ஞாயிறு, 20 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 05சென்ற வாரம் முகமாலையில் இடம் பெற்ற மிக கொடுமையான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். ஒவ்வொரு ஈழத்தமிழர்களாலும் மறக்க முடியாத வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது இந்த போர்க்கால நினைவுகள்.

இறுகட்ட யுத்தத்தின் முன் முள்ளிவாய்க் கால் என்பது முல்லைத்தீவில் உள்ள சாதாரண ஓர் இடம். ஆனால் இன்று ஈழத்தமிழர் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஓர் நினைவுச் சின்னம்.

இவ்வாறு அமைந்ததுதான் வன்னி எனும் பெரு நிலப்பரப்பும். வெய்யிலும் செம்மண புழுதியும், காடும், பற்றைகளும், கரடு முரடான பாதையுமாக காணப்பட்ட இந்த வன்னி ராச்சியம் ஆரம்ப காலங்களில் எந்த சிங்கள மன்னர்களும் கைப்பற்ற முடியாத அளவுக்கு பலம் வாயந்த ஓர் தமிழர் ராச்சியமாக காணப்பட்டதுஇ

சிங்கார வன்னியன் முதல் கொண்டு பண்டார வன்னியன் வரையான வீரமிக்க தமிழ் மன்னர்கள் கையில் இருந்தது. வன்னி வன்னியர் எனும் பரம்பரையினர் ஆண்டதாலே அப்பெரும் நிலப்பரப்புக்கு வன்னி மா ராச்சியம் எனும் பெயர் சூட்டப்பட்டது. இப்படிப்பட்ட தமிழர் பாரம்பரியம் மிக்க வன்னியே அன்று (1996) ஓட்டு மொத்த ஈழத்தவர்களையும் தாங்கி நின்றது.

முகமாலையில் இருந்து புறப்பட்டு காட்டுப்பாதையூடாக நடை பயணமாக ஜெயபுரம், பாலாவி போன்ற இடங்களை அடைந்தோம் இவை குடியேற்றமற்ற இடங்களாக அப்போது இருந்தன.சுற்றி எங்கனும் காடுகளும் ஈச்சம் பற்றைகளுமாக காணப்பட்டன. நாங்கள் சொந்த பந்தகளாக கிட்டத்தட்ட பதினைந்து குடும்பங்கள் ஜெய புர பகுதியில் குடியேறினோம். அப்பகுதியில் கிடைத்தவற்றை உண்டு இரண்டு நாட்களை கழித்தோம். இங்கு குடியேற்றம் இருப்பதை அறிந்த விடுதலை புலியினர் யுனிசெவ், ஜ.சி.ஆர்.சி போன்ற ஜ.நா நிறுவனங்கள் மூலம் எமக்கான நிவாரப் பொருட்களையும் உலர் ஊணவுப் பொருட்களையும் பெற்றுத்தந்து உதவினர்.

இங்கு குடியேற்றங்கள் இருப்பதை அறிந்த வேறு பல குடும்பங்களும் அங்கு வந்து குடியேற்றங்களை அமைத்து ஜெயபுரம் எனும் கிராமம் உருவானது...

4 கருத்துகள்:

 1. முகமாலையில் இருந்து புறப்பட்டு காட்டுப்பாதையூடாக நடை பயணமாக ஜெயபுரம், பாலாவி போன்ற இடங்களை அடைந்தோம் //
  வழமை போல் தொடர் ...தொடருங்கள் எஸ்தர்...

  பதிலளிநீக்கு
 2. ம்ம்....நடந்த தடங்களில் மீண்டும் தடம் பதித்துப் பார்க்கிறோம்.வலிதான்.ஆனால் வலிக்கவேண்டும் !

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரி,
  நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகிறேன்..
  வலி நிறைந்த நெஞ்சத்தின் விவரிப்பு அடங்கிய
  தொடர்...
  வலிகள் தெரிந்தாலும் நம்பிக்கையும் மனோதிடமும்
  இந்தத் தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை//
  தொடருங்கள்... தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. வலிகளுக்கு வார்த்தை சேர்த்து சுமந்த வடுக்களை வடம் பிடிக்கின்றீர்கள் தொடருங்கள் தொடத்கின்றேன்!

  பதிலளிநீக்கு