்துகள்:

 1. என்ன கொடுமை..என்ன கொடுமை.. வாசிக்கும் போதே கண்கள் கலங்குகிறது..

  பதிலளிநீக்கு
 2. வலிகள் மிக்க நாட்கள் அவை ம்ம் தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி மதுமதி அண்ணா தங்கள் கருத்துக்கு..

  பதிலளிநீக்கு
 4. ஹப்பா.. மரணத்தை அருகில இருந்து பாக்கறதும்... இறந்தவர்களை வேற வழியில்லாம அங்கயே புதைச்சுட்டு போறதும்... எவ்வளவு கஷ்ட்ங்கள் பட்டிருக்கீங்க, படிக்கும் போது கண் கலங்கிடுச்சி எஸ்தர்... இந்த அனுபவங்கள் எல்லாம் தெரியாதவங்களுக்கும் தெரிஞ்சாக வேண்டியவைங்கறதால... தொடர்ந்து எழுதுங்க...

  பதிலளிநீக்கு
 5. ம்ம் நன்றி நிரூ தொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் ஆதரவிற்கு நன்றி...

  பதிலளிநீக்கு