ஞாயிறு, 13 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 04

சென்ற பதிவில் 03 மாத காலம் பேணி மீன்கள் உண்டு எம் பசியாற்றிய  விடயங்களை பகிர்ந்து கொண்டேன். இடப் பெயர்வின் போது கேரைதீவு சங்குப்பிட்டி பாலம் யாழ்ப்பாண மக்களால் மறக்க முடியாது. ஏனென்றால் ஏ9 பாதை மூடிய பிறகு கிளாலி கடல் நீரேரி வழியாக வன்னியை அடைய உதவியது இதுவே. இதையும் 1996ல் உடைத்து நாசமாக்கினர்.

1996 யாழ்ப்பாணம் முழுமையாக விடுதலைப் புலிகள் பட்டுப்பாட்டிலிருந்து இலங்கை ராணுவம் கைவசம் வந்தது. அதே ஆண்டிலேயே விடுதலைப் புலிகள் முழுதாக வன்னியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் செல் தாக்குதல்களும், குண்டு வீச்சுகளும் நின்ற பாடில்லை.

பாகாப்பு இடமாக அறிவிக்கப்பட்டிருந்த முகமாலையிலும் குண்டுகள் சரமாரியாக பொழிந்தன. அதற்கு பயந்து முகமாலையிலிருந்த சில குடும்பங்கள் வன்னியின் உட்பகுதிக்குள் அதாவது நாச்சிக்குடா, ஜெய புரம், பாலாவி, முழங்காவில் போன்ற காட்டுப் பகுதிகளுக்குள் இடம் பெயர்ந்து சென்றனர். நாங்களும் அங்கு செல்ல எத்தணிக்கையில் தணங்கிளப்பில் இருந்த எம் உறவினர்கள் என்னும் வந்து சேரவில்லை அதனால் அவர்களை எதிர்பார்த்து பொருட்களையெல்லாம் பொதி செய்து விட்டு அந்த ஆலமர காட்டுக்குள் காத்திருந்தோம். திடீர் என்று நாங்கள் தங்கியிருந்த இடத்தில குண்டுகள் வெடித்தன அவை சுப்பர் சோனி எனும் போர் விமானத்தின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் உடனே எல்லாம் திக்கு திசை தெரியாது ஓடினோம். நான் எப்பவும் என் அக்கா கையில். பாதுகாப்பு கிடங்குகள் பெரிதாக அங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை அப்போது விசாலமாக வளர்ந்திருந்த ஆலமர பொந்துகளுக்குள் மக்கள் நெருக்குப்பட்டு புகுந்தனர்.


அப்போது என் அக்காவும் என்னை துாக்கி கொண்டு அழுது கொண்டே ஒரு பொந்தினுள் புகுந்தாள். எங்களுக்கு முன்பாக இருந்த பொந்தை இலக்கு வைத்து தாக்கினது போல் குண்டுகள் விழுந்து ஆலமரமே பற்றி எரிந்து சாய்ந்தது. என் அக்கா இப்போது பிரான்ஸில் உள்ளால் அவளிடம் தொலை பேசியில் நேற்று இந்த அனுபவத்தை கேட்கும் போதே விம்மி விம்மி அழ தொடங்கி விட்டாள். அவ்வளவு மோசமானதாக அவள் கண்முன் நடந்தது. நானும் அவள் பாவம் பச்சை உடம்புகாரி இப்போதுதான் அவளுக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்திருந்தது. அதனால் அவளை மனங்குழப்பாமல் விட்டுவிட்டேன் அந்தளவுக்கு மனதில் ரணமாய் அமைந்திருந்தது அந்த சம்பவம்.

குண்டுகள் அடிப்பது குறைந்த பிறகு அந்த இடமே அழுகை அங்கலாய்ப்பும் நிறைந்த இடமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் அழுகையின் கூக்குரல்கள்தான் கேட்டன பற்றி எரிந்து கொண்டிருந்த ஆலமரத்தில் மனித ஊனங்கள் சற்று முன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்களின் ஊனம்தான் அது.இதை கண்டு மயங்கிவிழுந்தவர்கள் என் அம்மா, பெரியம்மா சித்தியும் அடங்குவர் உருவேளை நானும் என் அக்காவாக இருக்க கூடுமோ என்று . இதை என் அம்மா கூறும் போதே பலம்பி அழுது விட்டார் மேலும் அவரை கேட்க எனக்கு மனம்வரவில்லை சேர்ந்தே நானும் அழுது விட்டேன்.பின் எல்லாரும் வெளி ஓடிவந்து தன் தன் குடும்பங்களை தேடினர் ஒருவழயாக எங்கள் குடும்பத்தை அடைந்தோம். அப்போது என் பெரியம்மா அக்காவுக்கு நல்ல அடியா்ம். ஒரு இடத்தில இருக்க சொன்னா இருக்காம என்னையும் துாக்கி கொண்டு திரிந்ததற்காகவாம். என்று என் அம்மா சொன்னார்.

03 நாட்கள் மரண பயத்துடன் காத்திருந்த பிறகு. ஒரு வழியாக எம் உறவினர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தனர்............ தொடரும்........

15 கருத்துகள்:

 1. நொடியில் இறந்துபோவதை விட கொடுமையானது மரண பயத்தோடு பல நாள் வாழ்வது ..!

  பதிலளிநீக்கு
 2. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எப்படி அனுபவித்தீர்கள்..வேதனையாய் இருக்கிறது.
  (கட்டுப்பாடு என்பதற்கு பதிலாக பட்டுப்பாடு என்றிருக்கிறது.மாற்றவும்..

  பதிலளிநீக்கு
 3. வாசிக்கக் கஸ்டமா இருக்கு எஸ்தர்.எத்தனை வலிகளைத் தாங்கினோம்.முடிவில்லா வழியில் இப்போ !

  பதிலளிநீக்கு
 4. நன்றி வரலாற்று சுவடு ஆசிரியரே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 5. நன்றி மதுமதி அண்ணா தங்கள் கருத்துக்கு அவசரம் அதனால் பிழை இதோ மாற்றி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ம்ம் நிச்சயம் அக்கா.... தங்கள் கருத்துக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 7. G+ ல் பகிர்ந்துள்ளதை பார்த்து தங்களது வலைப்பூவினை இன்று தான் கண்டுபிடித்தேன்!
  காயங்கள் ஆறிவிட்டாலும் வடுக்கள் மறைவதில்லையே வலிகொண்டு மனதளவில் சிதைத்துகொண்டே தான் இருக்கும்! எத்தனை கொடுமைகள்! படிப்பதற்குள்ளாகவே கனத்துப்போகிறது இதயம்!

  பதிலளிநீக்கு
 8. நன்றி யுவராணி அக்கா தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. கேரதீவு- சங்குப்பிட்டிப்பாதை மறக்கத்தான் முடியுமா! யுத்தகால நினைவுகள் அழியாத ஒன்று. தொடருங்க சகோதரி !

  பதிலளிநீக்கு
 10. படிக்கவே மனம் பதறுகிறது
  நாங்கெலெல்லாம் வெய்யிலின் கொடுமை குறித்து
  ஏ,சி அறையில் இருந்து அங்கலாய்க்கும்
  பித்தலாட்டக்காரர்களாக அல்லவா உள்ளோம்

  பதிலளிநீக்கு
 11. நன்றி ரணமனி அங்கிள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

  பதிலளிநீக்கு
 12. உண்மையில் மரண அச்சத்தோடு நாளும் வாழ்ந்து இன்றும் அந்த துயரை ஈழத்தில் காணும் போது
  உள்ளம் குன்றித்தான் போகிறோம் நாங்கள் ஏதும் செய்ய வில்லையே என ஈழம் வெல்லும்

  பதிலளிநீக்கு
 13. உண்மையில் மரண அச்சத்தோடு நாளும் வாழ்ந்து இன்றும் அந்த துயரை ஈழத்தில் காணும் போது
  உள்ளம் குன்றித்தான் போகிறோம் நாங்கள் ஏதும் செய்ய வில்லையே என ஈழம் வெல்லும்

  பதிலளிநீக்கு