ஞாயிறு, 27 மே, 2012

மரித்துப் பிளைத்தவள் 06சென்ற வாரம் ஜெயபுரத்தில் குறியேறிய விதம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இப்பதிவுக்கு ஏன் நான் மரித்துப் பிளைத்தவள் என்று பெயர் வைத்தேன் என்றால். ஒவ்வொரு நிமிடமும் தினம் தினமும் என் ஈழத்து வாழ்வில் மரித்து பிளைத்தவளாகதான் இருந்தே(ா)ன்(ம்).

ஜெயபுரம் விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அவர்களின் ஆயுத பயிர்ச்சிக்கு கட்டாயமாக பங்கு பற்ற வேண்டிய சூழ்நிலை. இளஞர், யுவதியர் எல்லாரும் கட்டாயத்தின் பெயரில் ஆயுத பயிர்ச்சிக்காக அழைக்கப்பட்டு விருப்பமின்றியும், இல்லாமலும் விடுதலை புலிகள் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

பாடசாலைகள் எல்லாம் மூடப்பட்டு கல்வி கூடங்களான பாடசாலைகள் அகதிகள் முகாம்களாக மாறியிருந்தன. கல்விகள் ஒன்றும் கற்பிக்கப்படவில்லை. இதனிடையே, என் பெரியம்மாவின் மகன் என் அண்ணனுக்கு பயங்கர வருத்தும். ஆனால் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேரவும் ஆயுத பயிர்ச்சிக்கு வரவுமு் கட்டாயப்படுத்தினர். அது மட்டுமல்ல என் உறவினர் பலருக்கு காய்ச்சல் வாந்தி பேதி என வருத்தங்கள் ஏற்பட்டன. இதனால் அவர்களுடன் இணைந்து என் பெரியம்மாவும் அண்ணாவை கூட்டிக் கொண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு செல்லலாம் என தீர்மானித்தார். ஆனால் அங்கு போவது சாதரண காரியம் கிடையாது.

கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட படகு மூலம் கிராலி நீரேரி வழியா வெள்ளை கொடியுடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணப்பட்டார்கள். அப்போது கெலிகொப்டர் மூலம் இலங்கை ராணுவம் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது. வெள்ளை கொடி கண்டும் துப்பாக்கி சூடுகள் நிறுத்தப்படவில்லை. எல்ாரும் ஒரே குரலில் ஓஓஓஓ என்ற சத்தத்துடன் அழது புலம்பி வெள்ளை கொடியை துாக்கி காடட்டவே துப்பாக்கி சூடுகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அங்கிருந்த எனது அம்மாவின் சின்னம்மா (எனது அம்மம்மாவின் தங்கை), அவரது மகள் (எனது சித்தி), எனது மாமாவின் மூத்த மகன் என மூன்று பேர் சம்ப இடத்திலேயே உயிர் இழந்தனர். வருத்தமென வைத்திய சாலைக்கு செல்லும் மன்னரே நோயாளிளளை தாக்கிய கொடுமை.... அதுமட்டுமல்லாது அங்கிருந்த எல்லாருக்கும் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.


படகே இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு அழகையுடனும் பயத்துடனும். யாழ்ப்பாணத்தை அடைந்தது..

7 கருத்துகள்:

 1. படத்தில் வரும் சம்பவங்களை காட்டிலும் மோசமாக இருக்கிறது .. :(

  பதிலளிநீக்கு
 2. எனது அம்மாவின் சின்னம்மா (எனது அம்மம்மாவின் தங்கை), அவரது மகள் (எனது சித்தி), எனது மாமாவின் மூத்த மகன் என மூன்று பேர் சம்ப இடத்திலேயே உயிர் இழந்தனர்.// எவ்வளவு கொடூரமான சம்பங்களை சந்தித்து வந்துள்ளீர்கள் நெஞ்சம் கனத்துப்போனது .

  பதிலளிநீக்கு
 3. படகே ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்ததுன்னு நீ ‌சொல்லியிருக்கறதைப் படிக்கறப்பவே கண்ணீர் வந்துடுச்சு எஸ்தர். Really! நேர்ல அனுபவிச்ச உனக்கு என்ன வார்த்தைகளால ஆறுதல் சொல்றதுனனு தெரியாம தவிக்கிறேன். மனசு கனத்துடுச்சு.

  பதிலளிநீக்கு
 4. வேதனை ஒரு புறம் என்றால் வில்லங்கப்படுத்தியது மறுபுறம் ம்ம்ம் தொடருங்கள் எஸ்தர்-சபி! கிலாலியை மறக்கத்தான் முடியுமா???

  பதிலளிநீக்கு
 5. கொடுமைகளைப் பகிர்ந்துகொண்டேயிருக்கிறீர்கள் தோழி.நல்லது ஈரங்களைக் காயவிடவேண்டாம்...அப்பத்தான் ரோஷத்தோடு வாழ வழிவகுக்கலாம் !

  பதிலளிநீக்கு